தடைப்பட்ட திருமணம் நிறைவேற! மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ள! பாட வேண்டிய சக்தி வாய்ந்த அபிராமி அந்தாதி உங்களுக்காக இதோ!

abirami-anthathi-marraige

பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியில் மொத்தம் 100 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை தீர்க்க வல்லது ஆகும். மிகுந்த சக்தி வாய்ந்த இந்த பாடல்கள் ஒவ்வொன்றும் விசித்திரமான பலன்களைக் கொடுக்கக் கூடியது. இப்பாடலை பாட ஆரம்பித்தவுடன் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட நம்பிக்கை பிறக்கும் என்பது கண் கண்ட உண்மையாகும். இதில் இருக்கும் 35வது பாடல் திருமண வரத்தை கொடுக்கக் கூடியது ஆகும். இப்பாடலும், பாடலின் பொருளையும் இப்பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

abirami4

அபிராமி அந்தாதி 35வது பாடல்:
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ! தரங்கக் கடலுள்
வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே!!

பாடலின் பொருள்:
அருளும் நின்திருவடி எந்தை திருமுடி மதிமணம்
தவமாய் எம்மடியார்தலை நின் பாதம் வைத்தருள
யாவரும் வியப்புறும் வானவரும் எண்ணிறந்த
தேவரும் வியப்பர் இத்தவம் அவர்க்கும் கிட்டுமோயென
பாற்கடல் பாம்பணை துயில் பரம் பொருளே!!

abirami1

அபிராமி அந்தாதி நூற்பயன்:
ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்காக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

அபிராமி அந்தாதி பாடலை பொருத்தவரை 100 பாடல்களையும் பாடிய பலன் கிடைக்க 101-ஆவது பாடலாக இருக்கும் மேற்கூறப்பட்டுள்ள இந்த நூற்பயன் பாடல் மிகவும் முக்கியமானது. நூறு பாடல்களில் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைக்கு உரிய பாடலை பாடுவதற்கு முன்பு இந்த நூற்பயன் பாடலை பாடி முடித்த பின்பு தான் அதை பாட வேண்டும்.

abirami-anthathi

அது போல் திருமண சுபகாரியங்கள் கைக்கூடி வரவும், மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளவும், எத்தகைய திருமண தோஷங்கள் நீங்கவும் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நூற்ப் பயனைப் பாடிய பின்பு 35-ஆவது பாடலாக இருக்கும் திருமண வரம் அருளும் இப்பாடலையும் சேர்த்து பாட வேண்டும். இப்படி தொடர்ந்து பாடிவர அபிராமி உங்களுக்கு விரைவாகவே திருமண வரத்தை அருளுவார். மேலும் உங்களுக்கு பொருத்தமான துணையும் கட்டாயம் அமையும் நம்பிக்கையோடு பாடி பயன் பெறுங்கள்.