ஆடி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நாளாக திகழப்படுகிறது. அன்றைய நாளில் பலரும் தங்களுடைய இல்லத்தில் அம்மனுக்காக படையல் இட்டு கூல் காட்சி பிறருக்கு ஊற்றுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இன்னும் சிலருக்கு அந்த பழக்கம் இல்லாமல் இருக்கும். பல அம்மன் ஆலயங்களில் ஆடி ஞாயிற்றுக்கிழமையில் திருவிழா கோலம் போல் இருக்கும். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஞாயிற்றுக்கிழமைகளில் ஆடி மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை எந்த முறையில் அம்மனை வழிபட்டால் புண்ணியங்கள் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஆடி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு
ஒருவர் அனுபவிக்க கூடிய கஷ்டங்கள் அனைத்திற்கும் அவர்கள் செய்த கர்ம வினைகளே காரணமாக திகழ்கிறது. இந்த கர்ம வினைகளை நீக்குவதற்கு தங்களால் இயன்ற அளவிற்கு தான தர்மங்களை செய்ய வேண்டும். இந்த தான தர்மங்களை செய்வதன் மூலம் புண்ணியக்கணக்கு என்பது உயரும். புண்ணியங்கள் அதிகரிக்க அதிகரிக்க கர்ம வினைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். அதனால் யார் ஒருவர் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு புண்ணியம் சேர்ப்பதற்கும் தங்களுடைய பரம்பரைக்கு புண்ணியத்தை சேர்ப்பதற்கும் செய்ய வேண்டிய ஒரு எளிமையான ஆடி ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டை இப்பொழுது பார்ப்போம்.
ஆடி மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை என்பது ஜூலை மாதம் 27ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் ராகுகால எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு மீதம் இருக்கக்கூடிய நேரத்தில் வீட்டில் இருக்கக் கூடிய அம்மனை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய தீபங்களை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த தீபங்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களுடைய விருப்பமான பெண் தெய்வம் எந்த தெய்வமோ அந்த தெய்வத்தை நினைத்து தான் வழிபாடு செய்யப் போகிறோம்.
கண்டிப்பான முறையில் நம்முடைய இஷ்ட தெய்வத்தின் படத்தை நம்முடைய வீட்டில் நாம் வைத்திருப்போம். அந்த படத்திற்கு முன்பாக கூழ் காட்சி வைக்க வேண்டும். கூழ் காய்ச்சல் தெரியாது என்பவர்கள் தயிரை நெய்வேத்தியமாக வைக்கலாம் அல்லது மோரை நெய்வேதியமாக வைக்கலாம் அல்லது மஞ்சள் பூசணிக்காயில் ஏதாவது ஒரு உணவு பொருளை தயார் செய்து, அதை நெய்வேத்தியமாக வைக்கலாம். இயன்றவர்கள் இந்த நான்கு பொருட்களையும் நெய்வேத்தியமாக வைப்பது சிறப்பு. இயலாதவர்கள் இதில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
பிறகு முழுமனதோடு நம்முடைய கர்மவினைகள் தீர வேண்டும் என்றும் நம்முடைய கஷ்டகாலத்திற்கு ஒரு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்றும் முழு மனதோடு வேண்டிக் கொண்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்த பிறகு நாம் நெய்வேத்தியமாக வைத்த பிரசாதத்தை எடுத்து அதில் சிறிதளவு மட்டும் நாம் உண்டு விட்டு மீதம் இருக்கக்கூடிய அனைத்தையும் அருகில் இருக்கக்கூடிய யாருக்காவது தானமாக தர வேண்டும். அதிக அளவில் செய்யும் பட்சத்தில் நிறைய பேருக்கு தானமாக தரலாம். சிறிது அளவு மட்டும் தான் செய்கிறோம் என்றால் அதற்கேற்றார் போல் பிறருக்கு தானமாக கொடுக்க வேண்டும். இப்படி கொடுப்பதன் மூலம் நமக்கு புண்ணியங்கள் உண்டாக்கும்.
இதையும் படிக்கலாமே: வாஸ்து நாள் தீப வழிபாடு
எளிமையான இந்த ஆடி ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டை முழுமனதோடு நம்முடைய விருப்பமான பெண் தெய்வத்தை நினைத்து செய்தால் கண்டிப்பான முறையில் அந்த அம்மனின் அருளால் நம்முடைய கர்ம வினைகள் நீங்குவதோடு புண்ணியங்கள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.