நம்மால் வெளியே கூற இயலாத பிரச்சனைகள் என்று பல பிரச்சினைகள் இருக்கும். அந்த பிரச்சனையை நாம் நம்முடைய தெய்வத்திடம் மட்டுமே கூறி ஆறுதல் அடைவோம். ஏதாவது ஒரு நல்ல தீர்வை தரக் கூடாதா என்று வேண்டுவோம். அப்படி வேண்டக்கூடிய தெய்வங்களும் மிகவும் துடிப்பான தெய்வமாக திகழக்கூடியவள் தான் வாராகி அம்மன், வாராகி அம்மனிடம் நம்முடைய பிரச்சினையை கூறி முழுமனதோடு வழிபாடு செய்தோம் என்றால் அந்தப் பிரச்சினைக்குரிய தீர்வை வாராகி அம்மனே நமக்கு காட்டுவாள் என்று கூறப்படுகிறது. அதிலும் நம்முடைய கனவில் வந்து நம்மிடம் பேசும் அளவிற்கு வாராகி அம்மனின் வழிபாடு நமக்கு உதவும். அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வாராகி அம்மன் கனவில் வர வழிபாடு
எந்த ஒரு தெய்வத்தை நாம் முழுமனதோடு வழிபாடு செய்தாலும் அந்த தெய்வம் நம்மிடம் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து பேசும் என்றே கூறலாம். நமக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் பொழுது அந்த தெய்வம் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து நமக்கு உதவி செய்யும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் வாராகி அம்மனை நாம் இந்த முறையில் மந்திரத்தை கூறி 11 நாட்கள் வழிபாடு செய்ய தீர்க்க முடியாத பிரச்சனைக்குரிய தீர்வை நம் கனவில் தோன்றி காட்டுவாள் என்று கூறப்படுகிறது.
இந்த வழிபாட்டை வளர்பிறையில் வரக்கூடிய பஞ்சமி அல்லது அஷ்டமி தினத்தில் செய்ய ஆரம்பிக்க வேண்டும். தொடர்ச்சியாக 11 நாட்கள் இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நம்முடைய வீட்டில் வாராஹி அம்மனின் படமோ சிலையோ இருக்க வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது இரவு 8 மணிக்கு மேலோ இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு முன்பாக வாராகி அம்மனுக்கு சிவப்பு நிற மலர்களால் அலங்காரம் செய்து பானகத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
பிறகு வாராகி அம்மனுக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு வாராகி அம்மனுக்குரிய இந்த மந்திரத்தை 1100 முறை கூற வேண்டும். நம்முடைய பிரச்சினைக்குரிய தீர்வை வாராகி அம்மன் நம்முடைய கனவில் வந்து நம்மிடம் பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் ஸ்வப்ன வாராகியை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி ஸ்வப்ன வாராகியை வழிபாடு செய்வதற்கு உதவக்கூடிய மூல மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம்.
மந்திரம்
“ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி அகோரே ஸ்வப்னம் தர்ஷய ட்டஹ ட்டஹ ஸ்வாஹா”
இந்த மந்திர வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது மிகவும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும். அசைவத்தை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். பெண்கள் தீட்டு சமயத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளக்கூடாது. இந்த வழிபாட்டை செய்ய ஆரம்பித்த பிறகு எந்தவித தீட்டு காரியங்களிலும் ஈடுபடக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. துடிப்பான தெய்வமாக திகழக்கூடிய வாராகி அம்மனை முழு மனதோடு முழு பக்தியோடு சுத்தமாக யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய பிரச்சினைக்குரிய தீர்வை வாராகி அம்மன் காட்டுவாள்.
இதையும் படிக்கலாமே: கோடீஸ்வர யோகம் ஏற்பட ஏகாதசி பரிகாரம்
யாராலும் தீர்க்க முடியாத பிரச்சினைக்குரிய தீர்வை தரக்கூடிய வாராகி அம்மனை முழு மனதோடு எந்தவித சந்தேகமும் இல்லாமல் அன்போடும் பாசத்தோடும் வழிபாடு செய்ய வாராகி அம்மன் நமக்காக இறங்கி வந்து நம் பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.