ஆண்களிடம் இருக்கவே கூடாத மூன்று குணங்கள். இந்த 3 குணங்கள் ஆண்களிடம் இருந்தால், குடும்பத்தில் நிச்சயம் சந்தோஷம் இருக்காது

men
- Advertisement -

குடும்பத்தில் பிரச்சனைகள் வருவதற்கு பெண்கள் மட்டும் காரணமல்ல. பெண்களிடம் இருக்கும் குணாதிசயங்கள் மட்டும் காரணமல்ல. ஆண்களிடமும் எத்தனையோ கெட்ட குணங்கள் இருக்கின்றது. அவை அத்தனையையும் பட்டியல் போட்டால் நம்மால் இந்த ஒரு பதிவில் கூறிவிடமுடியாது. குறிப்பாக முதலில் இருக்கக்கூடாத அந்த மூன்று குணங்கள் என்னென்ன என்பதைப் பற்றி மட்டும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

fight

ஆண்களிடம் இருக்கவே கூடாது குணம் என்றால் அந்த குணத்தில் முதலிடம் பிடிப்பது இதுதான். எந்த ஆண்கள் ‘ஆண்களை விட பெண்கள் தாழ்ந்தவர்கள். என்றைக்குமே ஆண்களுக்கு இணையாகப் பெண்களால் சிந்திக்க முடியாது. பெண்களுக்கு என்ன தெரியும், இவர்கள் சொல்லி நாம் என்ன கேட்பது. வீட்டு வேலையைச் செய்வதும் குழந்தைகளை பார்த்துக் கொள்வது மட்டுமே பெண்களுடைய கடமை. ஆண்களுக்கு கீழேதான் பெண்கள் இருக்க வேண்டும். சில ஆண்கள், ஆண்களுக்கு காலடியில்தான் பெண்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்’.

- Advertisement -

இந்த குணத்தை கொண்ட ஆண் வர்க்கத்தால் நிச்சயமாக வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடையவே முடியாது. அப்படி முன்னேற்றம் அடைந்தாலும் அந்த முன்னேற்றம் போலியானதாக தற்காலிகமானதாக தான் இருக்கும். அந்த முன்னேற்றம் நிரந்தரமானதாக இருக்காது. அந்த ஆண் மகனுடைய வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது.

men1

இரண்டாவது குணம். நிறைய ஆண்கள் பெண்களை சந்தேகப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஸ்தானத்தில் இருக்கும் ஆணாக இருந்தாலும் சரி, தன்னுடன் இருக்கும் பெண்ணை சந்தேகப்படக்கூடாது. தந்தையாக இருந்தால் தனக்கு பிறந்த பெண்குழந்தையை சந்தேகப்படக்கூடாது. கணவனாக இருந்தால் மனைவியை சந்தேகப்படக் கூடாது.

- Advertisement -

பெண் குழந்தையை பெற்ற அப்பாக்கள் தங்களுடைய மகளின் மேல் அக்கறை காட்ட வேண்டுமே தவிர, அந்த அக்கறை எக்காரணத்தைக் கொண்டும், ஒரு துளி அளவும் சந்தேகமாக மாறி விடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆண்களின் மனதிற்குள் சந்தேகம் என்ற ஒன்று புகுந்துவிட்டால் அந்த வீட்டில் நிச்சயமாக நிம்மதி இருக்காது.

happy-family

மூன்றாவது குணம். எப்போதுமே தன்னுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டும் ஆண்களின் குடும்பத்திலும் சந்தோஷம் இருக்காது. அதாவது அதிகப்படியான சுயநலம் கொண்ட ஆண்கள். இப்படிப்பட்டவர்கள் வீட்டில் இருக்கும் மற்றவர்களைப் பற்றி கவலைப்படவே மாட்டார்கள். தான் நன்றாக இருந்தால் மட்டும் போதும் என்று நினைப்பவர்கள்.

அதாவது இதை எப்படி நன்றாக புரியும்படி சொல்வதென்றால், ‘ஹோட்டலுக்கு சென்று நல்ல உணவு சாப்பிடுவதாக இருந்தாலும் சரி, வெளியிடங்களுக்கு சென்று ஊரை சுற்றிப் பார்ப்பதற்கு சென்றாலும் சரி, குடும்பத்தைப் பற்றி அவர்கள் சிந்திக்கவே மாட்டார்கள்’. தான் தனக்கு என்று மட்டும் சிந்தித்து சந்தோஷத்தை தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும்.

indian-family

தனக்குக் கிடைக்கக் கூடிய சந்தோஷத்தை தன் மனைவி குழந்தை தாய் தந்தை இவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் சுயநலமாக இருப்பவர்களுக்கும் குடும்பத்திலும் சந்தோஷம் இருக்காது. இப்படிப்பட்ட ஆண்கள் ஆக நீங்கள் இருந்தால் உங்களுடைய மனதிற்கு மேல் சொன்ன விஷயங்களை திருத்திக்கொள்ளலாம் என்ற எண்ணம் எழுந்தால் இன்றிலிருந்து திருத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய குடும்பத்தில் சந்தோஷம் பிறக்க தொடங்கிவிடும்.

- Advertisement -