- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆனி மாதம் பரணி நட்சத்திர சிறப்பு வழிபாடு

ஆனி மாதம் பரணி நட்சத்திர சிறப்பு வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு மாதத்தில் வரக்கூடிய கிழமைக்கும், நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வகையில் பார்த்தால் இன்று ஆடி மாதம் பரணி நட்சத்திரத்திற்கு உரிய சிறப்பை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சனிக்கிழமையோடு சேர்ந்து இந்த பரணி நட்சத்திரம் வந்திருப்பது இன்னொரு சிறப்பு. சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கங்களும், பைரவரை வழிபாடு செய்யும்போது குறையும்.

தீராத நோய் நொடியால் அவதிப்படுபவர்கள், நீண்ட நாட்களாக படுக்கையிலேயே படுத்து கிடப்பவர்கள், இன்று பைரவரை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யலாம். வீட்டில் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது என்பவர்களும் இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம். இதுபோக தீராத கடனால் அவதிப்படுபவர்களும் இன்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். சனிபகவானால் தாக்கங்கள் அதிகமாக இருக்கிறது என்றாலும் இன்று இந்த ஆன்மீகம் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

ருணம் தீர்க்கும் பைரவர் வழிபாடு.

ருணம் என்றால் கடன் நோய் இரண்டுமே அதில் அடங்கிவிடும். இன்று மாலை 5:30 மணிக்கு மேல் தான் பரணி நட்சத்திரம் பிறக்கிறது. மாலை நேரத்தில் பைரவர் வழிபாடு செய்வது சிறப்பு.

இன்று மாலை 6:30 மணிக்கு மேல் உங்கள் கையால் வில்வ இலைகளால் மாலை கட்டி பைரவருக்கு போட்டு, யாருக்கு உடல்நிலை சரியில்லையோ, அவர்களுடைய பெயரைச் சொல்லி பைரவருக்கு ஒரு அர்ச்சனை செய்து கொண்டால், சாகும் நிலையில் இருப்பவர்கள் கூட, உயிர் பிழைத்துக் கொள்வார்கள் என்பது ஒரு நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. வில்வ இலை எல்லா இடத்திலும் கிடைக்கும்.

- Advertisement -

வில்வ இலையால் பைரவருக்கு மாலை கட்டி போடுங்கள். உங்களுக்கு வன்னி மரத்து இலைகள் கிடைக்கும் என்றால் இன்னும் சிறப்பு. வன்னி மரத்து இலையைக் கட்டி பைரவருக்கு இன்றைய தினம் மாலை போட்டு வேண்டிக் கொண்டால், வேண்டியது நிச்சயம் நடக்கும். கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலை, தற்கொலை செய்துகொண்டு சாகும் நிலையில் இருப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம் நிச்சயம் பலன் உண்டு. கடன் சுமை குறையும்.

இன்னைக்கு அர்ச்சனைக்கு பைரவருக்கு தேங்காய், வெற்றிலை பாக்கு, பூ பழம் மாலை வாங்கி செல்லும்போது, கூடவே சந்தனாதி தைலம் அல்லது கற்பூராதி தைலம் இதில் ஏதாவது ஒன்றை வாங்கி வைரவருக்கு கொடுத்து அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். கை மேல் பலனை பெறலாம். முடிந்தால் அஷ்டமி திதியில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுவோம்.

இதையும் படிக்கலாமே: வாராகி அம்மன் கனவில் வர வழிபாடு

அதேபோல இன்றைய தினமும் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். அதி அற்புதம் வாய்ந்த இந்த வழிபாட்டு முறை உங்களை தீரா துன்பத்திலிருந்து விடுபட வைக்கும் நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்