காரசாரமான ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு மசாலான்னா அது இப்படித்தான் இருக்கும். இதை பிடிக்காதுன்னு யாரும் சொல்லவே மாட்டாங்க.

potato-masala
- Advertisement -

உருளைக்கிழங்கு மசாலா என்று சொன்னாலே இதை விரும்பி எல்லோரும் சாப்பிடுவார்கள். அதிலும் ஆந்திரா ஸ்டைலில் உருளைக்கிழங்கு மசாலா செய்து கொடுத்தால் சொல்லவே வேண்டாம். குறிப்பாக ரசம் சாதம், சாம்பார் சாதத்திற்கு இதை சொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும். தேவைப்பட்டால் சப்பாத்திக்கு கூட இதை சைட் டிஷ் ஆக பரிமாறலாம். எல்லா வெரைட்டி ரைஸ்க்கும் சைடிஷ் ஆக வைக்கலாம். ஒரு ஸ்பெஷல் மசாலா அரைத்து போட்டு, இந்த உருளைக்கிழங்கு மசாலாவை இன்னைக்கு நாம் தயார் செய்யப் போகின்றோம். ரெசிபி எப்படி இருக்குன்னு பாருங்க. பிடிச்சிருந்தா ட்ரை பண்ணுங்க. சுவைத்து விட்டால் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் இந்த ரெசிபி உங்க வீட்டில் இருக்கும்.

செய்முறை

முதலில் இரண்டு பெரிய உருளைக்கிழங்குகளை எடுத்து, குக்கரில் போட்டு உப்பு போட்டு கொஞ்சமா மஞ்சள் பொடி போட்டு வேக வைத்து எடுங்க. பிறகு இதை தோல் உரித்து ஓரளவுக்கு சின்ன துண்டு துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வர மிளகாய் – 4, தோல் உரித்த பூண்டு பல் – 10 போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

- Advertisement -

பிறகு இதை விழுதாக அரைத்துக் கொள்ளவும். நைசாக அரைச்சுக்கோங்க. அப்பதான் மசாலா நல்லா இருக்கும். பூண்டு சேர்த்து அரைத்த இந்த மசாலா விழுதின் வாசம் சும்மா சொல்ல கூடாதுங்க அதை சுவைத்து பார்த்தால் தான் புரியும்.

இப்போது இந்த உருளைக்கிழங்கு மசாலாவை தயார் செய்து விடுவோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து, கொஞ்சம் நிறையவே எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். ஒரு குழி கரண்டி அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு 1/2 ஸ்பூன், உளுந்து 1/2 ஸ்பூன், போட்டு தாளித்து கருவேப்பிலை 1 கொத்து போட்டு, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மிளகாய் பூண்டு விழுது இதில் ஊற்றி வதக்குங்கள்.

- Advertisement -

இந்த விழுது பச்சை வாடை நீங்கி எண்ணெய் பிரிந்து வரும்போது தேவையான அளவு உப்பு, போட்டு தயாராக வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இதில் சேர்த்து மெதுவாக கலந்து விடுங்கள். அடுப்பை சிம்மில் வைத்து விட்டு மசாலா அனைத்தும் உருளைக்கிழங்கில் ஏறும் வரை வதக்கி விட்டு, இறுதியாக 2 சிட்டிகை பெருங்காயத்தூள் தூவி, அடுப்பை அணைத்தால் சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா காரசாரமாக மணக்க மணக்க தயாராகி இருக்கும்.

இதையும் படிக்கலாமே: சேனைக்கிழங்கு வாங்கினா ஒரு முறை இப்படி மசாலா சேர்த்து ஃப்ரை பண்ணி பாருங்க. கொஞ்சம் கூட மசாலா உதிராமல் அப்படியே ஃபிஷ் ஃப்ரை சாப்பிடற மாதிரியே சூப்பரா இருக்கும்.

இதில் நாம் வெங்காயம் சேர்க்கவில்லை. சில பேர் வெங்காயம் சேத்துபாங்க. கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளிக்கும் போது அதில் கொஞ்சம் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கிய பின்பும் கூட இந்த மசாலாவை நீங்கள் தயார் செய்யலாம். அது உங்களுடைய விருப்பம் தான். இந்த சிம்பிள் ரெசிபியை கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -