நாளை ஆடி வளர்பிறை சதுர்த்தி – இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு

vinayagar

அனைத்து மாதங்களிலும் ஒவ்வொரு தினமும் இறைவனை வழிபடுவதற்குரிய சிறந்த தினங்களாக இருக்கிறது. பலரின் விருப்பத்திற்குரிய இஷ்ட தெய்வமாக இருப்பவர் விநாயக பெருமான். அனைவரும் எளிதாக வழிபடக்கூடிய ஒரு தெய்வமாகவும், அதே நேரத்தில் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவராகவும் விநாயகர் இருக்கிறார்.  கணபதியை வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த நாளாக சதுர்த்தி தினம் இருக்கிறது. அந்த வகையில் மிக சிறப்பான ஆடி மாதத்தில் வருகிற வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபடும் முறை மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

vinayaga

சக்தியாகிய பார்வதி தேவி தான் ஆடி மாதத்தில் அம்மனாக வழிபடப்படுகிறார். அவரின் மைந்தனான விநாயகருக்குரிய ஆடி வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை எழுந்து நீராடி, உணவு ஏதும் உட்கொள்ளாமல் வீட்டின் பூஜையறையில் இருக்கும் சிறியளவிலான விநாயகர் படம் அல்லது சிலைக்கு மஞ்சள், குங்குமம் பொட்டிட்டு, ஒரு பீடத்தின் மீது வைத்து, வாசமுள்ள மலர்களை சமர்ப்பித்து, லட்டு அல்லது கற்கண்டு போன்ற இனிப்புகளை நைவேத்தியம் வைத்து, தீபங்கள் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி விநாயகருக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபட வேண்டும்.

காலை முதல் மாலை வரை கணநாதனாகிய விநாயகப்பெருமான் நினைவோடு விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிடலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கோ அல்லது அவரது சந்நிதிகோ சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனை, பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். பின்பு வீட்டிற்கு வந்ததும் பூஜையறையில் இருக்கும் விநாயகர் பெருமானை வணங்கி அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பண்டங்களை பிரசாதமாக சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.

vinayagar

தெய்வ வழிபாட்டிற்குரிய ஆடி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு இனிவரும் காலங்களில் புதிதாக ஈடுபடும் காரியங்கள், முயற்சிகள் அனைத்திலும் தடை தாமதங்கள் இன்றி சிறப்பான பலன்களைத் தரும். ஆக்கப்பூர்வமான சிந்தனை திறன், சிறந்த வாக்கு வன்மை ஏற்பட்டு புகழ், செல்வாக்கு ஏற்படும். தக்க சமயங்களில் சக மனிதர்களின் உதவிகள் கிடைக்கப் பெறுவார்கள். நீண்ட காலமாக வாட்டி வதைக்கின்ற நோய்கள் குணமாகும். புதிய வேலைக்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு விரும்பியபடி வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல தன லாபங்கள் கிடைக்கும். திருமணம் தாமதமாகி கொண்டு வருபவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெறும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு அமைவதற்கான நிலையை உண்டாக்கும்.

இதையும் படிக்கலாமே:
விபத்துகள், ஆபத்துகள் ஏற்படாமல் தடுக்க பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Aadi valarpirai sathurthi in Tamil. It is also called as Aadi matham in Tamil or Vinayagar valipadu in Tamil or Sathurthi viratham in Tamil or Aadi valarpirai sathurthi in Tamil.