உங்களுக்கு கேது கிரகத்தால் ஏற்படும் தோஷத்தை போக்கும் எளிய பரிகாரம்

ketu

நவக்கிரகங்களில் பாபக் கிரகங்கள், சுப கிரகங்கள் என இரண்டு பிரிவாக கிரகங்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. பாவக் கிரகங்கள் என்று கூறினாலும் அந்த கிரகங்கள் அனைத்துமே எப்போதும் தீமையான பலன்களை தருவதில்லை எனினும் இந்த பாபகிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையில் இருந்தால் மிகவும் சிரமங்களை வாழ்வில் சந்திக்க வேண்டிய நிலை இருக்கும். அந்த கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் நிழல் கிரகங்களான ராகு – கேது கிரகங்களில் கேது கிரகம் தாய்வழி பாட்டனார் பற்றி கூறும் கிரகமாக இருக்கிறது. மேலும் ஒரு மனிதனுக்கு முக்தியை அளிக்கவல்ல கிரகமாகவும் இது இருக்கிறது. அத்தகைய கேது கிரகத்தால் ஜாதகருக்கு ஏற்படும் குழந்தை பாக்கியம் இல்லாத நிலையை போக்குவதற்கான ஒரு எளிய பரிகார முறையை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Astrology ketu

ஒருவரின் ஜாதகத்தில் கேது பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டிருக்குமானால் அந்த ஜாதகத்திற்குரிய நபர் ஆண் அல்லது பெண் யாராக இருந்தாலும் முற்பிறவியில் மலைப்பாம்புகளை கொன்றதாலும், கோயில் பாம்புகளை அடித்து கொன்றதாலும், குட்டி பாம்புகளை அடித்து கொன்றதாலும் இறந்த பாம்புகளின் சாபத்தை பெற்று இப்பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லாத நிலை உண்டாகியிருப்பதை அறியலாம். ஜாதகத்தில் கேது கிரகம் காரணமாக தான் புத்திர தோஷம் ஏற்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்த பிறகு கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்து கேது பகவானால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெறலாம்.

200 கிராம் கொள்ளு எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை சமபாகமாக பிரித்து, ஒரு சிவப்பு நிற துணியை ஒன்பது துண்டுகளாக வெட்டியெடுத்து, பிரித்து வைத்த ஒவ்வொரு பங்கு உளுந்தையும் ஒன்பது துணிகளில் போட்டு முடிந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த ஒன்பது துணி முடிப்புகளையும் உங்கள் வீட்டு பூஜையறையில் சாமி படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். அத்துடன் பிரார்த்தனை நிறைவேறினால் குலதெய்வத்திற்கு செலுத்த வேண்டிய காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் தனியாக எடுத்து வைத்து விட வேண்டும். பூஜையறையில் இருக்கும் 9 முடிப்புகளில் ஒரு முடிப்பை இரவில் கணவன் – மனைவி இருவரும் தங்கள் படுக்கையில், இருவருக்கும் சேர்த்து ஒரே தலையணைக்கு அடியில் வைத்து கொண்டு உறங்க வேண்டும்.

ketu

மறுநாள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மனைவி கை, கால், முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைத்த அந்த துணி முடிப்பை கையில் வைத்துக் கொண்டு, கேது பகவானை மனதில் நினைத்து ” கேது பகவானே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும்” என ஒன்பது முறை மனதார துதித்து வழிபட வேண்டும்.

- Advertisement -

Baby

இப்படி வழிபட்டு முடிந்ததும் அந்த முடிச்சை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். இதே போல் மீதமுள்ள முடிச்சுகளை வைத்து ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்ய வேண்டும். பத்தாவது நாள் காலையில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஒன்பது கொள்ளு தானியங்கள் முடிந்த 9 துணி பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு, ஓடும் ஆற்று நீர் அல்லது கண்மாயில் யாரும் பார்க்காத போது போட்டு விட்டு வர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்கு கேது கிரகத்தால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்குகிறது. இந்தப் பரிகாரம் செய்த 45 நாட்களுக்கு பிறகு புத்திர தோஷம் நீங்கி மனைவி வயிற்றில் கரு உருவாக கேது பகவான் அருள் புரிவார்.

இதையும் படிக்கலாமே:
ஆயில்யம் நட்சத்திர தோஷ பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ketu putra dosha pariharam in Tamil. It is also called as Ketu graha dosha in Tamil or Kulanthai bakkiyam pera in Tamil or Putra dosham neenga in Tamil or Ketu bhagavan in Tamil.