ஆசைகள் என்பது நம் அனைவருக்கும் இருக்கத்தான் செய்யும். அந்த ஆசைகள் நியாயமான ஆசைகளாக இருக்கும் பட்சத்தில் நம்முடைய முயற்சிக்குரிய பலன்களை நம்மால் பெற முடியும். ஆசைப்பட்டால் மட்டும் பத்தாது. அந்த ஆசைகள் நிறைவேறுவதற்கு நம்முடைய கடின முயற்சியும் வேண்டும். ஆனால் பலருக்கு எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அவர்களின் ஆசை நிறைவேறாமல் போகும். அப்படிப்பட்டவர்கள் விநாயகப் பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்தால் அவர்களின் ஆசைகள் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகர் பெருமான். விநாயகப் பெருமானிடம் நவகிரகங்களும் அடங்கி இருக்கிறது என்றும் கூறுவார்கள். நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்தையும் நீக்குவதற்கு விநாயகப் பெருமான் அருள் புரிவார் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு செய்வோம். அப்பொழுதுதான் நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி நாம் செய்யும் செயல் வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட படிப்பை படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் அந்த படிப்பை படிப்பதற்குரிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இதே போல் ஒரு சிலர் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசைப்படுவார்கள். அதற்கான முயற்சியை மேற்கொண்டாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் தடைகள் ஏற்படும். இப்படி திருமணத்தடை, குழந்தை பேரில் தடை, வேலையில் தடை, தொழிலில் தடை என்று பல தடைகள் இருக்கும். இந்த தடைகள் அனைத்தையும் நீக்குவதற்கு விநாயகப் பெருமானை நாம் வழிபட வேண்டும்.
இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேங்காய் மட்டும் இருந்தால் போதும். வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய விநாயகர் கோவிலுக்கு போனால் போதும். இந்த வழிபாட்டை யார் செய்கிறார்களோ அவர்களுக்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக பார்த்து ஆரம்பித்தால் போதும். வேறு எந்த நிபந்தனையும் கிடையாது. அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது ஒரு தேங்காயை வாங்கி அதை சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் தடவி குங்கும பொட்டு வைத்துக் கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும்.
விநாயகருக்கு முன்பாக இந்த தேங்காயை வைத்துவிட்டு விநாயகரை 9 முறை வலம் வர வேண்டும். ஒன்பதாவது முறை வலம் வரும் பொழுது விநாயகர் பெருமானிடம் உங்களுடைய ஆசைகள் என்னவோ அந்த ஆசைகளை கூற வேண்டும். பிறகு அந்த தேங்காயை எடுத்து சிதறு தேங்காயாக உடைத்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து 18 நாட்கள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.
யார் வேண்டுமானாலும் தங்கள் ஆசை நிறைவேற வேண்டும் என்பதற்காக இந்த வழிபாட்டை செய்யலாம். ஆசைகள் நியாயமான ஆசைகளாக இருக்க வேண்டும். இந்த முறையில் நாம் விநாயகர் பெருமானை வழிபடும் பொழுது விநாயகப் பெருமானின் அருளால் அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கி 18 நாட்களுக்குள்ளேயே அந்த காரியம் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் வந்து சேரும்.
இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் சண்டை சச்சரவு நீங்க தேங்காய் பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த விநாயகர் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.