நாளை ஆடி பதினெட்டாம் பெருக்கு – இவற்றை மறக்காமல் செய்து அற்புதமான பலன் பெறுங்கள்

amman

“நீரின்றி அமையாது உலகு” என தண்ணீரின் முக்கியத்துவம் பற்றி வள்ளுவப் பெருந்தகை திருக்குறளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பறைசாற்றியிருக்கிறார். உலகில் மனிதர்கள் தோன்றிய காலம் முதல் வற்றாத ஜீவ நதி ஓடும் நதிக்கரைகளை ஒட்டியே மிகப் புகழ்பெற்ற நாகரிகங்கள் தோன்றியிருக்கின்றன. அந்த அளவிற்கு நதிகள் மனிதர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளது. அதிலும் அனைத்தையுமே தெய்வீகமாக பாவிக்கும் பாரத தேசத்தில் நதிகள் அனைத்தும் தெய்வங்களின் அம்சமாகவே கருதி வழிபடப்படுகின்றன. குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கும் நதிகளில் முக்கியமானதாக கருதப்படுவது காவிரி நதி. அந்த காவிரி நதிக்காக ஆடி மாதம் 18-ஆம் தேதி கொண்டாடப்படும் ஒரு தினம் தான் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு அல்லது ஆடிப்பெருக்கு விழா. இந்த ஆடிப்பெருக்கு விழா அன்று நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும் அதனால் ஏற்படும் அபரிமிதமான பலன்கள் என்ன என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

kaveri cauvery

மாதம் மும்மாரி மழை பெய்த முற்காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் தப்பாமல் ஆடிமாதம் 18 ம் தேதியில் தமிழகத்தில் ஓடுகின்ற முக்கிய நதிகளான காவிரி, பெண்ணை. பொருணை நதிகளில் அளவு கடந்த நீர் பெருக்கு ஏற்பட்டு, மனிதர்களுக்கு உணவளிக்கும் உயரி தொழிலான விவசாயத்திற்கு உதவிகரமாக இருப்பதால் காவிரி உட்பட மூன்று நதிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஒரு விழாவாக ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

பொதுவாக ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றாலே தமிழ்நாட்டில் காவிரி நதி ஓடும் ஊர்களில் வசிக்கும் மக்கள் காவிரி நதிக்கரைக்கு சென்று சித்ரான்னங்கள் படைத்து, தீபாராதனை காட்டி காவிரித்தாயை வழிபடுவர். அதே நேரம் மணமான பெண்கள் காவிரி நதிக் கரையோரம் பூஜை செய்து, தங்களின் தாலிக்கயிற்றை புதிதாக மாற்றிக் கொள்ளும் வழக்கம் பல காலமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.

aadi perukku

இத்தகைய ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவை காவிரி நதிக் கரையோரம் வாழும் மக்கள் மட்டுமே கொண்டாட வேண்டும் என்பதில்லை. நமது வீட்டிலும் எளிமையான முறையில் கொண்டாடலாம். ஆடி 18ம் பெருக்கு தினத்தன்று காலை எழுந்து குளித்து முடித்ததும் ஒரு செம்பு அல்லது வெண்கல கலசத்தில் சிறிது மஞ்சள் தூளை போட்டு, அதில் உங்கள் வீட்டில் இருக்கும் தண்ணீரை ஊற்றி நிரப்பியதும் அந்த மஞ்சள் தண்ணீருடன் நன்கு கலந்துவிடும். பிறகு அந்த கலசத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமப் பொட்டிட்டு, உங்கள் பூஜையறையில் ஒரு பீடத்தின் மீது வைத்து, அந்த பீடத்திற்கு இரு புறமும், கலசத்திற்கு இருபுறமும் குத்துவிளக்கு அல்லது அகல் விளக்குகளில் தீபமேற்ற வேண்டும். பிறகு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் வைத்து, கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, நர்மதா, தாமிரபரணி போன்ற அனைத்து ஜீவ நதிகளையும் மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் ஞான குருவாக இருப்பவரும், காவிரி, தாமிரபரணி போன்ற ஜீவ நதிகளை தமிழகத்திற்குள் பாயச் செய்த சித்தர்களின் தலைமை சித்தரான அகத்தியர் பெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

agathiyar

வழிபாடு முடிந்ததும் கலசத்தில் வைத்த நீரை உங்கள் வீட்டில் இருக்கும் மரம், செடிகளுக்கு ஊற்றி விட்டு நைவேத்திய சர்க்கரைப் பொங்கலை அனைவருக்கும் பிரசாதமாக வழங்கி, நீங்களும் சாப்பிட வேண்டும். பொதுவாக ஆடி மாதம் என்றாலே சுபகாரியங்கள் செய்வதை பலரும் தவிர்த்து விடுகின்றனர். ஆனால் முற்காலத்தில் இந்த தினத்தில் தான் தமிழ் மக்கள் தங்களின் குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

Hindu Marriage

ஆடி மாதத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்யாவிட்டாலும், திருமணத்திற்கான வரன் தேடத் தொடங்குவது போன்ற முயற்சிகளை இந்த தினத்தில் தொடங்கலாம். வியாபாரங்களில் இருப்பவர்கள் புதிய கணக்கை எழுத ஆரம்பிக்கலாம். புதிய நிலம் வாங்குதல், பத்திரப் பதிவு செய்தல் போன்றவற்றை இந்த தினங்களில் மேற்கொள்ளலாம். இல்லற வாசிகள் தங்கள் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இந்த தினத்தில் வாங்கலாம். ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று புதிய காரியங்கள் செயல்களில் ஈடுபட்டால் அவை பன்மடங்கு பெருகி நற்பலன்களை தரும் என்பது ஐதீகம். இந்த தினத்தில் எந்த புதிய விடயங்களை செய்வதாக இருந்தாலும் உங்கள் குலதெய்வத்தை வணங்கிவிட்டு பிறகு அந்த செயல்களில் ஈடுபடுவது நன்மை பயக்கும்.

இதையும் படிக்கலாமே:
கேது கிரக தோஷம் போக்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Aadi pathinettam perukku 2019 in Tamil. It is also called as Aadi matham in Tamil or Aadi 18 sirappu in Tamil or Aadi 18 vishesham in Tamil or Aadi pathinettu in Tamil.