- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணக்கஷ்டம் நீங்க காகத்திற்கு உணவு வைக்கும் முறை.

பணக்கஷ்டம் நீங்க காகத்திற்கு உணவு வைக்கும் முறை.

- Advertisement -

செய்யும் தொழிலில் சிறப்பாக விளங்கினால் தான் காலம் முழுவதும் வருமானத்திற்கு பிரச்சனை இருக்காது. மேலும் மேலும் லாபம் பெருகும். சந்தோஷமாக வாழ முடியும். செய்யும் வேலையில் சிறப்பாக விளங்கினால் தான், பெரிய பிரமோஷன் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். சந்தோஷமாக வாழ முடியும்.

இப்படி நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயல்பாடிலும் சனிபகவானின் தாக்கம் இருக்கும். சனி கிரகத்தின் அனுகிரகம் நமக்கு முழுதாக கிடைக்கும் பட்சத்தில் நம்முடைய வாழ்க்கை பெரிய அளவில் சிக்கலில் சிக்கிக் கொள்ளாது. ஏதோ ஓரளவுக்கு கடன் இல்லாமல் வருமானத்தோடு வசதி வாய்ப்புகளோடு வாழலாம். அந்த சனி பகவானின் அனுக்கிரகத்தை பெற வேண்டும் என்றால் தினமும் நீங்கள் காக்கைக்கு உணவு வைக்க வேண்டும்.

- Advertisement -

அந்த உணவை பின் சொல்லக்கூடிய முறையில் வைத்தீர்கள் என்றால், உங்களுடைய வேலை தொழில், எல்லாம் சிறப்பாகி வருமானம் பெருகி, ரொம்ப ரொம்ப சந்தோஷமாகவே இருக்கலாம். இது மட்டும் அல்லாமல் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெரிய பெரிய துன்பங்கள் துயரங்கள் எல்லாம் நீங்கவும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். காக்கைக்கு எப்படி உணவு வைப்பது? ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தெரிந்து கொள்வோமா.

பண கஷ்டம் தீர காக்கைக்கு உணவு வைப்பது எப்படி?

தினமும் அதிகாலை விடியும் பொழுது, சூரியன் உதித்திருக்க மாட்டார். லேசாக கிழக்கு பக்கத்தில் இருள் நீங்கி வெளிச்சம் பிறக்கும், அந்த சமயம் அதாவது காலை 6:00 மணிக்கு முன்பாகவே காக்கைக்கு உங்கள் கைகளால் 5 கருப்பு உலர்ந்த திராட்சையை காக்கைக்கு வைக்க வேண்டும். காலை 5:45 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

- Advertisement -

அந்த நேரத்தில் பறவைகள் கண்விழித்திருக்கும். காக்கைகள் பறக்கும். நீங்கள் வைத்தவுடன் காகம் வந்து அந்த கருப்பு திராட்சையை எடுத்து சாப்பிட வேண்டும். இது நிச்சயம் ஒரு நாளில் நடக்காது. தினமும் காகத்திற்கு கருப்பு திராட்சையை வைத்து நீங்கள் பழக வேண்டும். ஒரு காலகட்டத்திற்கு மேல் நீங்கள் கருப்பு திராட்சையை வைக்கப் போவதற்கு முன்பு, காகம் வந்து உங்களுக்காக காத்திருக்கும்.

அந்த நேரம் வரும்போது உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் மறைந்து இருக்கும். ஒரே நாளில் விமோசனத்தை எதிர்பார்க்கக் கூடாது. தினமும் இடைவிடாது அதிகாலை வேளையில் காகத்திற்கு கருப்பு தாட்சியை வைத்தால் உங்கள் கெட்ட தலை எழுத்து நிச்சயம் மாறும். கருப்பு திராட்சையை மேல் சொன்ன முறைப்படி வையுங்கள்.

- Advertisement -

தினமும் தயிர் சாதம், காகத்திற்கு வைக்க வேண்டும். இந்த தயிர் சாதத்தை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் நீங்கள் வைக்கலாம். உங்களுடைய வீட்டில் சாதம் சமைத்து முடித்த பிறகு நீங்கள் சாப்பிடுவதற்கு முன்பு கொஞ்சம் வெள்ளை சாதத்தில் தயிர் சேர்த்து கொண்டு போய் காகத்திற்கு வைத்துவிட்டு பிறகு நீங்கள் உங்களுடைய உணவை எடுத்துக் கொள்ளலாம்.

மேலே சொன்ன இந்த இரண்டு விஷயங்களையும் நீங்கள் பின்பற்றி வந்தாலே உங்களுக்கு சனிபகவானின் அனுக்கிரகம் முழுமையாக கிடைக்கும். வாழ்க்கையில் பெரிய அளவில் பிரச்சனைகள் வருவது குறையும். காலையில் உலர் திராட்சை வைக்கக்கூடிய பரிகாரம் இருக்கிறது அல்லவா. அது பிரச்சனை உள்ளவர்கள் கையால்தான் செய்ய வேண்டும். உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை, உங்களுக்கு தொழில் சிறக்கவில்லை என்றால் நீங்கள் தான் அந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி. மற்றபடி தயிர் சாதத்தை வீட்டில் இருக்கும் யார் வேண்டுமென்றாலும் காகத்திற்கு வைத்தால் பலன் உண்டு. இந்த எளிமையான ஆன்மீக பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்