- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சேனைக்கிழங்கு வாங்கினா ஒரு முறை இப்படி மசாலா சேர்த்து ஃப்ரை பண்ணி பாருங்க. கொஞ்சம் கூட...

சேனைக்கிழங்கு வாங்கினா ஒரு முறை இப்படி மசாலா சேர்த்து ஃப்ரை பண்ணி பாருங்க. கொஞ்சம் கூட மசாலா உதிராமல் அப்படியே ஃபிஷ் ஃப்ரை சாப்பிடற மாதிரியே சூப்பரா இருக்கும்.

- Advertisement -

கிழங்கு வகைகளிலே இந்த சேனை கிழங்கும், உருளைக்கிழங்கும் குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடக் கூடிய ஒன்று. அதிலும் இந்த சேனைக்கிழங்கை மீன் வறுவல் போல செய்து கொடுத்தால் போதும். குழந்தைகள் சைடிஷ் இல்லாமல் வெறுமனே சாப்பிட்டு காலி செய்து விடுவார்கள். அந்த அளவிற்கு சுவையான இந்த சேனைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

செய்முறை

இந்த வருவல் செய்வதற்கு முதலில் சேனைக்கிழங்கை அரை கிலோ வாங்கி மேல் தோல் சீவி அதை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த துண்டுகள் மிகவும் மெல்லிதாகவும் இருக்கக் கூடாது அதே சமயம் தடிமனாகவும் இருக்கக் கூடாது.

- Advertisement -

இப்போது அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீர் சூடானவுடன் அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் உப்பு, ஒரு சின்ன எலுமிச்சை பழ அளவு புளி இவை எல்லாம் சேர்ந்து பிறகு நறுக்கி வைத்த சேனைக்கிழங்கை இதில் சேர்த்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் சேனைக்கிழங்கு முக்கால் பாகம் வரை வேக வேண்டும்.

கிழங்கு முக்கால் பாகம் வரை வெந்த பிறகு தண்ணீரிலிருந்து கிழங்கை மட்டும் தனியாக வடித்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து விடுங்கள். அதன் பிறகு குழம்பு மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன், காஷ்மீரி மிளகாய்த் தூள் ஒரு ஸ்பூன், கான்பிளவர் மாவு ஒரு ஸ்பூன், இந்த சமயத்தில் உப்பை சரி பார்த்துக் கொள்ளுங்கள் போதவில்லை என்றால் கொஞ்சமாக சேர்த்து ஒரு டீஸ்பூன் எண்ணெய்யும் ஊற்றி இந்த மசாலாவை கிழங்கில் நன்றாக பிசறி அரை மணி நேரம் வரை அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் பேன் வைத்து நான்கு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். மசாலா ஊறிய கிழங்கை ஒவ்வொன்றாக எடுத்து ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக வைத்து எண்ணெயில் ஒரு புறம் நன்றாக சிவந்து வந்த பிறகு மறுபடியும் திருப்பி போட்டு எடுத்தால் சுவையான சேனை கிழங்கு வறுவல் தயார்

இந்த சேனைக்கிழங்கு வறுவல் மீன் வருவலை விடவே ரொம்பவே சுவையாக இருக்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்