24-07-2020 ஆடிப்பூரம் அன்று, அம்மனுக்கு வீட்டிலிருந்தபடியே வளைகாப்பு செய்வது எப்படி?

- Advertisement -

ஆடி மாதம் வரும், பூரம் நட்சத்திர நாளை தான், ஆடிப்பூர நாளாக கொண்டாடி வருகின்றோம். இந்த வருடம், ஆடி மாதம் 9ஆம் தேதி நிறைந்த வெள்ளிக்கிழமை அன்று, வரப்போகின்ற ஆடிப்பூர திருநாளை வீட்டிலிருந்தபடியே எப்படி வழிபாடு செய்வது என்பதைப் பற்றியும், இந்த ஆடிப்பூரத்தில் குறிப்பாக யாரெல்லாம் விரதம் இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்துகொள்ள போகின்றோம். உலகையே காத்து ரக்ஷிக்கும் அம்பாளுக்கு மிகவும் விசேஷமான இந்த ஆடிப்பூர தினத்தை வைணவர்களும், சைவர்களும் வழிபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

aadipuram

அம்பாள், உமாதேவியாக அவதரித்த தினமாகவும், பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த தினமாகவும் இந்த திருநாள் கொண்டாடப்படுவதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. பொதுவாகவே, இந்த ஆடிப்பூரம் தினத்தன்று, அம்மன் கோவில்களில் அம்பாளுக்கு வளைகாப்பு செய்து ஊஞ்சலில் அமரவைத்து, ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு எப்படி வளைகாப்பு செய்வார்களோ, அதேபோல் விமர்சையாக இந்த விழா கொண்டாடப்படும். இது நாம் எல்லோரும் அறிந்ததே! ஆனால் சூழ்நிலை காரணமாக இந்த வருடம், இந்த ஆடிப்பூர விழா, விமரிசையாக கொண்டாடப் படவில்லை.

- Advertisement -

இருப்பினும் நம்முடைய வீட்டிலேயே, அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி அம்பாளின் அருளை பெறமுடியும். ஆடிப்பூரத்தன்று பெண்கள், பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே குளித்து முடித்து, பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு, உங்கள் வீட்டில் இருக்கும் அம்பாளின் திருஉருவப் படத்தை, சுத்தம் செய்து, சந்தன குங்குமம் வைத்து, வளையல் மாலை அணிவித்து, பூக்களால் அலங்காரம் செய்து, தீபம் ஏற்றிவைத்து, கலவை சாதத்தை நைவேத்யமாக படைத்து அம்மனுக்கு, இந்த பூஜையை நிறைவாக செய்லாம். மூன்று கலவை சாதம் செய்யலாம். அதில் புளி சாதம் கட்டாயம் இருக்க வேண்டும். முடிந்த வரை காலை 10 மணிக்கு முன்பாகவே ஆடிப்பூர பூஜையை உங்கள் வீட்டில் நிறைவடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டில் அம்மன் சிலை இருந்தால், அதற்கு பட்டு வஸ்திரங்கள் சாத்தி, ஜடை வைத்து, பூ சூட்டி, வளைகாப்பு நடத்துவது உங்களுடைய குடும்பத்திற்கு மிகவும் நல்லது.

meenakshi

குறிப்பாக, திருமணமாகாமல் இருக்கும் பெண்கள், குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதியர்கள், இந்த விரதத்தை நம்பிக்கையோடு மேற்கொள்ளவேண்டும். உங்களது உடல் நிலையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றால், வெறும் பால் பழம் மட்டும் சாப்பிட்டு  கூட, விரதத்தை மேற்கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்ற வேண்டுதலை அம்பாளிடம் வைத்து, ஆடிப்பூர பூஜையில் கலந்து கொள்வது மிகவும் விசேஷம்.

- Advertisement -

உங்களது வீட்டில் அம்பாளுக்கு வளையல் மாலை சாத்துவதோடு, உடன் கொஞ்சம் வளையலை, தாம்பூல தட்டில் அடுக்கி, அம்பாளின் முன்பு வைத்து, பூஜை செய்து முடித்து விட்டு, உங்கள் வீட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் இருக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடுப்பது மேலும் சிறப்பினை தேடித்தரும்.

amman

குறிப்பாக கோவில்களில் அம்பாளுக்கு சாதிய வளையலை, நாம் பெற்றுக் கொண்டால், அது நமக்கு சகல சௌபாக்கியம் பெற்றுத்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த வருடம் அந்த பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லை என்றாலும், நம் வீட்டில் வளைகாப்பு செய்து அந்த வளையலை அடுத்தவர்களுக்கு, நாம் தானமாக கொடுக்கும் போது, நமக்கு கட்டாயம் நன்மை ஏற்படும் என்று ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நினைத்தது உடனே நடக்க, நோய்கள் குணமாக அனுமனுக்கு இந்த தேங்காயை கொடுத்துப் பாருங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -