- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகேட்ட வரத்தை தரும் அபிஜித் நட்சத்திர தீப வழிபாடு

கேட்ட வரத்தை தரும் அபிஜித் நட்சத்திர தீப வழிபாடு

- Advertisement -

நட்சத்திரங்கள் மொத்தம் 27 என்றும் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு நாளில் வரும் என்றும் 24 மணி நேரம் அந்த நட்சத்திரம் இருக்கும் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். மிகவும் சூட்சுமமான அதேசமயம் அதிசக்தி வாய்ந்த நட்சத்திரமாக திகழ்வதுதான் 28 வது நட்சத்திரமான அபிஜித் நட்சத்திரம். இது திருவோண நட்சத்திரம் வருவதற்கு முன்பாக வரக்கூடியது. இந்த அபிஜித் நட்சத்திரம் இருக்கக்கூடிய நேரத்தில் யார் என்ன கேட்டாலும் அது கிடைக்கும் என்றும் அவர்கள் செய்யக்கூடிய காரியத்தில் வெற்றிகள் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. இதை பலரும் தீய செயல்களுக்காக பயன்படுத்தினார்கள் என்றும் அந்த தீய செயல்களினால் இந்த பூமியை அழியக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாயிற்று என்றும் அதனால் கிருஷ்ணர் தன்னுடைய மயிலிறகில் இந்த அபிஜித் நட்சத்திரத்தை ஒழித்து வைத்து விட்டார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

இருப்பினும் திருவோண நட்சத்திரமும் பிறப்பதற்கு முன்பாக 24 நிமிடங்கள் மட்டும் இந்த அபிஜித் நட்சத்திரம் இருக்கும். அந்த 24 நிமிடங்கள் நாம் நியாயமான வேண்டுதலுக்காக கிருஷ்ணரை நினைத்தோ பெருமாளை நினைத்தோ வழிபாடு செய்தோம் என்றால் அந்த வழிபாட்டின் பலனால் நாம் கேட்ட வரம் நமக்கு கிடைக்குமாம். அந்த வகையில் இந்த முறை புதன்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய அபிஜித் நட்சத்திர நேரத்தில் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

அக்டோபர் மாதம் 29ஆம் தேதி புதன்கிழமை அன்று மதியம் 2:06 மணிக்கு தொடங்கி 2:30 மணி வரை அபிஜித் நட்சத்திர நேரம் என்பது இருக்கிறது. இந்த நேரத்தை நாம் சரியாக பயன்படுத்தி நம்முடைய நியாயமான கோரிக்கை நிறைவேற வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்தோம் என்றால் கண்டிப்பான முறையில் அனைத்து தெய்வங்களின் அருளாலும் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும். இந்த முறை அபிஜித் நட்சத்திரம் என்பது புதன்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. பொதுவாகவே அபிஜித் நட்சத்திரம் என்பது கிருஷ்ண பகவானுக்குரிய நட்சத்திரம், புதன் கிழமை என்பது பெருமாளுக்கு உரிய கிழமை. அதனால் இந்த முறை வரக்கூடிய இந்த அபிஷேக் நட்சத்திரம் என்பது கூடுதல் சிறப்பை பெற்றதாக திகழ்கிறது.

சரியாக அபிஜித் நட்சத்திர நேரம் வரும் சமயத்தில் புதிதாக ஒரு அகல் விளக்கை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பச்சை பயிரை சேர்த்து விளக்கேற்றுவதற்கு நாம் பயன்படுத்தக்கூடிய எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி அதில் பஞ்சுத்திரி போட்டு ஒரு துண்டு பச்சை கற்பூரத்தையும் போட்டு வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை கிருஷ்ணரின் படத்திற்கு முன்பாக ஏற்றலாம் அல்லது பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்தும் ஏற்றலாம்.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்றி வைத்த பிறகு முழு மனதோடு யாருக்கும் எந்தவித தீங்கும் நினைக்காமல் நல்ல காரியம் நடைபெற வேண்டும் என்று ஏதாவது ஒரு காரியத்தை முன்வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த தீபம் முழுமையாக அபிஜித் நட்சத்திரம் இருக்கக் கூடிய 24 நிமிடமும் முழுமையாக எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நட்சத்திர நேரம் நிறைவடைந்த பிறகு இந்த தீபத்தை குளிர வைத்துவிடலாம். தீபத்தை குளிர வைத்தபிறகு அதில் இருக்கக்கூடிய பச்சைப் பயிரை கால்படாத இடங்களிலோ அல்லது பறவைகளுக்கு தானமாக போட்டு விட இருக்கும்.

இதையும் படிக்கலாமே: தடங்கலை நீக்கும் கால பைரவர் வழிபாடு

புதன்கிழமை சேர்ந்து வரக்கூடிய அபிஜித் நட்சத்திர நேரத்தில் இந்த முறையில் நம்முடைய வேண்டுதலை முன்வைக்க அது விரைவில் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்