ஜாதகத்தில் ரஜ்ஜு தோஷம் நீங்கி நன்மைகள் உண்டாகச் செய்யும் பரிகாரம்

kanjanur

உலக வாழ்வில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு ஆணும், பெண்ணும் நெடுங்காலத்திற்கு தனித்து வாழ்வது என்பது பலவித நடைமுறை சிக்கல்களை அவர்களுக்கு உண்டாக்கும். எனவே ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து மகிழ்வோடு நீண்ட காலம் வாழ திருமண சடங்கை நமது முன்னோர்கள் உருவாக்கினர். அப்படி திருமணம் செய்வதற்கு முன்பாக மணமக்கள் இருவருக்கும் ஜாதகரீதியாக பொருத்தங்கள் சரியாக இருக்கிறதா என ஆராய்கின்றனர். அந்தப் பொருத்தங்களில் ஒரு முக்கியமான பொருத்தமாக ரஜ்ஜுப் பொருத்தம் இருக்கிறது. ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்தவர்கள் ரஜ்ஜிப்பொருத்தம் அவர்களுக்குள் இல்லாத போது திருமண வாழ்வில் சில சிக்கல்கள் ஏற்படுவதை பல ஜோதிடர்கள் தங்களின் அனுபவத்தில் கண்டுள்ளனர். அப்படி ரஜ்ஜு பொருத்தம் இல்லாதவர்கள் சிறப்பாக வாழ்வதற்குரிய ஒரு ஆன்மீக பரிகாரம் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Hindu Marriage

ஜாதகத்தில் ரஜ்ஜு பொருத்தம் சரியில்லாமல் இருக்கும் தம்பதிகள் திருமண வாழ்வில் பிரச்சனைகளும், குழப்பங்களும் ஏற்படுவதை தடுப்பதற்கு ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை தினத்தில் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு உரிய தலமான அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயிளுக்கு சென்று அக்கோவிலில் இருக்கின்ற அக்னி தீர்த்தக் குளத்தில் நீராடி விட்டு, பின்பு புத்தாடை அணிந்து கொண்டு கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

கஞ்சனூர் கோயிலில் ஸ்ரீ அக்னீஸ்வரர், கற்பகாம்பாள் என்கிற பெயரில் அருள்புரியும் சிவன் மற்றும் பார்வதி தேவிக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். பின்பே அக்கோவிலில் பக்தர்களின் துயரை நீக்க அருள்புரியும் நவகிரக நாயகர்களில் ஒருவரான சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி வாசமுள்ள மலர் மாலை அணிவித்து 6 முதல் 12 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இதன் பிறகு அக்கோயிலின் தலவிருட்சமாக இருக்கும் பலா மரத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி, அம்மரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும். எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பிறகு கோவிலை ஆறு முறை வலம் வந்து வணங்கி பிறகு வீடு திரும்பலாம்.

சுக்கிர பகவானுக்குரிய கஞ்சனூர் கோவிலில் இந்த பரிகார வழிபாடு செய்யும் கணவன் மனைவிக்கு ஏற்பட்டிருக்கும் ரஜ்ஜு பொருத்தம் தோஷம் நீங்கி அவர்களின் இல்லற வாழ்வில் கருத்துவேறுபாடுகள், பிரிந்து வாழுதல் போன்ற நிலை ஏற்படாமல் தடுத்து, எல்லா வளங்களையும் பெற்று இனிமையான இல்லற வாழ்க்கையை உண்டாக வழிவகை செய்யும்.

இதையும் படிக்கலாமே:
கேது கிரக தோஷம் போக்கும் எளிய பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rajju dosha pariharam in Tamil. It is also called as Jothida pariharam in Tamil or Thirumana pariharam in Tamil or Kanjanur kovil pariharam in Tamil or Jothida pariharangal in Tamil.