நம் வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பெண்களும் ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சேர்த்து வைத்து அதை நகையாக செய்து வைத்திருப்பார்கள். அந்த நகை தான் நம்முடைய அவசர காலத்திற்கு உதவக்கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது. அப்படி நம்முடைய அவசர காலத்தில் வீட்டில் இருக்கக்கூடிய நகையை அடமானத்தில் வைக்கும் பொழுது அதை விரைவிலேயே திருப்ப வேண்டும் என்றுதான் நினைப்போம். இருப்பினும் ஏதோ ஒரு சூழ்நிலையால் அதை திருப்ப முடியாமல் கஷ்டப்படுவோம். அப்படி எவ்வளவு முயற்சிகள் எடுத்தும் நகையை திருப்ப முடியவில்லை என்றாலோ வீட்டில் இருக்கக்கூடிய நகை அடிக்கடி அடமானத்திற்கு செல்கிறது என்றாலோ இந்த வழிபாட்டை நாம் பின்பற்றலாம். அப்படிப்பட்ட வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அடகு நகையை திருப்ப வழிபாடு
செல்வ செழிப்புடன் வாழ வேண்டும், தங்க நகைகள் அதிகம் சேர வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் என்பது வேண்டும். அப்படி மகாலட்சுமியின் அருளை பெறுவதோடு மகாலட்சுமிக்கு சகல ஐஸ்வரியத்தையும் தந்த சிவபெருமானின் அருளையும் பெறவேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய நகையை நம்மால் மீட்டெடுக்க முடியும் நிரந்தரமாக நம்முடனே வைத்துக் கொள்ளவும் முடியும். முதலில் அடமானத்தில் இருக்கக்கூடிய நகையை திருப்புவதற்கு சிவபெருமானை வழிபாடு செய்துவிட்டு அந்த நகை நிரந்தரமாக நம்மிடம் தங்குவதற்கு மகாலட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும். அந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த வழிபாட்டை என்றைக்கு வேண்டுமானாலும் செய்ய ஆரம்பிக்கலாம். தொடர்ச்சியாக 48 நாட்கள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக அளவில் நகையை அடமானத்தில் வைத்திருப்பவர்கள் அந்த நகையை திருப்புவது வரை இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு எந்தவித செலவும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நாம் எவ்வளவு நகையை அடமானத்தில் வைத்திருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டாலே போதும்.
இரவு படுக்கும் பொழுது தெற்கு பார்த்தவாறு படுக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் தெற்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு கண்களை மூடி சிவபெருமானை முழுமனதோடு நினைத்து சிவபெருமானிடம் அடமானத்தில் இருக்கக்கூடிய நகையை திருப்ப வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு நாம் எந்தெந்த நகையை அடமானத்தில் வைத்தோமோ அவை அனைத்தையும் நம்முடைய நினைவிற்கு கொண்டு வர வேண்டும். இப்படி 31 முறை திரும்ப திரும்ப நினைவிற்கு கொண்டு வர வேண்டும். சிவபெருமானிடம் மறுபடியும் இந்த நகை திரும்பி என்னிடம் வரவேண்டும் என்ற வேண்டுதலை வைக்க வேண்டும்.
பிறகு எப்பொழுதும் போல் எழுந்து நம்முடைய அன்றாட வேலைகளை செய்து கொள்ளலாம். குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றுவோம் அல்லவா? அப்பொழுது மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு பலவிதமான வழிமுறைகள் இருந்தாலும் மகாலட்சுமி தாயாரின் ஸ்தோத்திரங்களை பாடுவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மகாலட்சுமி தாயாருக்கு பலவிதமான அஷ்டகங்களும், ஸ்தோத்திரங்களும், மந்திரங்களும் இருக்கின்றன. இருந்தாலும் செல்வம் நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காக பாடக்கூடிய ஒரு ஸ்தோத்திரமாக தான் இந்திரக்ரத லக்ஷ்மி ஸ்தோத்திரம் திகழ்கிறது. இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது நாம் பாடலாம். ஒருவேளை அதில் இருக்கக் கூடிய வார்த்தைகள் புரியவில்லை அதை பாடுவதற்கு கஷ்டமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் அதை கைபேசியில் ஒலிக்க விட்டு கேட்கலாம். இப்படி நாம் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் விரைவிலேயே அடமானத்தில் இருக்கக்கூடிய நகையை திருப்புவதற்குரிய வழி உண்டாக்கும்.
இதையும் படிக்கலாமே:தொழில் லாபகரமாக நடக்க புதன்கிழமை பரிகாரம்
ஒரு ரூபாய் கூட செலவில்லாத இந்த எளிமையான வழிபாட்டு முறையை முழு மனதோடும் முழு நம்பிக்கையோடும் யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்களுக்கு விரைவிலேயே அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகள் அவர்கள் கைவசம் வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.