நாளை ஆடி முதல் ஞாயிறு! குலம் தழைக்க, குடும்பத்தில் இருக்கும் தீராத கஷ்டங்கள் தீர, நாளைய தினம் எந்த தெய்வத்தை நினைத்து எப்படி வழிபாடு செய்வது?

amman
- Advertisement -

பொதுவாகவே ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்குரிய மாதம் தான். இந்த மாதம் முழுவதும் நாம் இறைவழிபாட்டில் நம்முடைய கவனத்தை செலுத்த வேண்டும் என்பதற்காகத் தான் வீட்டில் மற்ற நல்ல விசேஷங்கலை செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த மாதத்தில் திருமணம், புதுவீடு புகுவிழா போன்ற மற்ற சில நல்ல காரியங்களை செய்யமாட்டார்கள். சரி, நாளை வரக்கூடிய ஆடி ஞாயிற்றுக்கிழமை அன்று நம்முடைய வீட்டில் அம்மனை நினைத்து சுலபமான முறையில் எப்படி வழிபாட்டை மேற்கொள்வது என்பதை பற்றியும், குறிப்பாக நாளைய தினம் எந்த அம்மனுக்கு உரியது என்ற ஆன்மீக ரீதியான தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kuzu

ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை என்றாலே அம்மனுக்கு கூழ்வார்த்தல் பண்டிகை தான் நம்முடைய நினைவிற்கு வரும். இந்த ஆடி மாத ஞாயிற்றுக் கிழமையில் அம்மனுக்கு கூழ் காய்ச்சி, அந்தக் கூழை ஏழை எளிய மக்களுக்கு தானமாக கொடுப்பார்கள். ஆடி மாதம் வரக்கூடிய 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் அம்மனுக்கு கூழ் வார்க்கும் திருவிழா எல்லா கோவில்களிலும், வீடுகளிலும் பெரும்பாலும் விமரிசையாக நடத்தப்படும். ஆனால் சூழ்நிலை காரணமாக இந்த வருடமும் கூட்டம் சேர கூடாது என்ற கட்டுப்பாடும் நமக்கு இருக்கின்றது. இதனால் இந்த ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களுடைய வீட்டு பூஜை அறையில் மிக எளிமையான முறையில் கூழ் காய்ச்சி அம்மனுக்கு படைத்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அம்மனை வழிபாடு செய்து கொள்ளலாம். முடிந்தவரை இந்த ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களால் இயன்ற உதவியை இயலாதவர்களுக்கு செய்யுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக ஆடி ஞாயிறு என்றால் அது கன்னி தெய்வத்தை வழிபட கூடிய நாள் என்று சொல்லப்பட்டுள்ளது. நிறைய பேர் வீடுகளில் இந்த வழக்கம் பாரம்பரியமாகவே இருக்கும். ஆடி மாதம் வரக்கூடிய ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில், அந்த வீட்டினுடைய கன்னி தெய்வத்தை மனதார நினைத்து பூஜை செய்வார்கள்.

kamatchi-amman9

முதலில் இந்த கன்னி தெய்வம் என்றால் யார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்து வளர்ந்து ஏதோ ஒரு காரணத்தினால் சிறுவயதிலேயே இறந்திருக்கும். அதாவது திருமணம் ஆகாத கன்னிப்பெண், இயற்கையான முறையில் மரணம் அடையாமல், அந்தப் பெண்ணினுடைய ஆயுசு முடிவதற்கு முன்பாகவே இறக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஒரு குடும்பத்தில் சிறுவயதிலேயே கன்னிப் பெண்ணாக, எதிர்பாராமல் இருந்த அந்தப் பெண்ணை தான், அந்த குடும்பத்தினுடைய கன்னி தெய்வமாக நினைத்து வழிபாடு செய்வார்கள். ‘சில வீடுகளில் திருமணம் நடப்பதற்கு முன்பு ‘கன்னியா பூஜை’ போடும் பழக்கம் வழக்கத்தில் இருக்கும்.

- Advertisement -

ஒரு குடும்பம் அடுத்தடுத்த தலைமுறைகளை எடுத்து, வாழையடி வாழையாக தழைத்து வாழ வேண்டுமென்றால் அந்த குடும்பத்திற்கு இந்த கன்னி தெய்வத்தின் ஆசிர்வாதம் மிக மிக முக்கியம். உங்களுடைய வீட்டிலும் உங்களுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ இப்படி யாராவது இறந்திருந்தால் அந்த தெய்வத்தை மனதார நினைத்து இந்த ஆடி மாத ஞாயிற்றுக் கிழமையில் வழிபாடு செய்யலாம். மிக மிக சுலபமான முறையில் கன்னி தெய்வத்தை நினைத்து வீட்டில் எப்படி பூஜை செய்வது.

kamatchi-amman4

எப்போதும்போல பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு, ஒரு சர்க்கரை பொங்கலை நிவேதனமாக வைத்து, கன்னிப் பெண்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை பூஜை அறையில் வைத்து, வாசனை மிகுந்த பூக்களை வாங்கி உங்கள் பூஜை அறையில் இருக்கும் அம்மனின் திருவுருவ படத்திற்கு அலங்காரம் செய்து, உங்கள் குடும்பத்தின் கன்னி தெய்வத்தை மனதார நினைத்து தீப தூப ஆராதனைகள் செய்து, இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

poojai

இந்த பூஜை செய்யும் போது சிறு குழந்தைகள் பயன்படுத்தும் பொட்டு, வளையல், ரிப்பன், பாவாடை சட்டை, மஞ்சல் குங்குமம், போன்ற பொருட்களை படையலாக வைத்து வழிபாடு செய்வார்கள். இப்படி இந்த பூஜையை நிறைவு செய்த பின்பு, பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்த அந்த பொட்டு வளையல் பாவாடை சட்டையை ஒரு பெண் குழந்தைக்கு தானமாக கொடுக்க வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய பூப்படையாத சிறு பெண் குழந்தை யாராக இருந்தாலும், அந்த குழந்தைக்கு இந்த பொருட்களை தானமாக கொடுத்து விடுங்கள்.

kumari-amman

இந்தப் பூஜையை மனநிறைவோடு இந்த ஆடி ஞாயிறு செய்ய முடியவில்லை என்றாலும், அடுத்து வரக்கூடிய ஏதாவது ஒரு ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து உங்கள் வீட்டு கன்னி தெய்வத்தை வேண்டிக் கொண்டால், உங்கள் குடும்பம் சுபிட்சம் அடையும். உங்கள் வீட்டில் யாருக்காவது திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்களுக்கு நிச்சயம் திருமணம் கைகூடி வரும். யாருக்கேனும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். உங்கள் குலம் வாழையடி வாழையாக தழைத்தோங்கும். உங்கள் வீட்டில் இருக்கும் தீராத கஷ்டங்கள் சீக்கிரமே தீரத் தொடங்கும். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து குறைகளை தீர்த்து வைக்கும் தெய்வம்தான் கன்னி தெய்வம்.

bala-thiripura-sundhari-amman

சரி, எங்களுடைய குடும்பத்தில் இப்படி யாராவது சிறுவயதிலேயே இறந்திருக்கிறார்களா என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் என்ன செய்வது என்று கேட்பவர்களுக்கும் நிச்சயமாக பதில் உண்டு. இந்த ஆடி ஞாயிற்றுக்கிழமை அன்று கன்னி தெய்வங்களான, கன்னியாகுமரி அம்மன், பால திரிபுரசுந்தரி அம்மன் போன்ற அம்மனை நினைத்தும் கூட இந்த கன்னி பூஜையை மேல் சொன்ன முறைப்படி உங்களுடைய வீட்டில் செய்யலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -