17/07/2023 அமாவாசையோடு வரும் ஆடி முதல் நாள்! நிலை வாசலில் இதை மட்டும் செய்தால் கடன் தீர்ந்து பணம் பெருகும் தெரியுமா?

mari-amman-vasal-kathavu
- Advertisement -

இவ்வருடம் ஆடி மாதம் முதல் நாள் 17/07/2023 திங்கட் கிழமையில் அமாவாசையோடு வருகிறது. ஆடி அமாவாசையுடன் துவங்கக் கூடிய இந்த ஆடி மாதத்தில் முதல் நாள் நிலை வாசலில் இதை செய்தால் கடன்கள் தீர்ந்து, பண வரத்து அதிகரிக்கும் என்று ஆன்மீகம் கூறுகிறது. ஆடி மாதம் முதல் நாள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ஆடி மாதம் வந்துவிட்டாலே அது வழிபாட்டிற்கு உரிய மாதமாகவே ஆகி விடுகிறது. அம்மனுக்கு உகந்த இம்மாதத்தில் சில விஷயங்கள் செய்வது தவிர்க்கப்படுகிறது. மேலும் ஆடி மாதத்தில் பயிரிடப்படும் பயிர்கள் நன்கு செழித்து வளரும். நல்ல மகசூலை கொடுக்கும் என்று விவசாயிகள் நம்பி வருகின்றனர். அதனால் தான் ‘ஆடி பட்டம் தேடி விதை’ என்கிற பழமொழியும் உண்டாயிற்று! ஆடி பதினெட்டாம் நாள் மற்றும் அதற்குப் பிந்தைய நாட்களில் விதை விதைத்தால் மாறி மாறி வரும் மழையால் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

இத்தகைய விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நெற்கதிர் ஒன்றை ஆடி மாதம் முதல் நாள் வைத்து வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் நிலைக்கும். வறுமை ஏற்படாது. தன, தானியத்திற்கு பஞ்சமே இருக்காது. அதிகாலையிலேயே எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டால் வேண்டியது வேண்டியபடி நிறைவேறும். ஆடி முதல் நாள் அமாவாசை பிறப்பதால் அன்றைய நாள் முதலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய விஷயங்களை செய்து விட்டு பின்னர் தான் பூஜைகளை துவங்க வேண்டும்.

ஆடி முதல் நாள் நன்கு வீட்டை எல்லாம் துடைத்து சுத்தம் செய்து பூஜை அறையை அலங்கரித்து முன்னோர்கள் வழிபாடு செய்த பின்பு பசுக்களுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் போன்றவற்றை தானம் கொடுக்க வேண்டும். பின்னர் ஒரு மஞ்சள் துணியில் பாலிதீன் கவர் ஒன்றை வைத்து அதன் மீது கொஞ்சம் கல் உப்பு, கொஞ்சம் மஞ்சள், குங்குமம் தூவி, ஒரு ரூபாய் நாணயம் ஒன்று, விரலி மஞ்சள் ஒன்று ஆகியவற்றை வைத்து ஒரு முடிச்சு போல கட்டிக் கொள்ள வேண்டும். விரலி மஞ்சள் தங்கத்திற்கு இணையானது. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம் மற்றும் திருஷ்டி தோஷங்களை போக்கக்கூடியது. இவை அனைத்தையும் ஒன்றாக கட்டி மஞ்சள் நூலால் முடிந்து இதை நிலை வாசலில் தொங்கவிட வேண்டும்.

- Advertisement -

பின்பு பூஜை அறையில் ஒரு குத்து விளக்கை ஐந்து முக திரியிட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி மகாலட்சுமிக்கு பூஜைகள் செய்ய வேண்டும். அம்மன் சிலைகளை அலங்கரித்து அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து ஆடி முதல் நாளை அவளை வீட்டிற்கு வரவேற்று அவளுடைய பாடல்களையும், மந்திரங்களையும் ஒலிக்க விட்டு அல்லது நீங்கள் ஜெபித்து மனதார வழிபட வேண்டும். இப்படி நிலை வாசலில் தொங்கவிடுவதால் வீட்டிற்கு குலதெய்வ வாசம் நிகழும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே:
நாளை சிவராத்திரியுடன் வரும் சனி பிரதோஷத்தன்று இந்த இரண்டு விஷயங்கள் செய்தால் தீராத பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து செல்வ செழிப்புடன் வாழ்வது உறுதி.

மேலும் அனைத்து தெய்வங்களுடைய ஆசிர்வாதமும் கிடைக்கும். திருஷ்டிகள் நீங்கும். கடன் தீர்ந்து, பணம் பெருகும் என்பது ஐதீகம். இதை அடுத்த அமாவாசை தினத்தில் அவிழ்த்து புதிதாக அனைத்து பொருட்களையும் மாற்றி வைக்கலாம். இதில் இருக்கக்கூடிய நாணயத்தை நீங்கள் பணம் இருக்கும் இடத்தில் வைத்தால் வருமானம் ஆனது பெருகும். ஒவ்வொரு அமாவாசையிலும் இதை புதிதாக மாற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -