உங்களின் பண கஷ்டங்களை போக்கி நன்மைகள் அருளும் ஆன்மீக பரிகாரங்கள்

tulsi

இன்பமும், துன்பமும் கலந்தது தான் வாழ்க்கையின் அனுபவமாகும். அனேகமாக உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் வாழ்விலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கஷ்டங்களும் நெருக்கடிகளும் ஏற்படுகின்றன. அத்தகைய சமயங்களில் அவர்களுக்கு பெரிதும் துணையாய் இருப்பது இறை நம்பிக்கையாகும். அந்த இறை நம்பிக்கையை அடிப்படையாக வைத்து வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களைப் போக்குவதற்கான சில ஆன்மீகப் பரிகாரங்களை நமது முன்னோர்கள் நமக்கு அருளியிருக்கின்றனர். அப்படியான சில அற்புத ஆன்மீக பரிகார குறிப்புகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

om

தற்காலங்களில் பெரும்பாலான மனிதர்களை ஆட்டுவிக்கும் முக்கிய பிரச்சினைகளாக திருமண தாமதம், குடும்ப பொருளாதார கஷ்ட நிலை மற்றும் படித்த படிப்புக்கேற்ற வேலை வாய்ப்பின்மை ஆகியவை இருக்கின்றன. இத்தகைய கஷ்டங்களை அனுபவிக்கும் நபர்கள் தங்களின் தோஷங்கள் நீங்கி விரும்பிய பலன்களை பெற ஆண்களாக இருப்பவர்கள் சனிக்கிழமை அன்றும் பெண்கள் வெள்ளிக்கிழமையன்றும் நல்லெண்ணெயை உடல் முழுவதும் நன்கு பூசி மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து நீரில் பஞ்சகவ்யம் சேர்த்து கலந்து, குளித்து முடித்ததும் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று, உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் விலகி மேற்கூறிய பிரச்சனைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

ஆரோக்கியமான உடல் இருந்தால் மட்டுமே வாழ்வில் பலவற்றை சாதிக்க முடியும். இக்காலத்தில் பெரும்பாலான நபர்களுக்கு உடலில் ஏதாவது ஒரு வகையான நோய், குறைபாடு போன்றவை ஏற்பட்டு அவர்களை மிகுந்த அவதிக்குள்ளாக்குகிறது. இப்படிப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் மதியம் 12 மணியிலிருந்து 1.30 வெயில் மணிக்குள்ளாக அரச மர வேரை தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் அனைத்தும் விரைவில் தீரும். உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டும் நோய் பாதிப்பு உண்டானவர்கள் அரச மரத்தை தொட்டு பிறகு உடலில் பாதிப்புக்குள்ளான இடத்தில் தொட்டு வணங்க வேண்டும்.

உங்கள் வீட்டிற்கு பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அவை உங்கள் செல்வம் வரவையும், வசீகர சக்தியும் பாதிக்கும். மேலும் உங்கள் வீட்டில் துஷ்டசக்திகள் புகுவதற்கும் வழிவகை செய்யும். ஒரு செவ்வாய்க்கிழமை அன்று உங்கள் வீட்டை சுற்றியிருக்கும் வாடிய செடிகளை வேருடன் பிடுங்கி, ஓடும் ஆற்று நீரில் போட்டு விடுவதால் துஷ்ட சக்தி பாதிப்புகள் நீங்கும்.

- Advertisement -

cow shed

மிகுதியான கடன் பிரச்சனை மற்றும் கடுமையான வறுமை நிலையால் அவதிப்படுபவர்கள் ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நாட்டு பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வருவதால் வீட்டில் துரதிர்ஷ்டங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பெருகும்.

thulasi chedi

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருக்கும் துளசி மாடத்திற்கு தீபமேற்றி, தூபங்கள் காட்டி துளசி செடியை சுற்றி வந்து வழிபாடு செய்பவர்களுக்கு துஷ்ட சக்திகள் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது. வீட்டில் வளமை என்றென்றும் நிலைத்திருக்கும்.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு என்றும் குறையாத பணவரவிற்கு இதை மட்டும் செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Aanmiga pariharam in Tamil. It is also called as Palan tharum pariharam in Tamil or Parihara palangal in Tamil or Varumai neenga pariharam in Tamil or Eliya pariharangal in Tamil.