சித்திரை அமாவாசையில் செய்ய வேண்டியது.

chitirai amavasai
- Advertisement -

பொதுவாகவே அமாவாசை என்றால் அது முன்னோரின் வழிபாட்டிற்கு உகந்த நாள் அந்த நாளில் நம் வீட்டு முன்னோர்களை வணங்கும் பொழுது நம்முடைய குடும்பம் தலை துவங்கும் என்பது காலம் காலமாக நாம் பின்பற்றி வரும் ஒரு வழக்கம். அந்த வகையில் நாளை வரக் கூடிய அமாவாசை இன்னும் அதிசக்தி வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் அது வரக்கூடிய மாதம்.

சித்திரை மாதம் என்றாலே அதுவும் நமக்கு ஒரு முக்கியமான மாதங்களில் ஒன்று ஏனெனில் சூரிய பகவான் சித்திரை மாதத்தில் தான் தன்னுடைய பயணத்தை ஒவ்வொரு ராசியிலும் துவங்குவார். ஆகையால் தான் பல புகழ் பெற்ற ஆலயங்களில் திருவிழாக்கள் பூஜைகள் போன்றவை இந்த சித்திரை மாதத்தில் நடைபெறுகிறது. அப்படியான இந்த மாதத்தில் வரக் கூடிய பௌர்ணமியும் மிகவும் விசேஷம்.

- Advertisement -

இந்த நாளில் நம்முடைய குடும்பத்தின் செல்வ நலனை பெருக்கிக் கொள்ளவும் முன்னோர்களின் ஆசியும் குலதெய்வத்தின் அருளையும் பெற சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றலாம் என்று சொல்லப்படுகிறது. அவற்றை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

குடும்பம் தழைக்க சித்திரை அமாவாசையில் செய்ய வேண்டியது
நாளைய தினம் அமாவாசையானது காலை 11 மணிக்கு மேல் தான் துவங்குகிறது. ஆகையால் முன்னோர் படையல் இடுபவர்கள் மதியம் 12 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளாக செய்வது சிறந்த நேரமாக சொல்லப்படுகிறது. அன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலை நேரத்தில் கொடுத்து விடுங்கள் இது மிக மிக முக்கியம்.

- Advertisement -

அதே போல் நாளைய தினத்தில் காகத்திற்கு சாதம் வைக்காமல் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் காகம் ஆனது நம் முன்னோர்களாகவும் சனி கிரகத்தின் வாகனமாகவும் கருதப்படுவதால் நாளைய தினம் இதை செய்வது உத்தமம். அத்துடன் நாளைய தினத்தில் அசைவத்தை தவிர்ப்பதும் மிகவும் நல்லது.

இதைத் தவிர்த்து நாளைய தினத்தில் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். குலதெய்வ ஆலயம் செல்ல முடிபவர்கள் அங்கு சென்று செய்தால் நல்லது. முடியாதவர்கள் வீட்டிலேனும் குலதெய்வத்தை நினைத்து எளிமையான ஒரு வழிபாட்டை தவறாமல் செய்து விடுங்கள். இது உங்கள் குலதெய்வத்தின் அருளை முழுவதுமாக பெற்று தரும்.

- Advertisement -

அதே போல் நாளைய தினத்தில் நவகிரகங்களை வழிபடுவதும் சிறந்தது. நாளை சித்திரை அமாவாசை தினத்தில் நவகிரக வழிபாடு நம்முடைய தோஷங்கள் துன்பங்கள் போன்றவற்றை நீக்க வழி தேடி தரும். இவை அனைத்துடன் சேர்த்து நாளைய தினத்தில் யாரேனும் ஒருவருக்காவது உணவு வாங்கி கொடுங்கள். அது உங்கள் குடும்பம் என்றென்றைக்கும் தழைக்க உதவும். அதுவும் உடல் ஊனமுற்றோருக்கு செய்யும் தானமானது சனி கிரகத்தின் அருளையும் சேர்த்து பெற்றுத் தரும்.

இதையும் படிக்கலாமே :செவ்வாய்க்கிழமை மைத்ரேய முகூர்த்த பரிகாரம்

நாளைய இந்த அற்புதமான நாளை தவிர விடாமல் இந்த எளிய வழிபாடுகளையும் தான தர்மங்களையும் செய்து என்றென்றைக்கும் செல்வ செழிப்பாக நிம்மதியாக வாழக்கூடிய ஒரு வாழ்க்கையை நீங்கள் பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -