ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்லும் ஆதியோகம் பற்றி தெரியுமா ?

astrology

தினமும் இந்த உலகில் பல்லாயிரக்கனனான குழந்தைகள் பிறக்கின்றன. அப்படி பிறக்கும் அனைத்து குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை சீரும், சிறப்புமாக இருக்குமா என்பதற்கான விடையை யாருமே கூற முடிவதில்லை. ஆனால் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் சரியாக ஜாதக கணிக்கப்பட்டு, அந்த ஜாதகத்தின் வாயிலாக அக்குழந்தையின் எதிர்கால வாழ்க்கையின் நிலையை அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு சரியான கோள்களின் அமைப்பு இருக்கும் நேரத்தில் பிறக்கும் மனிதர்களுக்கு சில யோகங்கள் ஏற்படுவதாக ஜோதிட சாத்திரங்கள் கூறுகின்றன. அப்படியான யோகங்களில் ஒன்று தான் இந்த “ஆதியோகம்”.

athiyogam

ஒரு மனிதனின் ஜாதகத்தில் சந்திரன் நின்ற கட்டத்தில் இருந்து 6,7,8 ஆம் கட்டங்களில், சுகங்களை வழங்கும் கிரகங்களான “புதன் ,குரு ,சுக்கிரன்” ஆகிய கிரகங்கள் இருந்தால் அது “ஆதியோகம்” அமைப்பை ஏற்படுத்துகிறது. இந்த கிரகங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ 6,7,8 ஆம் கட்டங்களில் இருக்கலாம் .உதாரணத்திற்கு மேலே உள்ள ஜாதகத்தை எடுத்துக்கொள்வோம். இங்கு லக்கினத்திற்கு அடுத்த கட்டத்தில் சந்திரன் இருக்கிறார். சந்திரன் இருக்கும் கட்டத்தில் இருந்து 6 வது கட்டத்தில் புதனும், 7 வது கட்டத்தில் குருவும், எட்டாவது கட்டத்தில் சுக்கிரனும் இருக்கிறார்கள். இது போன்ற அமைப்பே ஆதியோகம் எனப்படும்.

இந்த யோகத்தினால் இந்த ஜாதகர்கள் இப்பூமியில் அரசன் அல்லது அரசனுக்கு நிகரான அந்தஸ்துடைய குடும்பத்தில் பிறப்பார்கள். தங்கள் வாழ்நாள் முழுவதும் அரசனைப் போல் வாழ்வார்கள். இவர்களுக்கு செல்வத்திற்கு ஒரு போதும் குறைவு ஏற்படாது. எல்லோரும் இவர்களைத் தேடி வந்து, இவர்களிடம் தங்களுக்கு ஆக வேண்டிய காரியங்களுக்கான உதவி கேட்கும் நிலையில் இருப்பார்கள். இந்த ஜாதக அமைப்பை கொண்டவர்களுக்கு முதலமைச்சர், பிரதம மந்திரி ஆக கூடிய யோகம் கூட உண்டாகும்.

அப்படி நாட்டை ஆளும் நிலை இல்லையென்றாலும், இவர்கள் ஏதேனும் அரசாங்க உத்யோகங்களில் இருப்பார்களேயானால் அதில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட உயர் பதவிகளில் இருப்பார்கள். அரண்மணையைப் போன்ற வீடு, அதி நவீன விலையுயர்ந்த வாகனங்கள், நினைத்த போது அயல் தேசங்களுக்கு செல்லுதல் போன்ற அமைப்பை இவர்களுக்கு இந்த ஆதியோகம் ஏற்படுத்துகிறது. அதிர்ஷ்டம் மிகுந்த பெண்ணை மனைவியாக வாய்க்கப்பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் செல்வம் சேரும் தெரியுமா ?

English Overview:
Here we described about Adhi yoga in Tamil. If one got this yoga in his horoscope then he will live like a king.