- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டங்கள் தீர குலதெய்வ பரிகாரம்

கஷ்டங்கள் தீர குலதெய்வ பரிகாரம்

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் அவருடைய வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்கள் இருக்கும். இக்கறைக்கு அக்கறை பச்சை என்று கூறுவது போல ஒருவரின் கஷ்டத்தை கேட்கும் பொழுது நம்முடைய கஷ்டமே பரவாயில்லை என்று தோணும் அளவிற்கு பலருக்கும் பல கஷ்டங்கள் இருக்கும். இந்த கஷ்டங்களை நீக்குவதற்கு செய்யக்கூடிய இந்த கஷ்டங்கள் ஏற்பட காரணம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் தான். அப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல்களை நீக்கி நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் சரி செய்து மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி நான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எந்த ஒரு வழிபாட்டையும், பரிகாரத்தையும் நாம் செய்தோம் என்றால் அதனுடைய பலனை முழுமையாக பெற வேண்டும் என்னும் பட்சத்தில் நமக்கு குலதெய்வத்தின் அருள் என்பது வேண்டும். இதுவே குலதெய்வத்திற்கே பரிகாரமோ, வழிபாடோ செய்தோம் என்றால் அதன் பலன் எந்த அளவிற்கு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இந்த பதிவில் நம்முடைய கஷ்டங்கள் தீர குலதெய்வத்திற்கு சாற்ற வேண்டிய மாலை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். 54 அல்லது 108 என்ற எண்ணிக்கையில் காம்பு உடையாத விரலி மஞ்சள் வாங்கி வர வேண்டும். அடுத்ததாக 50 கிராம் அளவில் படிகார கல்லை வாங்கிக் கொள்ளுங்கள். இதை நன்றாக பொடித்து தூளாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் 10 ஏலக்காய், 10 கிராம்பு, பச்சை கற்பூரம் சிறிதளவு என்று அனைத்தையும் இடித்து தூளாக்கி இந்த படிகாரத்துடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இப்படி கலந்து இந்த படிகாரத்துடன் நாம் வாங்கி வைத்திருக்கும் விரலி மஞ்சளையும் சேர்த்து சிறிது பன்னீரை தெளித்து இதை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதாவது விரடி மஞ்சளில் இந்த பொடி ஒட்ட வேண்டும். இப்பொழுது இந்த விரலை மஞ்சளை நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக சிவப்பு நிற நூலை எடுத்து இந்த விரலிமஞ்சளை மாலையாக கட்ட வேண்டும்.

- Advertisement -

மாலையாக கட்டிய இந்த விரலி மஞ்சளை குலதெய்வ ஆலயத்திற்கு எடுத்துச் சென்று குலதெய்வத்திற்கு முன்பாக இடது கையில் இந்த மாலையை வைத்துக்கொண்டு வலது கையை அதற்கு மாலைக்கு மேல் வைத்து நம்முடைய கஷ்டங்கள் என்ன என்பதை மனதார கூறி அவை அனைத்தும் நீங்க வேண்டும் என்று வழிபாடு செய்து விட்டு அந்த மாலையை குலதெய்வத்திற்கு சாற்று கொடுக்க வேண்டும். பிறகு ஆலயத்தை மூன்று முறை வலம் வந்துவிட்டு திரும்பவும் இந்த மாலையை வாங்கி வந்து வீட்டு நிலை வாசலில் கட்டிவிட வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் மட்டுமல்லாமல் எந்த எதிர்மறையால் நமக்கு கஷ்டங்கள் ஏற்பட்டதோ அவை அனைத்துமே நீங்கிவிடும். இதோடு மட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை தோறும் இந்த மாலைக்கு சாம்பிராணி தூபம் காட்டுவதன் மூலம் இந்த விரலி மஞ்சள் சக்தியானது மேலும் மேலும் அதிகரித்து நமக்கு பல நன்மைகளை ஏற்படுத்தித் தரும். வருடத்திற்கு ஒரு முறை இந்த மாலையை நாம் மாற்றினால் போதும். பழைய மாலையை ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: லட்சுமி நரசிம்மர் தீப வழிபாடு

குலதெய்வத்தை மனதார வழிபட்டு இந்த மாலையை நம்முடைய வீட்டில் வைத்துக் கொள்வதன் மூலம் அனைத்து விதமான நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.

சற்று முன்