நாளை ஆயுதபூஜை! சமையலறையில் இருக்கும் இந்த 3 பொருட்களை, பூஜை அறையில் இப்படி வைத்து வழிபட்டால் உங்களுடைய அடுத்த தலைமுறைக்கும், தன தானியத்திற்கு பஞ்சமே இருக்காது.

saraswathi1
- Advertisement -

நம்முடைய வீட்டில் எந்த ஒரு பண்டிகையை கொண்டாடுவதாக இருந்தாலும் அந்த பண்டிகைக்கென்று பாரம்பரியமான வழிபாட்டு முறையை, நம்முடைய முன்னோர்கள் வைத்திருப்பார்கள். அதன்படி உங்களுடைய வீட்டில், உங்களுடைய வழக்கப்படி இந்த ஆயுத பூஜையை எப்படி கொண்டாடுகின்றார்களோ அதன் படி கொண்டாடுங்கள். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால், நம்முடைய வீட்டில் காலத்திற்கும் கஷ்டம் வரக்கூடாது, மனநிம்மதி இருக்க வேண்டும். தானியங்கள் குறைவில்லாமல் நிறைவாக இருக்க வேண்டும். நம்முடைய அடுத்த சந்ததியினரும் கஷ்டப்படாமல் வாழவேண்டும் என்பதற்காகத் தான் நாம் பூஜை புனஸ்காரங்களை செய்கின்றோம் அல்லவா?

saraswathi11

இப்படியாக, பல நன்மைகள் நம்மை தேடி வருவதற்கு, பல நன்மைகள் அடுத்த சந்ததியினரையும் தொடர்வதற்கு, சின்ன சின்ன மாற்றங்களை நம்முடைய பூஜை அறையில் கொண்டு வருவதிலும், நம்முடைய பழக்க வழக்கங்களில் கொண்டு வருவதிலும் தவறு எதுவும் கிடையாது என்ற கருத்தை மனநிறைவோடு ஏற்று இந்த பதிவினை தொடங்கலாம்.

- Advertisement -

உங்கள் வீட்டு முறைப்படி செய்யக்கூடிய பூஜையில், இந்த சின்னச் சின்ன மாற்றங்களை சேர்த்து செய்வதில் உங்களுக்கு மனநிறைவு இருந்தால் மட்டும், இந்த பதிவில் கொடுக்கப்படும் குறிப்புகளை பின்பற்றி கொள்ளலாம். பொதுவாக ஆயுத பூஜை அன்று வீட்டில் பூஜை செய்யும் போது, சமையலறையில் இருக்கக்கூடிய, சமையலுக்கு பயன்படுத்த கூடிய பொருட்கள், குழந்தைகள் படிப்பதற்காக வைக்கக் கூடிய புத்தகங்கள், அவரவர் தொழிலுக்காக பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இவைகளுக்கு பூஜை போடுவார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

anjarai-petti

குறிப்பாக பெண்கள், அவரவர் வீட்டில் இந்த ஆயுதபூஜை வழிபாட்டை செய்யும்போது, சமையலறையில் இருக்கக்கூடிய அஞ்சறைப் பெட்டி, ஆழாக்கு அல்லது அரை படி அல்லது படி, உங்கள் வீட்டில் சமையலுக்கு அளப்பதற்கு எதை பயன்படுத்துவீர்களோ அது, அடுத்ததாக சமையலறையில் பயன்படுத்தும் ஆயுதம் கத்தி, அருவாமனை, எதுவாக இருந்தாலும் சரி. இந்த மூன்று பொருட்களையும் சுத்தம் செய்துவிட்டு பூஜை அறையில் வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, கட்டாயம் தீப, தூப ஆரத்தி காட்டி வழிபட வேண்டும் இதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -

ஆனால், சுத்தம் செய்த அஞ்சறைப் பெட்டி, சுத்தம் செய்த ஆழாக்கு, சுத்தம் செய்த அருவாமனை அல்லது கத்தி இந்த பொருட்களை வெறுமனே பூஜை அறையில் வைத்து பூஜை செய்வதைவிட, அந்த அஞ்சறைப் பெட்டிக்குள் ஓரிரண்டு தானியங்களையோ அல்லது ஓரிரண்டு ஏலக்காய்களையோ அல்லது கிராம்பையோ போட்டு பூஜை செய்யலாம். (குறிப்பிட்ட இந்த பொருட்களை தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சோம்பு, ஜீரகம் எதுவாக இருந்தாலும் காலியாக இருக்கும் அஞ்சறைப்பெட்டி டப்பாக்களில் சிறிதளவு போட்டுக் கொள்ளலாம்.) அரிசியை அளக்கும் ஆழாக்கு உள்ளே ஒரு கைப்பிடி அரிசியை போட்டு பூஜை செய்யுங்கள். கத்தியில் ஒரு எலுமிச்சம் பழத்தை சொருகி வைத்து விட்டு அதன் பின்பு பூஜை அறையில் வையுங்கள்.

padi

குழந்தைகள் படிக்கின்ற புத்தகத்தில் கூட, எழுதாத, வெறுமனே பேப்பர் இருக்கும் புத்தகத்தை வைக்கக்கூடாது. அவர்கள் எழுதி படித்து பயன்படுத்திய புத்தகங்கள், அலுவலகங்களாக இருந்தால், அவர்கள் எழுதி பயன்படுத்திய கணக்கு நோட்டுப் புத்தகங்களை பூஜை அறையில் வைத்து வழிபடுவது தான் சிறப்பானதே, தவிர காலியாக இருக்கும் எந்த ஒரு பொருளையும் வெறுமனே பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வது அவ்வளவு சிறந்தது அல்ல.

- Advertisement -

இதோடு சேர்த்து, சில பேருக்கு உப்பு ஜாடியை வைத்து பூஜை செய்யும் பழக்கமும் இருக்கும். அந்த உப்பு ஜாடியை வெறுமனே காலியாக வைக்காமல், ஒரு கைப்பிடி அளவு உப்பை போட்டு வைக்கலாம். சில பேர் ஆயுத பூஜைக்கு பூஜை அறையில் வைத்த,  பொருட்களை அடுத்த நாள் வரை, பூஜை அறையில் இருந்து எடுக்க மாட்டார்கள். உங்களுடைய வீட்டு வழக்கம் எதுவோ அப்படியே செய்யுங்கள்.

ஆனால், பூஜை அறையில் இருந்து எடுத்த பொருட்களை சமையலறைக்கு கொண்டுபோய், சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை, உடனடியாக அந்த டப்பாக்களில் நிரப்பி வைத்து விடுங்கள். பூஜை அறையில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகங்களில் குழந்தைகள் கட்டாயம் படிக்க வேண்டும். இப்படி நிறைவான ஆயுத பூஜையை கொண்டாடி நமக்கு அடுத்து வரும் சந்ததியினரை கூட கஷ்டம் இல்லாமல் வாழ வைக்க அந்த துர்க்கையை மனதார வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் இந்த செடியை வளர்த்தால் செல்வ வளம் அதிகரிக்குமாம்! பிரமாதமான தூக்கமும் வரும். அப்படி என்ன செடி அது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -