பாவம் தீர்க்கும் ஆனி மாத தேய்பிறை ஏகாதசி விரதம்

perumal
- Advertisement -

நாளை மங்கள வாரம் என்று சொல்லப்படும் செவ்வாய்க்கிழமை. ஆனி மாத தேய்பிறை ஏகாதசி திதி இருக்கிறது. இதோடு சேர்த்து கிருத்திகையும் நாளைய தினம் பிறக்கவிருக்கின்றது. அது மட்டுமல்லாமல் பெருமாளுக்கு உரிய கூர்ம ஜெயந்தியும் நாளைய தினம் வரவேற்கின்றது. இத்தனை சிறப்பம்சங்கள் பொருந்திய இந்த நாளில் எவர் ஒருவர் பெருமாள் வழிபாட்டை தவறாமல் செய்கின்றாரோ, அவருக்கு நிச்சயம் செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. நாளைய தினம் பெருமாளை நினைத்து எப்படி விரதம் இருந்து வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

ஆனி மாத தேய்பிறை ஏகாதசி விரதம்

நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, கோவிந்தா கோவிந்தா என்ற நாமத்தைச் சொல்லி விரதத்தை தொடங்குங்கள். துளசி இலைகளை முந்தைய நாளே வாங்கி வைத்து, காலையில் பெருமாளுக்கு சூட்ட வேண்டும்.

- Advertisement -

கிருஷ்ணர் திருவுருவப்படம், பெருமாள் படம், எது இருந்தாலும் அந்த படத்திற்கு துளசி இலைகளை போட்டு ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீர், 2 துளசி இலைகளை போட்டு தீர்த்தம் வைத்து வழிபாடு செய்து இந்த தீர்த்தத்தை குடித்து விரதத்தை தொடங்கலாம். விரதம் இருக்க முடியும் என்பவர்கள் நாளை முழுவதும் உபவாசம் இருந்து விரதம் இருக்கலாம். ஏகாதசி விரத மேற்கொள்வது என்பது நமக்கு பெரிய அளவில் புண்ணியத்தை கொடுக்கும். விரதம் எடுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. 1 டம்ளர் தீர்த்தத்தை பெருமாள் முன்பு வைத்து பருகுங்கள் தவறு கிடையாது.

முடியாதவர்கள் அவரவர் உடல் சூழ்நிலைக்கு ஏற்ப பால் பழம் பலகாரம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளுங்கள். மாலை பெருமாளுக்கு உங்களால் முடிந்த நெய்வேத்தியம் செய்து வைத்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி கற்பூர ஆரத்தி காண்பித்து ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை சொல்லி செய்த பாவங்கள் எல்லாம் கரைந்து போக வேண்டும்.

- Advertisement -

இனி பாவங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் அமையக்கூடாது என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வீட்டுக்கு பக்கத்தில் பெருமாள் கோவில் இருந்தால் அங்கு சென்று பெருமாளுக்கு உங்களால் முடிந்த துளசி இலைகள் பூ பழம் வெற்றிலை பார்க்க தேங்காய் வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்து இன்றைய வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.

விரதம் இருப்பவர்கள் பெருமாள் கோவிலில் கொடுக்கும் தீர்த்தத்தை குறித்து உங்களுடைய விரதத்தை நிறைவு செய்யுங்கள். அதேபோல விரதம் இருந்தால் நிறைய தண்ணீர் குடிக்கலாம். தண்ணீர் குடிக்காமல் வெறும் வயிற்றோடு விரதம் இருக்கக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

எந்த ஒரு வழிபாடாக இருந்தாலும் அன்னதானம் செய்வதன் மூலம் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று சொல்லுவார்கள். நாளைய தினமும் உங்களால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு பசியோடு இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உணவுப் பொருட்களை வாங்கி கொடுங்கள். வாழ்க்கையில் அறிந்தோ அறியாமலோ நிறைய பாவங்களை செய்து விடுகின்றோம்.

அடுத்தவர்கள் மனது புண்படும்படி பேசுகின்றோம். வியாபாரத்தில் அடுத்தவர்களை தோல்வி அடைய செய்கின்றோம். இப்படி அறிந்தும் அறியாமலும் செய்யக்கூடிய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு பாவ விமோசனம் அடைய இந்த ஏகாதசி நாள் சிறந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பிட்டு சொல்லப்போனால் பிரம்மஹத்தி தோஷம் என்று சொல்லுவார்கள் அல்லவா, அத்தனை மிகப்பெரிய தோஷங்கள் கூட நீங்குமாம் இந்த ஏகாதசி விரதம் இருந்தால்.

இதையும் படிக்கலாமே: வங்கி சேமிப்பு கணக்கு தொடங்க சிறந்த நாட்கள்

நாளைய தினம் பெருமாளின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருங்கள். பெருமாளின் பாடலை நேரம் கிடைக்கும் போது கேளுங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -