ஆடி மாதமே சிறப்பு மிகுந்த மாதம் என்றாலும் அந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆடி வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் மிகவும் எளிமையான முறையில் பெண் தெய்வங்களை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம் குடும்பத்திற்கு அளவில்லாத பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று எந்த முறையில் வழிபாடு செய்தால் செல்வமழை பொழியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆடி இரண்டாம் வெள்ளி வழிபாடு
வெள்ளிக்கிழமை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மகாலட்சுமி வழிபாட்டிற்கு உரிய கிழமையாக வெள்ளிக்கிழமை திகழ்கிறது. அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமை ஆடி மாதத்தில் சேர்ந்து வரும் பொழுது அதற்கு கூடுதல் பலன் இருக்கும் அல்லவா? அப்படிப்பட்ட கூடுதல் பலன் கிடைக்க கூடிய ஆடி வெள்ளிக்கிழமை நாம் வீட்டிலேயே அம்பாலையோ அல்லது மகாலட்சுமி தாயாரையோ வழிபாடு செய்யும்பொழுது அவர்களின் அருளால் நம்முடைய வாழ்க்கையில் நாம் நினைத்ததை பெற முடியும் என்றும் மேலும் பெண் தெய்வங்களின் அருளை பரிபூரணமாக பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த வழிபாட்டை சூரிய அஸ்தமனம் ஆன பிறகு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு தட்டில் கோபுரமாக பச்சரிசியை கொட்டிக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள் தூள் மற்றும் நெய் கலந்து அட்சதையாக அதை பிணைந்து கோபுரமாக மாற்றிக் கொள்ளுங்கள். அந்த கோபுரத்தின் நுனியில் நம் வீட்டில் இருக்கக்கூடிய தங்க நகைகள் எதுவாக இருந்தாலும் அனைத்தையும் வைக்கலாம் அல்லது ஒரே ஒரு பொருளை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இதை நாம் மகாலட்சுமியாக பாவித்த அதாவது சுவர்ணலட்சுமியாக பாவித்து வழிபாடு செய்யப் போகிறோம்.
இந்த அட்சதைக்கு முன்பாக ஒரு மனை பலகையை வைத்து அதில் பச்சரிசி மாவினால் தாமரைப்பூ கோலம் போட்டு அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி தாமரை தண்டு திரிபோட்டு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டிற்கு எட்டு வகையான மலர்கள் வேண்டும். அதுவும் வாசனை மிகுந்த மலர்களை பயன்படுத்துவது கூடுதல் சிறப்பை தரும். மல்லிகை பூ, தாமரைப்பூ, மரிக்கொழுந்து, செவ்வரளி இப்படி வாசனை மிகுந்த மலர்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை இந்த வழிபாட்டிற்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். நெய்வேத்தியமாக அறுசுவை உணவுகளை தயார் செய்து அந்த தீபத்திற்கு முன்பாக வாழையிலையை விரித்து அதில் வைக்க வேண்டும்.
இப்பொழுது வாசனை மிகுந்த எட்டு வகையான மலர்களில் ஒவ்வொரு மலர்களாக கையில் எடுத்துக் கொண்டு மகாலட்சுமி அஷ்டகத்தை பாராயணம் செய்ய வேண்டும். மகாலட்சுமி அஷ்டகத்தில் மொத்தம் எட்டு பாடல் வரிகள் இருக்கின்றன. ஒவ்வொரு பாடல் வரிகள் நிறைவடையும் போதும் நமோஸ்துதே என்னும் வார்த்தை வரும். அப்படி நமோஸ்துதே என்னும் வார்த்தை வரும் பொழுது நம் கையில் இருக்கக்கூடிய மலரை எடுத்து பச்சரிசியின் மேல் இருக்கக்கூடிய தங்கத்திற்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். இப்படி 8 பாடல் வரிகளை பாடி முடிக்கும் பொழுது எட்டு வகையான மலர்களை வைத்து நாம் அர்ச்சனை செய்திருப்போம்.
கடைசியாக கற்பூர தீப தூவ ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இப்படி வழிபாட்டை நிறைவு செய்த பிறகு வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய சிறு பெண் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு இந்த அறுசுவை உணவுகளையும் பரிமாறி அவர்களிடமிருந்து ஆசிர்வாதத்தை பெற வேண்டும். இப்படி ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை நாம் வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெற்று செல்வ செழிப்புடன் வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே: ஆடி அமாவாசை வழிபாடு செய்தவர்கள் செய்ய வேண்டியது
மகாலட்சுமி தாயாரை சுவர்ணலட்சுமியாகவும், பாலாம்பிகையாகவும் நினைத்து வழிபாடு செய்வதற்குரிய அற்புதமான நாளாக தான் ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை திகழ்கிறது. முழுமனதோடு இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுடைய வீட்டில் செல்வமழை பொழியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.