- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகண் திருஷ்டி விலக ஆடி ஞாயிறு பரிகாரம்

கண் திருஷ்டி விலக ஆடி ஞாயிறு பரிகாரம்

- Advertisement -

ஒருவர் வாழ்க்கையில் முன்னேற்றம் தடை படுவதற்கு காரணம் அடுத்தவர்களுடைய கண் திருஷ்டி தான். பொல்லாத கண் திருஷ்டி, வாழ்க்கையில் உங்களை புதைக்குழையில் தள்ளிவிடும். நன்றாக போய்க் கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத சங்கடங்கள் கஷ்டங்கள் துயரங்கள் வருகிறது என்றால், அதற்கு ஒரே காரணம் கண் திருஷ்டி மட்டும்தான்.

இதுநாள்வரை நன்றாக இருந்த உங்களுடைய வாழ்க்கை பயணம், திடீரென கடந்த ஒரு சில நாட்களாக பிரச்சனையாகவே போய்க்கொண்டிருக்கிறது என்றால், அந்த பிரச்சினையை சரி செய்வதற்கு இந்த பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும். வேலையில் பிரச்சனை, செய்யும் தொழிலில் பிரச்சனை, பணத்தைக் கொடுத்துவிட்டு ஏமாந்து விட்டீர்கள்.

- Advertisement -

பணத்தை வாங்கிவிட்டு திருப்பி கொடுக்க முடியவில்லை, கடன் தொல்லை, தொழிலில் முதலீடு செய்த பணத்தை மீண்டும் எடுக்க முடியவில்லை. வேலையில் என்னதான் முயற்சி செய்தாலும் பிரமோஷன் கிடைக்கவில்லை, குடும்பத்தில் தினம் தினம் சண்டை சச்சரவு, கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் இல்லை என்ற எந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தாலும் சரி, அந்த பிரச்சனை சரியாக இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

உங்களுக்கு நீங்களே இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். ஒரு வெள்ளை காட்டன் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 3 வர மிளகாய், 3 சமையலுக்கு பயன்படுத்தும் மிளகு, 1 ஸ்பூன் வெண்கடுகு இந்த மூன்று பொருட்களையும் வைத்துவிட்டு சின்ன முடிசாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து, கொள்ளுங்கள்.

- Advertisement -

என்னுடைய வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் சரியாக வேண்டும், முன்னேற்றத்தை தடைப்படுத்தும் கண்திருஷ்டி எதிர்மறை ஆற்றல் என் உடம்பை விட்டு வெளியேற வேண்டும். என்னுடைய ஆரா எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்ற பிரார்த்தனையை வைத்து, கையில் இருக்கும் முடிச்சை ஒரு மண் அகலில் வையுங்கள். ஒரு கட்டி கற்பூரத்தை அதன் மேல் வைத்து, நெருப்பில் இந்த பொருளை சாம்பல் ஆக்கி விட வேண்டும்.

இன்று ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை. இன்று இரவு 9 மணிக்கு மேலாக, இரவு 12 மணிக்குள்ளாக இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பரிகாரத்தை செய்து விட்டு முடிச்சை வீட்டுக்குள்ளே வைத்துக் கொளுத்த கூடாது. நிலை வாசலுக்கு வெளியில் கொண்டு போய் தான் இந்த முடிச்சை எரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த முடிச்சில் இருக்கக்கூடிய மூன்று பொருட்களும் உங்களை சுற்றி இருக்கும் கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றலை எல்லாம் ஈர்த்து நெருப்பில் பொசிக்கிவிடும் என்பதை இந்த பரிகாரத்தில் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய பிள்ளைகள் கல்வியில் ஆர்வம் காட்டவில்லை சரியாகவே படிக்க மாட்டாங்க அப்படின்னா, அம்மா, குழந்தைகளுக்காக இந்த முடிச்சை தயார் செய்து, பிள்ளையின் தலையை சுற்றி நெருப்பில் போட்டால், கல்வியில் இருக்கும் திருஷ்டியும் அகலும்.

இதையும் படிக்கலாமே: கடன் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்க பரிகாரம்

உங்களுடைய பிள்ளைகள் நன்றாக படிக்க தொடங்கும். ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை அம்பாளியை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் வாழ்க்கையில் வரும் தடை கற்கள் எல்லாம் படிக்கற்களாக ஆக மாறும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்