கஷ்டங்கள் தீர ஆனி மாதத்திற்கு செல்ல வேண்டிய கோவில்

uraiyur vekkali
- Advertisement -

ஆலய வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு ஆலயங்களில் இருக்கக்கூடிய தெய்வத்திற்கு ஒவ்வொரு விதமான வழிப்பாட்டு முறைகளும் பூஜை முறைகளும் செய்வார்கள். இன்னும் சில ஆலயங்களில் திருவிழாக்கள் கூட நடக்கும். அப்படி சிறப்பு மிகுந்த ஆலயங்கள் சிலவற்றை நாம் அதற்குரிய சிறப்புகள் நிறைந்த மாதத்தில் சென்று வழிபடும் பொழுது அதன் பலனால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும். அப்படி நம்முடைய கஷ்டத்தை தீர்க்கக் கூடிய ஆனி மாத கோவிலை பற்றி நான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கஷ்டம் தீர கோவில் வழிபாடு

நம்மை காக்கும் தெய்வமாக, இந்த உலகத்திற்கே தாயாக திகழக் கூடியவள் தான் பராசக்தி. அப்படிப்பட்ட பராசக்தியின் மறு அவதாரமாக பல வடிவங்களில் அம்மன் நம்முடைய தமிழ்நாட்டிலும், உலக அளவில் பல இடங்களில் ஆலயங்களில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கிறாள். அப்படிப்பட்ட ஒரு ஆலயமாக திகழக்கூடியது தான் வெக்காளியம்மன் கோவில்.

- Advertisement -

இந்த கோவிலானது திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் என்னும் ஊரில் இருக்கிறது. இந்த அம்மனுக்கு என்று மிகவும் விஷேசகரமான ஒன்று என்னவென்றால் இந்த அம்மனுக்கு மேல் கூரை என்பது கிடையாது. வெயிலிலும், மழையிலும் நனைந்த வண்ணம் காட்சியளிக்க கூடிய ஒரு தெய்வமாக தான் இந்த அம்மன் திகழ்கிறார். இந்த அம்மனை பொதுவாக நாம் வழிபடும் பொழுது எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

இதோடு மட்டுமல்லாமல் நம்முடைய கஷ்டங்களும் தீரும். தடைகளும் தவிடு பொடியாகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட அம்மனுக்கு ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா போன்ற பல விழாக்கள் நடைபெறுவது உண்டு. அந்த மாதத்தில் அதனால் ஆனி மாதத்தில் அந்த அம்மனை சென்று வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் இருக்கிறது. பிரிந்து சென்று விட்டார்கள் அல்லது பிரியும் சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்னும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை அன்று அந்த அம்மனை சென்று வழிபட்டு விட்டு அந்த அம்மனை அடிப்பதட்சணம் செய்து வருவதன் மூலம் கணவன் மனைவிக்குள் நல்ல உறவு மேம்படும் என்றும் ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது.

இதோடு மட்டுமல்லாமல் இந்த அம்மனை சென்று தரிசிப்பவர்களுக்கு தொழில் ரீதியாக இருக்கக்கூடிய நேரடி மற்றும் மறைமுக எதிரிகளின் பிரச்சினைகள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. திருமணத்தடை இருப்பவர்களும் இந்த அம்மனுக்கு புடவை வாங்கி கொடுத்து வழிபடுவதன் மூலம் விரைவிலேயே திருமண யோகம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாற கொள்ளு பரிகாரம்

அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆனி மாதத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் இந்த அம்மனை சென்று கண் குளிர் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும் முழு நம்பிக்கையுடன் அந்த அம்மனை வழிபட்டு நல்ல பலன்களை பெற வேண்டும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

- Advertisement -