வீண் விரயத்தை தடுத்து சேமிப்பை உயர்த்தும் பரிகாரம்

money saving
- Advertisement -

நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணமானது செலவு செய்வதற்காக தான் என்றாலும் அந்த செலவுகள் என்பது சுப காரியங்களுக்கான செலவுகளாக இருக்க வேண்டுமே தவிர வீண் விரயமாக இருக்கக் கூடாது. வீண் விரயங்கள் ஏற்பட்டால் கண்டிப்பான முறையில் ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது இருக்காது. பணத்தை வைத்து தான் ஒருவருடைய முன்னேற்றம் நிர்ணயிக்கப்படுகிறது. எந்த அளவிற்கு பணத்தை சேமித்து வைத்து சுப விரயங்களாக செய்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது ஏற்படும். அப்படி வீண் விரயங்களை தவிர்த்து சேமிப்பை உயர்த்துவதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். கடினமாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தை செல்வ செழிப்பாக மாற்றுவதற்கு அந்த பணத்தை சேர்த்து வைக்க வேண்டும். என்னதான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் சேமிப்பு ஆகாமல் செலவாக மாறினால் எந்தவித செல்வ செழிப்பும் ஏற்படாது. கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிப்பது என்பது நம் கையில் இருந்தாலும் அதை வீண்விரயம் ஆகாமல் பார்த்துக் கொள்வதற்கு கடவுளின் அருள் என்பது வேண்டும். அந்த வகையில் சித்தர்கள் கூறிய ஒரு மூலிகை பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு செடிக்கும் இருக்கக்கூடிய வேர், இலை, தண்டு என்று பல பாகங்கள் நம்முடைய ஆன்மீக ரீதியாக பல விஷயங்களுக்கு பரிகாரமாகவும் வழிப்பாடாகவும் செயல்படுகிறது. சித்தர்கள் சொன்ன முறைப்படி அதை நாம் கையாளும் பொழுது அதனால் நமக்கு பல நன்மைகள் ஏற்படும். இந்த வீண் விரயத்தை தடுக்கக்கூடிய ஆற்றல் மிக்க மரமாக திகழ்வதுதான் ஆலமரம்.

ஆலமரம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அப்படி இருக்கக்கூடிய அந்த ஆலமரத்தின் வேரை நாம் பயன்படுத்தும் பொழுது நாமும் பிரம்மாண்டமான வளர்ச்சி அடைவோம் என்று கூறப்படுகிறது. வளர்பிறையில் வரக்கூடிய சுப நாளாக பார்த்து வேரை எடுக்க வேண்டும். ஆல மரத்தின் வேரை எடுக்காமல் ஆலமரத்தில் இருந்து வரும் விழுதுகள் பூமியில் பட்டு அதிலிருந்து வேர் வரும். அந்த வேரை கத்தி உபயோகப்படுத்தாமல் கல்லை வைத்தோ அல்லது கைகளினால் முறித்தோ எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு எடுப்பதற்கு முன்பு மானசீகமாக அந்த ஆலமரத்திடம் அனுமதி பெற்று நீங்கள் எப்படி பிரம்மாண்டமாக இருக்கிறீர்களோ அதே போல் உங்களுடைய வேரை பயன்படுத்தி நானும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று வேண்டிய பிறகு வேரை எடுக்க வேண்டும். வேரை மஞ்சள் கலந்த தண்ணீரை சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு நல்ல காம்பு நுனி எதுவும் உடையாத கிழியாத பச்சையாக இருக்கக்கூடிய ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு நம்முடைய வலது கை மோதிர விரலால் மஞ்சளில் பன்னீரை ஊற்றி குழைத்து அந்த வெற்றிலையின் நடுவில் தடவ வேண்டும். பிறகு கலசத்திற்கு சுற்றக்கூடிய நூலில் மஞ்சளை தடவி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது வெற்றிலையின் நடுவில் மஞ்சள் தடவிய இடத்தில் எடுத்து வந்த ஆலமர வேரை வைத்து சுருட்டி மஞ்சள் தடவி வைத்திருக்கும் நூலால் கட்ட வேண்டும். இப்படி கட்டிய இந்த வேரை நம்முடைய வீட்டில் நாம் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இதனுடன் பச்சை கற்பூரத்தையும் வைத்து விட வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் நம்முடைய உழைப்பிற்கேற்ற வருமானம் ஏற்படும். வீண் விரயம் ஆகாது. சேமிப்புகள் உயரும். குடும்பத்தில் இருக்கக்கூடிய உறவுகள் ஆலமர விழுது போல் உறுதியாக இருப்பார்கள். குடும்பம் ஒற்றுமையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: அஷ்டமியில் செய்ய வேண்டிய தானம்

சித்தர்கள் கூறிய இந்த தாந்திரீக முறையை நாமும் முழு நம்பிக்கையுடன் பின்பற்றி நம்முடைய பணத்தை சேமிப்பாக உயர்த்திக் கொள்வோம்.

- Advertisement -