வெற்றிக்குரிய கடவுள் என்றால் அது அந்த முருகப்பெருமான்தான். உங்கள் வாழ்க்கையில் இயலாத காரியம், முடியாத காரியம், இதை என்னால் செய்யவே முடியாது என்று எல்லா விஷயத்தை பார்த்தும் பயந்து பயந்து ஒதுங்கி செல்பவர்கள் ஆக நீங்கள் இருந்தால், இன்றைய தினம் பின் சொல்லக்கூடிய மந்திரத்தை சொல்லி முருகன் வழிபாடு செய்யுங்கள்.
முடியாது என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கையில் இருக்காது. முடியாத காரியத்தை கூட முடித்துக் காட்டக் கூடிய தைரியமும் தென்பும் உங்களுக்குள் வந்துவிடும். அகத்தியரால் சொல்லப்பட்ட ஒரு முருக மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கூடவே ஆடி வெள்ளிக்கு அம்பாளையும் வழிபட வேண்டும் அல்லவா அதற்கும் சேர்த்தே வழிபாட்டை பார்த்து விடுவோம்.
ஆடி வெள்ளி என்றாலே அது அம்பாளுக்கு உகந்த நாள். அம்பாள் கையில் இருக்கும் திருசூலத்திற்கு சக்தி அதிகம். தைரியம் அதிகம். அதே போல தான் முருகன் கையில் இருக்கும் வேலுக்கு சக்தி அதிகம். காரணம் அந்த வேல், சக்தி தேவியால் முருகர் கையில் கொடுக்கப்பட்ட வேல். ஆக இன்று உங்களுக்கு சக்தி கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் திரிசூலத்தையும், முருகர் கையில் இருக்கும் வேலையும் ஒன்றாக உங்கள் கண் முன்னே நிறுத்தி இரண்டு தெய்வங்களையும் வழிபாடு செய்யுங்கள்.
இன்று மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். பூஜை அறையில் இருக்கும் சுவாமியின் திருவுருவப்படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து விடுங்கள். பின்பு முருகப்பெருமானையும் சக்தி தேவியையும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு மன தைரியம் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். ‘ஓம் சக்தி பராசக்தி’ என்ற மந்திரத்தை 11 முறை சொல்லுங்கள். பிறகு முருகரை மனதார நினைத்து அகத்தியர் அருளிய இந்த மந்திரத்தையும் 11 முறை சொல்லுங்கள்.
முருகன் மந்திரம்
ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா
இறுதியாக சுவாமிக்கு கற்பூர ஆராத்தி காண்பித்து உங்களுடைய வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். மேல் சொன்ன வழிபாட்டை பார்க்கும்போது மிக மிக எளிமையான வழிபாடாகத்தான் தெரியும். ஆனால் உங்களுடைய கோழைத்தனமான வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி இந்த எளிய வழிபாட்டிற்கு உண்டு.
இதையும் படிக்கலாமே: வெற்றிகளை தரும் நரசிம்மர் தீபம்
இன்றைய தினம் அம்பாளின் அருளும் முருகப்பெருமானின் அருளும் ஒரு சேர கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் மேல் சொன்ன வலிமையான வழிபாட்டை பின்பற்றினாலே போதும். அம்மன் அருளும் முருகன் அருளும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிடைத்துவிடும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.