நகையை அடமானம் வைப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய பரிகாரம்

gold
- Advertisement -

நடுத்தர வர்க்கத்தில் வாழ்பவர்கள் நகையை வாங்குவதே அவசரத்துக்கு அடமானம் வைத்து பணமாக மாற்றுவதற்காக தான். அதை இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால் நாம் வாங்கிய தங்க நகையை கூடுமானவரை அடமானத்தில் வைக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். சில பேர் வாங்கிய நகையை அடமானத்தில் வைத்து விடுவார்கள்.

அதை திரும்பவும் மீட்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். அந்த நகை மூழ்கி விடும். இந்த சூழ்நிலை நமக்கு வரக்கூடாது. அவசர தேவைக்கு நகையை அடமானம் வைத்து விட்டோம். அதை வட்டி கட்டி திரும்பவும் சரியான நேரத்தில் மீட்டெடுக்க வேண்டும் என்றால், நகையை அடமானம் வைப்பதற்கு முன்பு என்ன செய்வது. ஒரு சின்ன எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்காக.

- Advertisement -

அடகு வைத்த நகை மூழ்காமல் இருக்க பரிகாரம்

அவசரத்துக்கு நகையை அடமானம் வைக்கும் போது, நாள் நட்சத்திரம் பார்க்க முடியாது தான். இருந்தாலும் உங்களுக்கு வாய்ப்பு இருந்தால், நேரம் இருந்தால் இந்த நாள் நட்சத்திரத்தை கொஞ்சம் கவனிக்க வேண்டும். 27 நட்சத்திரத்தில், முதல் 14 நட்சத்திரம் இருக்கிறது அல்லவா. அந்த நட்சத்திரம் வரக்கூடிய நாளில் நகையை அடமானம் வைத்தீர்கள் என்றால் திரும்பவும் நகைகளை சீக்கிரம் மீட்டெடுக்கலாம்.

27 நட்சத்திரங்களில் முதல் 14 நட்சத்திரங்கள் வரக்கூடிய நாளில் நகையை அடமானம் வைக்க வேண்டும். முதல் 14 நட்சத்திரத்தை தவிர்த்து, அடுத்து வரக்கூடிய 13 நட்சத்திர நாளில் நகையை அடமானம் வைக்க கூடாது. நகை வாங்கவும் கூடாது. நகை வாங்கவும் இந்த நாள் நட்சத்திரம் பொருந்தும்.

- Advertisement -

நகையை அடமானம் வைப்பதற்கு முன்பு அந்த நகையை கொஞ்சமாக காய்ச்சாத பசும்பாலில் போட்டு எடுக்க வேண்டும். மூன்று முறை நகையை அந்த காய்ச்சாத பசும்பாலில் முக்கி எடுத்து ஒரு பத்து நிமிடம் தட்டில் வைத்து விடுங்கள். பிறகு அந்த நகையை சுத்தமான நல்ல தண்ணீரில் லேசாக கழுவி விட்டு துடைத்து விட்டு அடமானத்திற்கு கொண்டு போய் வையுங்கள்.

இப்படி நகையை அடமானம் வைத்தீர்கள் என்றால் அந்த நகை மூழ்குவதற்குள் திரும்ப மீட்பதற்கு தேவையான பணம் உங்கள் கையில் வந்து சேரும். பெரும்பாலும் வங்கிகளில் நகையை குறைந்த வட்டிக்கு அடமானம் வைத்து சீக்கிரம் மீட்டு விடுவோம். அதில் பிரச்சனை இருக்காது. ஆனால் வங்கித் தவிர்த்து மற்ற அடமானக் கடைகள் இருக்கும்.

- Advertisement -

அந்த இடத்தில் நம்முடைய நகை போய் சிக்கினால், அதை நம்மால் அவ்வளவு எளிதில் மீட்டு எடுக்கவே முடியாது. இதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கிறது. அதைப்பற்றி எல்லாம் நாம் கவலை பட வேண்டாம். அதைப் பற்றி இங்கு பேசவும் வேண்டாம். உங்கள் நகை பத்திரமாக வீடு திரும்ப மேல் சொன்ன இந்த சின்ன பரிகாரத்தை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: https://dheivegam.com/aarumugan-manthriram/

பசும்பாலை தான் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, பாக்கெட் பாலில் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் தராது என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய பரிகாரத்தில் நம்பிக்கை இருந்தால் உங்களுக்கு தேவை எனும்போது பயன்படுத்தி பாருங்க. நிச்சயம் நல்லது நடக்கும் என்ற கருத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -