நாளை (6/8/2021) ஆடி வெள்ளியில் வரக்கூடிய இந்த பிரதோஷ தினத்தில் சிவனை இப்படி வழிபாடு செய்தால் தடைகள் நீங்கி வேண்டிய வரமெல்லாம் கிடைக்குமாம்!

sivan-curd-rice
- Advertisement -

ஆடி மாதம் என்றாலே இறை வழிபாட்டிற்கு சிறந்த மாதமாக கருதப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஆடி வெள்ளியுடன் கூடிய இந்த பிரதோஷ தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இம்மாதத்தில் வரும் பிரதோஷத்தன்று சிவனை வழிபடுபவர்கள் வேண்டிய வரமெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். பிரதோஷங்களில் சோம வார பிரதோஷம், சனி பிரதோஷம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆடி பிரதோஷமும் விசேஷமானது தான். எனவே இந்நாளில் சிவனை எப்படி வழிபட வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

siva-parvathi

பொதுவாக ஆடி மாத பிரதோஷம் வரும் பொழுது அம்பாளையும், சிவனையும் சேர்த்தே வழிபடுவது வழக்கம். குழந்தை இல்லாத தம்பதிகள் தம்பதியராக சேர்ந்து சிவபார்வதியை நோக்கி அன்றைய நாள் முழுவதும் சிவ மந்திரங்களை உச்சரித்து விரதம் இருந்து வழிபட்டால் நிச்சயம் பிள்ளைப் பேறு விரைவாகவே உண்டாகும் என்பது நம்பிக்கை. முந்தைய நாளே வீடு முழுவதும் துடைத்து பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெள்ளி அன்று அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நீராடி புத்தாடை தரித்து கொள்ளுங்கள். முழுமையாக விரதமிருக்க முடிந்தவர்கள் முழுமையாகவும், முழு விரதம் கடைபிடிக்க முடியாதவர்கள் திரவ உணவுகளை மட்டும் காலையில் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். பிரதோஷ காலம் என்பது 4.30 மணி முதல் 6.00 மணி வரை என்கிற காலமாக இருந்தாலும் காலையிலேயே அபிஷேகத்தை முடித்துக் கொள்ள வேண்டும். வீட்டில் சிவலிங்கம் வைத்திருப்பவர்கள் அதற்கு பால், பன்னீர், இளநீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யலாம். கட்டாயம் வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷமானது எனவே இதற்கு தேவையான வில்வ இலைகளை முந்தைய நாளே பறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

lingam-vilva-archanai

நம்முடைய கைகளால் தெரியாமல் ஒரு வில்வ இலையால் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு அர்ச்சனை செய்தாலும் ஏழேழு ஜென்மத்தில் செய்த பாவங்களும் நீங்கப் பெறும் என்பது ஐதீகம். எனவே காலை முதல் விரதமிருந்து சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட வேண்டும். பின்னர் மாலை நாலரை மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள சிவபெருமானுக்கு நடக்கும் அபிஷேகங்களில் கலந்து கொள்ள வேண்டும். அபிஷேகம் முடியும் வரை கோவிலிலேயே இருப்பது மிகவும் விசேஷமானது. வில்வ இலைகளை வாங்கிக் கொடுத்து அர்ச்சனை செய்து கொள்வது மிகவும் நல்லது. சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்கு உரிய பால், பன்னீர், தயிர், இளநீர் போன்ற அபிஷேகப் பொருட்களை உங்களால் முடிந்த அளவிற்கு வாங்கிக் கொடுங்கள்.

- Advertisement -

பிரதோஷ விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவன் கோவிலில் வலம் வருவது மிகவும் விசேஷமானது அதிலும் சோம சூக்த பிரதட்சணம் என்னும் முறையில் வலம் வந்து ஈசனை வழிபடுபவர்களுக்கு திருமணம் கைகூடும், வறுமை நீங்கும், பிணிகள் அனைத்தும் விலகும், சகல சௌபாக்கியங்களையும் பெற்று தரக்கூடிய அற்புதமான இந்த பிரதோஷ நேரத்தை தவற விடாதீர்கள். பின்னர் அங்கு கொடுக்கும் பிரசாதத்தை உண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

runavimosana-lingam

வீட்டிற்கு வந்ததும் வீட்டில் இருக்கும் லிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் வேண்டும் பின் நாள் முழுவதும் சிவ ஸ்தோத்திரங்களையும் உச்சரியுங்கள். சிவனுக்கு நைவேத்தியம் படைக்க தயிர் சாதம் தயார் செய்து வைக்கலாம். தொடர்ந்து இப்படி பிரதோஷ விரதம் இருந்து வழிபட்டு வந்தால் மோட்சம் பெறலாம் என்கிறது புனித நூல்கள் மற்றும் தம்பதியராக பிரதோஷ வழிபாட்டை மேற் கொள்பவர்களுக்கு பிள்ளைப்பேறு சீக்கிரமே உண்டாகும். ஒவ்வொரு பிரதோஷத்திலும் இப்படி முறையாக ஈசனை வழிபட்டு வருபவர்களுக்கு வாழ்வில் இம்மையிலும், மறுமையிலும் துன்பங்களே இருக்காது.

- Advertisement -