உங்களுக்கு என்றும் குறையாத பணவரவு உண்டாக இதை மட்டும் செய்யுங்கள்

money

செல்வம் என்கிற பணத்தை மறுத்துவிட்டு இன்றைய உலகில் எவரும் வாழ்ந்துவிட முடியாது. நம்மில் பலருக்கும் மிகுதியான செல்வம் ஈட்ட முடியாவிட்டாலும் சம்பாதித்த பணம் தேவையற்ற செலவுகளால் வீணாகாமல், சேமிப்பு அதிகமாக வேண்டும் என்கிற விருப்பமே அதிகம் உள்ளது. செல்வத்தின் அதிபதி குபேரன் என நமது சாத்திரங்கள் கூறுகின்றன. அந்த குபேரனின் அருள் நமக்கு இருக்கும் பட்சத்தில் தாராளமான பணவரவு, அதிக செல்வச் சேர்க்கையும் உண்டாகும். அப்படியான நிலையை அடைய நாம் செய்ய வேண்டிய எளிய பரிகார முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

kubera

தங்களுக்கு வற்றாத பண வரவு ஏற்பட விரும்பும் பெண்கள் எப்போதும் தங்கள் கைகளில் மருதாணி அல்லது மஞ்சள் பூசி கொள்வதால் அவர்களுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படாமல் செல்வம் மகளான மகாலட்சுமி அருள் புரிவாள். ஆண்களாக இருக்கும் பட்சத்தில் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, குளித்து முடித்து விட்டு தங்களின் வலது உள்ளங்கையில் சிறிது சந்தனம் அல்லது மஞ்சள் பூசிக்கொண்டு, ஒரு ருபாய் அல்லது ஐந்து ருபாய் நாணயத்தை எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டு வைத்து அதனுடன் சிறிது வெற்றிவேர் எனப்படும் வேரின் சிறு துண்டை வைத்துக் கொண்டு உள்ளங்கையைக் உங்கள் வாய்க்கருகே கொண்டு சென்று “ஓம் குபேர லட்சுமியாய நம” என்கிற மந்திரத்தை குபேரனை மனதில் தியானித்தவாறே உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்துவர வேண்டும்.

இவ்வாறு பூஜை செய்து முடித்த பிறகு கையில் வைத்திருந்த அந்த சில்லறை நாணயத்தை உங்களின் அன்றைய தின பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் இந்த பூஜைக்கு புது நாணயத்தையும் புது வெற்றிவேரின் சிறு துண்டு எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மேற்கண்ட மந்திர உச்சாடணம் செய்ய வேண்டும். இந்த பூஜை முறையை தினமும் அதிகாலை 5.30 மணிக்குள்ளாக செய்வதால் மிக விரைவில் பலன் அளிக்கக்கூடும்.

money

தொடர்ந்து நாணயங்கள் வைத்து குபேர லட்சுமி மந்திரம் துதித்து பூஜை செய்பவர்களுக்கு வெளியில் பணம் ஈட்டுவதற்கான பணிகளில் ஈடுபடும் போது அதிக அளவு தனவரவு உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும். தாங்கள் சேமிக்கின்ற தொகை சிறிய அளவாக இருந்தாலும் தேவையற்ற விரயங்கள் ஏற்படாமல் செல்வ சேர்க்கை அதிகரிக்கும். வீட்டில் பணம் எப்போதும் குறையாத நிலையை உண்டாக்கும். பல்வேறு வகைகளில் பொருளீட்டும் வாய்ப்புகள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் குழந்தைக்கு சூட்டக்கூடிய 1000 சிவன் பெயர்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vatratha selvam pariharam in Tamil. It is also called as Kubera valipadu manthiram in Tamil or Panam athigam vara in Tamil or Pana varavu athikarikka in Tamil or Selvam sera pariharam in Tamil.