அடமானம் வைத்த நகைகளை மீட்க முடியவில்லையா? உங்க வீட்டில் நகை மற்றும் பண வரவை அதிகரிக்க செய்யும் எளிய பரிகாரங்கள்!

Nagai adamanam
- Advertisement -

சில சமயங்களில் நாம் கஷ்டப்பட்டு, சம்பாதிக்கும் பணத்தை சிறுக, சிறுக சேமித்து நகைகளாக வாங்கிக் வைத்திருப்போம். சூழ்நிலைகளின் காரணமாக பணப் பற்றாக்குறை ஏற்படும் போது நாம் சேகரித்த நகைகளை அடமானம் வைத்து செலவு செய்து கொள்கிறோம். அடகு வைத்த நகைகளை மீட்பதற்கும், பண வரவு இரட்டிப்பாக்குவதற்கும் எளிமையான பரிகாரங்கள் மேற்கொள்வது எவ்வாறு என்று இப்பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.

பரிகாரம் 1:
பௌர்ணமி தினத்தில் இந்தப் பரிகாரத்தை செய்வதினால், உங்கள் வீட்டில் அடமானம் வைத்த நகைகள் மீண்டும் உங்கள் கைக்கு வந்து சேரும். பூஜை அறையில் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு அதில் ஒரு கையளவு பச்சரிசியையும், ஒரு கையளவு கல் உப்பையும் எடுத்து வைத்துக் கொண்டு, நம் வீட்டில் இருக்கும் எந்த நகையாக வெள்ளி, தங்கம் போன்ற எதுவாக இருந்தாலும் ஒரு துணியில் மூட்டை கட்டி அந்தத் தட்டில் வைத்து மகாலட்சுமி தேவியை மனதார வழிபட வேண்டும்.

- Advertisement -

இரவு முழுவதும் அந்த நகையானது அப்படியே இருக்க வேண்டும். பச்சரிசியும், உப்பும் நேர் வினைகளை ஈர்த்து நகை வரவை இரட்டிப்படைய செய்யும் சக்தி கொண்டதாக இருக்கிறது. அதனால் தான் இப்படி செய்கிறோம். பிறகு மறுநாள் காலை எழுந்து குளித்து முடித்து உப்பையும், பச்சரிசியையும் மற்றவர்களின் கால்களில் படாமல் நீர்நிலைகளில் விட்டு விட வேண்டும். இதனால் வீட்டில் நகைகள் அதிகரிக்க துவங்கும், அடகு வைத்த நகைகளும் நம்மிடமே வந்து சேரும் என்பது ஐதீகம்.

பரிகாரம் 2:
உப்பு ஜாடியில் ஒரு ரூபாய் நாணயத்தை மற்றவர்களின் கண்களில் படாதவாறு மறைத்து வைக்க வேண்டும். அதேபோல 4 அல்லது 5 பச்சரிசியை ஜாடிக்கு அடியில் வைத்து அதற்கு மேல் உப்பை வைக்க வேண்டும். பச்சரிசி என்பது சந்திர பகவானின் ஆதிக்கத்தின் கீழ் வருகிறது. இப்படி செய்வதன் மூலம் பண வரவு இரட்டிப்பாகும்.

- Advertisement -

உப்பின் சிறப்புகள்:
‘உப்பு’ என்பது அபாரமான சக்தியை பெற்றது. ஈசான மூலையில் உப்பை வைத்தால் பண வரவு இரட்டிப்பாகும். உப்பை வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் 6 லிருந்து 7 மணிக்குள் வாங்கினால் சிறப்பு! மகாலட்சுமி தேவி சமுத்திரத்தில் பிறந்ததாக புராணங்கள் நமக்கு கூறுகின்றன. திருமணமான பெண்கள் தங்கள் தாய் வீட்டுக்கு சென்றால் எவ்வளவு சந்தோஷமாக இருப்பார்களோ! அது போல் மகாலட்சுமி தேவிக்கு இந்த உப்பானது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது என்று சொல்லப்படுகிறது. உப்பு என்பது மகாலட்சுமியின் தாய் வீட்டு சீதனமாக கருதப்படுகிறது. நாம் தினமும் சமைக்கும் போது உப்பை பயன்படுத்தியபிறகு மறக்காமல் மூடி வைக்க வேண்டும். இதனால் லட்சுமி கடாச்சம் நிலைக்கும்.

“ஜாடி” என்பது மங்களகரமான பொருள். நமது வீட்டில் பயன்படுத்தும் உப்பை ஜாடியில் வைத்து பயன்படுத்தினால் நன்மை தரும். கல் உப்பு, தூள் ப்பு எதுவாயினும் ஜாடியில் வைத்து பயன்படுத்தினால் சிறப்பு! நமது வீட்டில் சாப்பிடும் போது சிறிய டப்பாக்களில் உப்பு தூளை வைத்து பயன்படுத்துகிறோம் அல்லவா, அதையும் சிறிய ஜாடியை வாங்கி, அதில் வைத்து பயன்படுத்தலாம். இப்படி செய்வதால் வீண் செலவுகள் குறையும். ஜாடி என்பது மண்ணால் செய்யப்பட்டது. உப்பு கடலில் இருந்து கிடைக்கிறது. இவை இரண்டும் பஞ்சபூதங்களில் நிலம் மற்றும் நீரில் இருந்து கிடைப்பட்டது. ஆகையால் ஜாடி மற்றும் உப்பிற்கு நிலம் மற்றும் நீரின் ஆற்றல் இருக்கும். இவை இரண்டும் ஒன்று சேரும் பொழுது நல்லதொரு ஆற்றல் கிடைக்கும்.

- Advertisement -