ஆடிப்பெருக்கு அன்று இந்த இரண்டு பொருட்களை மட்டும் மறக்காமல் வாங்கி விடுங்கள். வீட்டில் பொன் பொருள் எல்லாம் வாங்கிக் குவிக்க கூடிய யோகங்கள் தானாக வந்து சேரும்.

amman thali saradau
- Advertisement -

பொதுவாக இந்த ஆடி மாதத்தில் எந்த ஒரு விசேஷமும் செய்யக் கூடாது என்ற கருத்து இருந்தாலும், இந்த ஆடிப்பெருக்கு அன்று நல்ல காரியங்களை செய்வது சிறப்பு என்றும் சொல்லப்படுகிறது. இந்த‌ ஆடிப்பெருக்கு நாளில் நாம் செய்யத் தொடங்கும் எந்த செயலும் அல்லது வாங்கும் எந்த பொருளும் பல மடங்கு பெருகும் என்பதாலே இந்த நாள் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் வாங்கும் ஒரு சில பொருட்களால் நம் குடும்பத்தில் பண வரவிற்கு தடை இல்லாமல் குடும்பம் எப்போதும் சந்தோஷமாகவும், லட்சுமி கடாட்சத்துடனும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. நாளை மறுநாள் வியாழக்கிழமை ( 3.8.23 ) அன்று ஆடிப் பெருக்கு வருகிறது. அந்த நாளில் நாம் செய்ய வேண்டியதை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆடிப்பெருக்கு அன்று முக்கியமான வழிபாடாக கருதப்படுவது காவிரி வழிபாடு தான். விவசாயிகள் தங்கள் விளைச்சலுக்கு ஆதாரமான இந்த நீர் நிலைக்கு நன்றி சொல்லும் விதமாக இந்த வழிபாடு உள்ளது. இது பெரும்பாலும் கிராமப்புறங்களில் காவேரி ஆற்றை சுற்றி உள்ள வட்டாரங்களில் மிகவும் விசேஷமாக செய்வார்கள். நகரத்தில் உள்ள நம்மால் அப்படி செய்ய முடியாது. இதே பூஜையை நாம் வீட்டிலும் கூட செய்யலாம். அதையும் எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பூஜையை நம் வீட்டில் ஒரு சொம்பை எடுத்து அதை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அதில் சுத்தமான நீரை ஊற்றி அதில் கொஞ்சமாக மஞ்சள் போட்டு அதன் மேல் கொஞ்சம் பூவையும் வைத்து அந்த சொம்பை பூஜை அறையில் வைத்து உங்களுக்கு விருப்பமான பழங்களை வைத்து வழிபடலாம். இதே வழிபாட்டை ஊரில் பெண்கள் கழுத்தில் மாற்றிக் கொள்ளக் கூடிய தாலி சரடை வைத்தும் வழிபடுவார்கள் உங்களுக்கு அந்த வழக்கங்கள் இருந்தால் அதையும் செய்யலாம்.

இந்த வழிபாட்டை செய்வதோடு நாம் அன்று வாங்க வேண்டிய முக்கியமான பொருள் மஞ்சள் உப்பு இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி உங்கள் வழிபாட்டில் மறக்காமல் வைத்து விடுங்கள். ஒரு வீட்டில் முதலில் வர வேண்டியது மங்களமும் ஐஸ்வர்யமும் தான். இவை இரண்டையும் நாம் வாங்கி விட்டாலே மற்ற அனைத்தும் தானாக நம்மை தேடி வந்து விடும். வாய்ப்பு உள்ளவர்கள் இந்த நாளில் புதிதாக பொருள்கள் நகை வாங்குபவர்கள் வாங்கலாம் அல்லது புதிதாக ஏதேனும் விஷயத்தை தொடங்குவதாக இருந்தாலும் செய்யலாம் சிறப்பாக அமையும்.

- Advertisement -

இந்த நாளில் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் பாரம்பரியமாகவே செய்து வருகிறோம். அது பெண்கள் தாலி சரடை மாற்றிக் கொள்வது. தாலி சரடை மாற்றிக் கொள்வது என்றால் எல்லோரும் கட்டாயமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தாலி கயிறு பழதாகி விட்டால் அதை புதிதாக மாற்றிக் கொள்ளலாம். ஊர் புறங்களில் எல்லாம் மஞ்சள் கயிறை கழுத்தில் போட்டுக் கொண்டு கழுத்தில் அணிந்திருக்கும் தாலி செய்து சுத்தம் செய்து காவிரி ஆற்றின் கரையில் வழிபடும் போது தாலி சரடையும் வைத்து வழிபட்டு பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் மறுபடியும் கழுத்தில் அணிந்து கொள்வார்கள். இது தான் தாலி பெருக்கு என்பதற்கு பொருள்.

ஆகையால் இந்த நாளில் நீங்கள் புதிதாக தாலி சரடு மாற்ற வேண்டும் அல்லது கயிறு மாற்ற வேண்டும் என நினைத்தால் காலை 10:35 லிருந்து 11.35 மணி வரையிலான இந்த நேரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் காலையில் சூரிய உதயத்திற்கு பிறகு ராகு காலம் எமகண்டம் எதுவும் இல்லாத நேரமாக பார்த்து மாற்றிக் கொள்ளுங்கள். அதே போல் மதியம் 12 மணிக்கு மேலாக தாலி சரடு மாற்றுவது அவ்வளவு உகந்தது கிடையாது.

இதையும் படிக்கலாமே: கட்டு கட்டாக பணம் உங்களை நோக்கி வந்து கொண்டே இருக்க இன்று ஆடிச் செவ்வாய் பௌர்ணமியில் ஒரே ஒரு வெற்றிலையில் இப்படி எழுதி வைத்து விடுங்கள்.

இந்த ஆடிப்பெருக்கு வழிபாடும் ஆடிப்பெருக்கில் வாங்க வேண்டியது குறித்தும் ஆடிப்பெருக்கில் தாலி சரடு மாற்றுவது குறித்தான தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -