நாளை ஆடி பூரம் – இவற்றை மறக்காமல் செய்து மிகுதியான பலன் பெறுங்கள்

aadi-pooram

ஆடி மாதத்தில் வருகின்ற ஆடிபூரம் நட்சத்திர தினம் அம்பாளுக்குரிய சிறப்பு தினமாகும். சித்தர்களும், முனிவர்களும் இந்த நன்னாளில் தான் தங்களுடைய தவத்தை தொடங்குவார்கள் என ஆன்மீக அறிஞர்கள் கூறுகின்றனர். ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். இந்த சுப தினத்தில் தான் சக்தியாகிய உமாதேவி அவதரித்ததாக சிவபுராணம் கூறுகிறது. ஆடிப்பூர நாளில் தான் அன்னை பூமாதேவியே ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்தார் எனவும் கூறப்படுகிறது. நாராயணனாகிய ஸ்ரீனிவாசனின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த போது, பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்து ஆன்மீகத்தில் ஆண் – பெண் சமத்துவத்தை நிலைநாட்டினாள்.

sukran

பூரம் நட்சத்திரம் என்பது சுக்கிர பகவானுக்குரிய நட்சத்திரமாக இருக்கிறது. சுக்கிரனின் அருட்கடாட்சம் முழுமையாக கொண்ட பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிமையாக பேசுவார்கள். அனைவரையும் நேசிப்பார்கள். இவர்களும் பிறரால் நேசிக்க படுவார்கள். பூரம் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம். சுக்கிரனின் அம்சம் கொண்ட தெய்வம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். எனவே தான் ஆடிப்பூரத்தில் பிறந்த ஆண்டாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மனதில் கணவராக வரித்து, அவரையே மணந்தாள். காதல் கைகூடவும், மனதிற்கு பிடித்த நபரை கை பிடிக்கவும் காதல் கிரகமான சுக்கிரபகவானின் அருள் வேண்டும். சுக்கிரன் அருள் இருந்தால் மட்டுமே காதலில் வெற்றி, கணவன் – மனைவி ஒற்றுமை, தாம்பத்ய சுகம் போன்றவை உண்டாகும்.

எனவே அற்புதமான இந்த ஆடிப்பூரம் விரதம் இருந்து அம்மனை வழிபடுபவர்களுக்கு சீக்கிரத்தில் திருமண வரம் கைகூடும். தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனிச் சிறப்பாகும். எனவே உலக உயிர்கள் அனைத்தையும் தன்னிலிருந்து உருவாக்கும் அன்னைக்கு இந்த ஆடி பூரம் நாளில் வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது. மயிலாப்பூர் கற்பகவல்லி அம்மன், திருவாரூர் கமலாம்பாள், நாகப்பட்டினத்தில் நீலாயதாட்சி அம்மன், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, ஆகிய தலங்களில் உள்ள அம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இரவில் பல்லாயிரக்கணக்கான வளையல்களை கோர்த்து வளைகாப்பு நடத்தப்படும். அம்மன் கோயில்களில் ஆடி பூர தினத்தில் நடத்தப்படும் வளைகாப்பு சடங்கிற்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்த அனைத்து வளையல்களும் வளையல் பிரசாதமாக பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இந்த ஆடி பூரம் தினத்தில் பூமாதேவியே திருவில்லிபுத்தூரில் ஆண்டாளாக அவதரித்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மணந்து அவருடன் ஐக்கியமானாள். எனவே இந்த தினத்தில் திருவரங்கம், திருவில்லிபுத்தூர் போன்ற கோயில்களுக்கு சென்று பெருமாளையும், ஆண்டாள் தாயாரையும் வழிபடுவதால் பிரிந்த தம்பதியர் ஒற்றுமை உண்டாகும். சஷ்டாஷ்டக தோஷம் இருக்கும் தம்பதியர் தோஷம் நீங்கி மகிழ்ச்சியான இல்லறம் அமையும். தொழில், வியாபார போட்டி, பண விவகாரங்கள் போன்றவற்றால் பிரிந்த கூட்டாளிகள், நண்பர்கள் ஒற்றுமை ஏற்பட ஆடிப்பூர நாளில் ஆண்டாளை வணங்க மீண்டும் ஒன்றிணைவர்கள். திருவரங்கம், திருவில்லிபுத்தூர் கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபட்டாலும் மேற்கூறிய பலன்களை பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
ரஜ்ஜு தோஷம் நீங்க பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Aadi pooram sirappu in Tamil. It is also called as Aadi pooram in Tamil or Aadi pooram valaikappu in Tamil or Aadi pooram valipadu in Tamil or Aadi pooram enral enna in Tamil.