நாளை ஆடி வளர்பிறை பிரதோஷம் – இவற்றை செய்தால் அற்புதமான பலன் உண்டு

siva

தென்னாட்டவருக்கு சிவனாகவும், எந்நாட்டவருக்கும் இறைவனாக இருப்பவர் கயிலாயத்தில் இருக்கும் சிவபெருமான் ஆவார். சிவபெருமானின் மந்திரத்தை துதிப்போர்க்கு வல்வினைகள் அனைத்தும் நீங்கும். சிவபெருமானை முறையாக வழிபடுபவர்களுக்கு உலக வாழ்வில் அனைத்து இன்பமும் கிடைக்கப் பெற்று, இறுதியில் மீண்டும் பிறவா நிலையான முக்திப் பேறு கிடைக்கிறது. அப்படி எல்லா வகையான நன்மைகளையும் தருகின்ற சிவ வழிபாடு செய்வதற்குரிய ஒரு அற்புத தினமாக பிரதோஷ தினங்கள் இருக்கின்றன. அதிலும் அற்புதமான ஆடி மாதத்தில் வருகின்ற வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதால் எத்தகைய சிறப்பான பலன்களை பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

siva

ஆடி மாதம் என்பது ஆன்மீக சிறப்புக்கள் மிகுந்த ஒரு மாதமாகும். இந்த மாதத்தில் வரும் அனைத்து திதி தினங்களும் இறை வழிபாடு, பூஜைகள், உற்சவங்கள் செய்வதற்கு ஏற்றதாக இருப்பதால் பல கோயில்களில் விழாக்களும், வைபவங்களும் இந்த மாதம் முழுவதும் நடைபெறும். அப்படியான ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை பிரதோஷம் சிறப்பான ஒரு தினமாகும். அதிலும் ஆடி வளர்பிறை பிரதோஷம் சிவபெருமான் மற்றும் சந்திர பகவானுக்குரிய திங்கட்கிழமைகளில் வருவது மிகவும் சிறப்பானதாகும்.

ஆடி மாத வளர்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, அன்றைய நாள் முழுவதும் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் திரிகரண சுத்தியுடன் எப்போதும் சிவபெருமான் நினைவோடு இருப்பது சிறந்தது. பிரதோஷ தினங்களில் உணவு, நீர் ஏதும் அருந்தாமல் விரதம் இருப்பதே சிறந்தது என்றாலும், தற்காலத்தில் அது அனைவருக்குமே சாத்தியப்படாத விடயமாக இருப்பதால் அன்றைய தினம் பால் மற்றும் பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்வது நல்லது.

god siva

ஆடி வளர்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும். பிறகுநந்தி தேவர் மற்றும் சிவப்பெருமான் மற்றும் நந்தி தேவரின் அபிஷேகத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். நவகிரக சந்நிதியில் இருக்கும் சந்திர பகவானுக்கு மல்லிகை பூக்கள் சாற்றி, தயிர் சாதம், நிறமிகள் சேர்க்காத கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

- Advertisement -

Sivan

வழிபாடு முடிந்ததும் உங்கள் சக்திக்கு ஏற்ற அளவில் பக்தர்களுக்கு தயிர் சாதம், தக்காளி சாதம் போன்றவற்றை அன்னதானம் வழங்க வேண்டும். இம்முறையில் ஆடி வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவதால் சிவன் மற்றும் பார்வதி ஆகிய இரண்டு தெய்வங்களின் அருள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். மனக்கவலைகள், சஞ்சலங்கள் நீங்கி மனோபலம் உண்டாகும். உயர்வுகள் கிடைக்கப்பெறுவர்கள். தொழில், வியாபாரங்களில் ஏற்படுகின்ற இடையூறுகள் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு அரசு வேலை கிடைக்க உதவும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Aadi valarpirai pradosham in Tamil. It is also called as Aadi masam in Tamil or Aadi pradosham in Tamil or Pradosham pooja in Tamil or Aadi matha pradhoshangal in Tamil.