மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பொருட்கள் நகைகளும் ஒன்று. இந்த நகைகள் அனைவரின் இல்லங்களில் இருந்தாலும் தங்களுக்கு அவசரமான சூழ்நிலை ஏற்படும் பொழுது அதை அடமானத்தில் வைத்து பணத்தை வாங்கி விடுவார்கள். அப்படி அடமானத்தில் வைத்ததும் அதற்கு தோஷம் ஏற்பட்டுவிடும். திரும்பவும் அந்த நகையை திருப்ப வேண்டும் என்று முயற்சி செய்தாலும் பலருக்கும் அந்த நகையை திருப்பவே முடியாது நிலை ஏற்படுவதோடு அடமானத்தில் இருந்த நகையை விற்க வேண்டிய சூழ்நிலை கூட வந்துவிடும். இவை அனைத்தையும் நீக்கி அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகளை மீட்டெடுப்பதற்கு மகாலட்சுமி தாயை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அடகு நகையை மீட்க வழிபாடு
சுக்கிரனின் அருளும் மகாலட்சுமி தாயாரின் அருளும் ஒருவருக்கு கிடைத்த விட்டால் அவர் சுகமான வாழ்க்கையை வாழ்வார் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் ஆசைப்பட்ட அனைத்தையும் பெற முடியும் என்று கூட கூறலாம். அப்படி பெண்கள் அதிக அளவில் ஆசை படக்கூடிய பொருட்களுள் ஒன்றாக திகழ்வதுதான் நகை. இது விருப்பத்திற்காக மட்டுமல்லாமல் சமுதாயத்தில் தங்களை ஒரு நல்ல நிலையில் வெளிப்படுத்திக் கொள்ளவும் உதவிகிறது. பலரும் தங்களுடைய பெண் பிள்ளைகளுக்கு தங்களால் இயன்றதை விட அதிக அளவு நகையை போட்டு திருமணம் செய்து கொடுத்தால் தான் புகுந்த வீட்டில் நன்றாக இருப்பார்கள் என்ற எண்ணமும் இருக்கிறது. இப்படிப்பட்ட நகையை அடமானத்தில் வைத்து விட்டு திரும்ப முடியாமல் கஷ்டப்படுபவர்கள் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டு முறையைப் பற்றி பார்ப்போம்.
இந்த வழிபாட்டை ரேவதி, பூரம், பரணி, பூசம் போன்ற நட்சத்திர நாட்களில் நல்ல நேரம் பார்த்து செய்ய வேண்டும். நட்சத்திரம் பார்க்க தெரியாது என்பவர்கள் பௌர்ணமி தினத்தன்று மாலை 6 மணிக்கு மேல் பௌர்ணமி நிலவு வந்த பிறகு இந்த வழிபாட்டை செய்யலாம். அல்லது வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு வீட்டு பூஜை அறையில் கிழக்கு பார்த்தவாறு வாழையிலை ஒன்றை விரித்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு படி நிறைய பச்சரிசியை வைக்க வேண்டும்.
அந்த பச்சரிசியின் மேல் ஒரு பவளத்தை வைக்க வேண்டும். பவளம் இல்லாத பட்சத்தில் நான்கு குன்றின்மணியை வைக்க வேண்டும். அதற்கு மேல் செந்தாமரை பூ ஒன்றை வைக்க வேண்டும். இந்த தாமரைப்பூ நன்றாக மலர்ந்து இருக்க வேண்டும். அந்த தாமரைப் பூவின் நடுவில் நம் வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு நகையை வைக்க வேண்டும். அது சிறிய மூக்குத்தியாக இருந்தாலும் பரவாயில்லை. இப்படி வைத்து முடித்துவிட்டு அந்த இலைக்கு முன்பாக மகாலட்சுமிக்குரிய மீன் குறியீட்டை பச்சரிசி மாவில் வரைய வேண்டும்.
நெய்வேத்தியமாக பால் பாயாசம், அண்ணாச்சி பழம், மாதுளம் பழம், வெற்றிலை பாக்கு போன்றவற்றை வைக்க வேண்டும். இப்பொழுது மகாலட்சுமி தாயாரின் 108 போற்றிகளை கூறி தாமரை மலரின் நடுவில் இருக்கக்கூடிய தங்கத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி அர்ச்சனை செய்வதற்கு நாம் பவளமல்லி அல்லது மல்லிகை பூவை பயன்படுத்த வேண்டும். வேறு எந்த பூக்களையும் பயன்படுத்தக் கூடாது. கடைசியாக கற்பூர தீப தூப ஆராதனை அனைத்தும் காட்டி முடித்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த அனைத்து பொருட்களையும் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமே உண்ண வேண்டும்.
பச்சரிசியை பொங்கல் செய்து வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும். தாமரைக்கு நடுவில் இருக்கக்கூடிய தங்கத்தை சிவப்பு நிற பட்டு துணியில் வைத்து அதனுடன் ஏலக்காய், பச்சை கற்பூரம் இவற்றின் சேர்த்து வைத்து நகை வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருளை நம்மால் பெற முடியும். அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகள் அனைத்தையும் திருப்புவதற்குரிய பணவரவு நமக்கு உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:மஹாலயா அமாவாசை வழிபாடு செய்யும் முறை
இந்த எளிமையான வழிபாட்டு முறையை முழு நம்பிக்கையுடன் மகாலட்சுமி தாயாரை நினைத்து செல்பவர்களுக்கு அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகளை திருப்புவதுடன், செல்வ வளமும் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.