உங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் செல்வம் கொட்டும் தெரியுமா ?

Lord sooriyan

ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய நன்மைத் தீமைகளை முன்கூட்டியே அறிய உதவும் ஒரு கலை, ஜோதிடக் கலையாகும். அப்படியான ஜோதிடக் கலை சாத்திரம், ஒரு ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்புக்களால் ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய பலவிதமான யோகங்களைப் பற்றி விவரிக்கிறது. அந்த வரிசையில் இப்போது இங்கே “மஹாபாக யோகத்தைப்” பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த யோகத்தை ஒரு ஜாதகருக்கு வழங்கும் கிரகங்கள் “சூரியன்” மற்றும் “சந்திரன்”. இந்த இருகிரகங்களும் ஜாதகத்தின் ராசிக்கட்டத்தில் எந்நிலையிலிருந்தால் இந்த யோகம் ஏற்படும் என்பதைப் பாப்போம்.

astrology

ஒரு ஜாதகன் அவன் பகல் காலத்தில் பிறந்த போது, அவன் ஜாதகத்தில் “சூரியன்” மற்றும் “சந்திரன்” “ஒற்றைப்படை” எண்ணிக்கையிலான ராசியில் இருக்க வேண்டும். உதாரணமாக ஜாதகக் கட்டத்தில் முதல் ராசியான மேஷ ராசியில் சூரியன் இருந்தால், அந்த மேஷ ராசிக்கு மூன்றாம் ராசியான மிதுன ராசியில் சந்திரன் இருக்க வேண்டும்.

அது போலவே இரவில் பிறக்கும் ஜாதகருக்கு சூரியன் மற்றும் சந்திரன் இரட்டைப்படை எண்ணிக்கையிலான ராசியில் இருக்க வேண்டும். உதாரணமாக சூரியன் ஜாதக கட்டத்தில் இரண்டாவது ராசியான ரிஷபத்திலிருந்தால், சந்திரன் அந்த ரிஷப ராசிக்கு இரண்டாம் ராசியான கடக ராசியில் இருக்க வேண்டும். இதுவே “மஹாபாக யோகத்தின்” அமைப்பு.

மஹாபாக யோகத்தின் பலன்கள் :

இந்த யோக அமைப்பில் பிறந்த நபர்கள் மிகச் சிறப்பான குணங்களைப் பெற்றிருப்பார்கள். இவர்கள் பிறந்ததிலிருந்தே இவர்களின் குடும்பத்திற்கு செல்வம் பெருகிக் கொண்டே செல்லும். எதிர்பாலினத்தவரை ஈர்க்கும் காந்த சக்தியைக் கொண்டவர்களாக இருப்பார்கள். சமுதாயத்தில் எல்லோரும் மதிக்கப்படும் நிலைக்கு உயர்வார்கள். இவர்கள் கஷ்டப்பட்டு உழைக்காமலிருந்தாலும் பணம் இவர்களைத் தேடி வந்து கொண்டே இருக்கும். இது இந்த யோகத்தில் பிறந்தவர்களுக்கே ஏற்படக்கூடிய ஒரு அதிர்ஷ்ட அமைப்பாகும். சூரியன் மற்றும் சந்திரன் இந்த யோகம் ஏற்படுவதற்கு காரணாமாக இருப்பதால் இவர்களுக்கு நல்ல உடல் மற்றும் மனவலிமை, சிறந்த சிந்தனைத் திறனும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
எந்த சித்தர் எத்தனை யுகம் வாழ்ந்தார் தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஜாதகம் சார்ந்த தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.