- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடி வெள்ளி அன்று காலையில் சொல்ல வேண்டிய மந்திரம்

ஆடி வெள்ளி அன்று காலையில் சொல்ல வேண்டிய மந்திரம்

- Advertisement -

நாளைய தினம் ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. சொல்லவே வேண்டாம். அம்பாள் பக்தர்களுக்கு இந்த நாள் ஒரு இனிய நாளாக அமையும். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களும் சக்தி தேவிக்கு இணையானவள் தான். காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, முடிந்தவர்கள் மஞ்சள் புடவை உடுத்துங்கள். முடியாதவர்கள் மஞ்சள் நிற சுடிதார் போட்டுக் கொள்ளுங்கள்.

வாசல் கூட்டி கோலம் போட்டு, நிலை வாசலில் மாயிலை தோரணம், வேப்ப இலை தோரணத்தைக் கட்டி அம்பாளை வீட்டிற்குள் வர வைக்கவும். உங்களுக்கு ஆடி வெள்ளி அற்புதமான வெள்ளியாக அமையும். இந்த ஆடி மாதம் முழுவதும் அம்மனை நம் வசப்படுத்திக் கொள்ள, அம்மன் ஒவ்வொரு நொடியும் நம்முடனே நம் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றால் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வீட்டில் தான் இந்த மந்திரத்தை உச்சரிக்கணும் என்ற கட்டாயமும் கிடையாது. கோவிலுக்கு சென்றும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இந்த ஆடி மாதம் முழுவதும் அம்பாளை நினைத்து மனதிற்குள் இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தால், ஒவ்வொரு நொடியும் அம்பாள் உங்கள் பக்கம் நெருங்கிக் கொண்டே வருவாள். அந்த சக்தி தேதியின் சக்தி அனைத்தும் உங்களுக்குள் வந்துவிடும். எப்போது நேரம் கிடைக்கிறதோ தோணும்போதெல்லாம் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். உங்களுக்கு அம்பாளின் அருளை பெற்றுத் தர போகும் சக்தி வாய்ந்த அந்த மகா மந்திரம் என்ன.

ஆடி மாதம் அம்மன் மந்திரம்

ஓம் சக்தி மகா சக்தி, ஓம் சக்தி சிவ சக்தி,
ஓம் சக்தி சர்வ சக்தி ஓம்.

- Advertisement -

சகல விதமான சக்திகளும் உங்கள் உடம்பிற்குள் நுழைய, உங்கள் உடம்பை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கண் திருஷ்டியும் கெட்ட சக்தியும் விலக, சக்தி வாய்ந்த இந்த இரண்டே வரி மந்திரங்கள் போதும். இதை மனப்பாடம் செய்வதில் ஏதும் கஷ்டம் கிடையாது. இத்தனை முறைதான் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது.

எத்தனை முறை வேண்டுமென்றாலும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். இந்த மந்திரத்தை சொல்லி அம்பாளுக்கு பிடித்த பிரசாதத்தை செய்து வையுங்கள். காய் சாதம் அம்மனுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். காய்கறிகள் எல்லாம் போட்டு வெஜிடபிள் பிரியாணி செய்யலாம். காய்கறிகள் எல்லாம் போட்டு வெஜிடபிள் சாம்பார் சாதம் செய்து அம்பாளுக்கு படைக்கலாம்.

- Advertisement -

எலுமிச்சை பழ சாதம், துள்ளு மாவு, கூழ் இவை எல்லாம் அம்பாளுக்கு ரொம்ப ரொம்ப விருப்பமானது. உங்களால் முடிந்த ஏதாவது ஒரு பிரசாதத்தை இதிலிருந்து செய்துவைத்து ஆடி வெள்ளி என்று வழிபாடு செய்யுங்கள். உங்களால் முடிந்த அன்னதானத்தை இயலாதவர்களுக்கு செய்யுங்கள். அந்த அம்மன் உங்களுடனே இருந்து உங்களுடைய குடும்பத்தைக் காத்து ரட்சிப்பால்.

இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டம் நீங்க காகத்திற்கு உணவு வைக்கும் முறை.

நாளை காலை கண் விழித்து நிலை வாசல் கதவை திறக்கும் போது இந்த மந்திரத்தை வாய் திறக்க சொல்லலாம். தவறே கிடையாது. நாலு பேர் காதில் விழுந்து விடுமோ என்ற சங்கடம் இல்லாமல் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். நீங்கள் நிலை வாசல் கதவை திறந்த உடன் அந்த அம்பாள் தரிசனம் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் என்ற உறுதியுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்