2020-2021 உலக மக்கள் அழிவிற்கு பஞ்சாங்கம் கூறிய அதிர வைக்கும் காரணம் என்ன? மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் குரு பகவான் பயணிப்பதால் நோய் பாதிப்புகள் தீவிரமடையுமா?

guru-transit

உலகத்தில் பொதுவாக நடக்கும் சில விஷயங்களுக்கு ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் பல காரணங்கள் முன் நிறுத்தி வைக்கப்படும். அந்த வகையில் தற்போது 2020 ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் உலக மக்களின் பேரழிவிற்கு காரணமாக ஜோதிட ரீதியாக பஞ்சாங்கம் கூறிய அதிர வைக்கும் காரணம் என்ன? என்பது தெரிய வந்துள்ளது. பல சமயங்களில் பஞ்சாங்கத்தில் கூறுவது போல் உண்மையில் நடக்கும் போது தான் அதைப்பற்றிய விழிப்புணர்வு பக்தர்களுக்கு உண்டாகிறது.

guru-bhagavan

ஜோதிடத்தில் குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருட காலம் வரை சஞ்சரிப்பார், இடையில் அதிசாரமாக பெயர்ச்சியாகி மீண்டும் நேர்கதியில் பயணிப்பார். ஆனால் 2020 சார்வரி வருடம் மற்றும் 2021 பிலவ வருடத்தில் குரு பகவானுடைய சஞ்சாரம் மூன்று ராசிகளில் பயணிக்கிறது. இதன் காரணமாக உலகத்தில் என்ன நடக்கும்? என்று பழம் பெருமை வாய்ந்த ‘கால விதானம்’ என்னும் ஜோதிட நூல் கூறும் வியத்தகு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

சித்திரை முதல் பங்குனி வரை இருக்கும் பன்னிரெண்டு மாதங்களுக்குள் குரு பகவான் மூன்று ராசியில் பிரவேசித்தால் ஏழு கோடி மக்கள் மடிந்து போவர் என்கிறது கால விதானம் என்னும் ஜோதிட நூல். இதையே தான் வாக்கிய மற்றும் திருக்கணித படி கணிக்கப்படும் பஞ்சாங்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு குரு பகவான் சார்வரி வருடத்தில் தனுசு, மகரம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளில் பிரவேசித்தார்.

astrology-4

அதே போல 2021 ஆம் ஆண்டு பிலவ வருடத்திலும் மகரம், கும்பம், மீனம் ஆகிய மூன்று ராசிகளுக்கு பிரவேசிக்க இருக்கிறார். எனவே ஒரு வருடத்தில் மூன்று ராசிகளில் குரு பகவான் சஞ்சாரம் செய்வதால் உலக மக்களுக்கு மருத்துவ விரயங்கள் அதிகரிக்கும் என்றும், மூன்றில் ஒரு பங்கு மக்கள் அழிந்து போவார்கள் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. குரு பகவானுடைய இந்த சஞ்சாரமே நோய் பரவலுக்கு காரணம் என்றும் ஆன்மீக ரீதியாக நம்பப்பட்டு வருகிறது.

சார்வரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி திங்கட் கிழமை இரவு 00.57 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிய குரு பகவான் சுமார் 6 மாத காலம் வரை அதாவது செப்டம்பர் 14, 2021 வரை கும்ப ராசியில் வக்ர கதியில் சஞ்சாரம் செய்வார். அதற்குப் பிறகு கும்பத்தில் இருந்து வக்ர கதியில் பெயர்ச்சியாகி நவம்பர் 13, 2021 வரை மகர ராசியில் 60 நாட்கள் மட்டும் சஞ்சரிப்பார். பின்னர் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு மீண்டும் நேர்கதியில் ஏப்ரல் 13, 2022 வரை கும்ப ராசியில் சஞ்சரித்து விட்டு பங்குனி 30ஆம் தேதி பகல் 3:49 மணிக்கு மீன ராசிக்கு அதிசாரமாக பயணிக்கிறார்.

Guru astrology

எனவே இந்த ஆண்டும் கடந்த ஆண்டைப் போலவே மூன்று ராசிகளில் குரு பகவான் பிரவேசிப்பதால் நோய் பாதிப்புகள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு பரிகாரமாக கோவில்களில் யாகங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், யாகங்களுக்கு தேவையான பொருட்களை பக்தர்கள் வாங்கி கொடுத்தால் நல்லது என்றும், வீடுகளில் தினம்தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்றும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.