சாதம் வடிப்பதற்கு முன்னர் அரிசியை பயன்படுத்துவதில் இதுபோன்ற தவறுகளை தெரியாமல் கூட செய்து விடாதீர்கள். நிச்சயம் தரித்திரம் உண்டாகும்

annapoorani-rice
- Advertisement -

அனைவரது வீட்டிலும் அரிசியை பூஜை அறையில் வைத்து அன்னபூரணி தாயாக எண்ணி வழிபடுகிறோம். இப்படி புனிதமான அரிசியை கையாளும் பொழுது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். இதனை தப்பித் தவறியும் தவறுதலாக உபயோகப் படுத்தினால் தீராத கெடுதல்கள் நம்மை வந்து சேரும். அது மட்டுமல்லாமல் கெடுதல்களை தரவல்ல அசுப தேவதை நம் வீடு தேடி வந்து விடுவாள். பிறகு வாழ்க்கையில் முன்னேறுவே முடியாத அளவிற்கு தீராத துயரங்கள் சூழ்ந்து கொள்ளும். வசதியாக வாழ்வதற்க்கு பணம் இல்லை என்றாலும், மூன்று வேளை உணவு உண்டு உயிர் வாழ அரிசி நிச்சயம் தேவை. இந்த அரிசி எப்பொழுதும் நமது வீட்டில் குறையாமல் இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இவ்வாறு நமது அதிர்ஷ்டத்தை நிர்ணயிக்கும் அரிசியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

அரிசி அளக்க பயன்படுத்தும் உழக்கை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அரிசியை அளக்கும் பொழுது அன்னபூரணி தாயாரை மனதில் நினைத்துக் கொண்டு அளக்க வேண்டும். பின்னர் அரிசி அளக்கும் உழக்கை வாரம் தோறும் சுத்தம் செய்து, மஞ்சள் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் வெள்ளிக்கிழமை அன்று அதில் அரிசியைக் முழுவதுமாக நிரப்பி, பூஜை அறையில் வைத்து, பூஜை செய்வது மிகவும் விசேஷமான பலனைத் தருகிறது. அதேபோல் அரிசியை கொட்டி வைக்கும் டாம் அல்லது பாத்திரத்தை உயரத்தில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. அதனை சற்று தாழ்வான இடத்தில் தான் வைக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் அரிசியை அளக்கும் பொழுது நாம் குனிந்து தான் எடுக்க வேண்டும். இதனை அளந்து ஒரு பாத்திரத்தில் எடுக்கும் பொழுது அரிசி கீழே விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு அரிசியை கீழே சிதற விடுகிறோமோ அந்த அளவிற்கு குடும்பத்தில் கஷ்டம் உண்டாகும். அரிசியை ஊற வைத்து கழுவிய பின்னர் தண்ணீரை வடிகட்டும் பொழுது அரிசி தண்ணீரோடு சேர்ந்து கீழே சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக அரிசியை ஊற வைத்த பின்னர் அதனை எடுத்து வாயில் போட்டு சாப்பிட கூடாது, இவ்வாறு செய்வது தரிதிரத்தை கொண்டு வருகிறது. அதேபோல் அரிசிப் பானையில் உலை கொதித்ததும் போடப்படும் அரிசி சற்று நேரத்தில் நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். ஏனென்றால் இவை நன்றாக கொதித்ததும் அரிசி அனைத்தும் வெளியே சிதற ஆரம்பிக்கும்.

அடுத்ததாக சாதம் வடிக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வடிக்கின்ற நீரின் வழியாக சாதம் கீழே செல்ல கூடாது. அது மட்டுமல்லாமல் சில வீடுகளில் சாதம் தீய்ந்து விடுகின்ற அளவிற்கு அதனை கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இவ்வாறு அடி பிடிப்பது போல் சாதம் வடிப்பதால் குடும்பத்தில் தீராத துயரங்கள் தான் வந்து கொண்டே இருக்கும். எனவே இவ்வாறான தவறுகளை இனிமேல் செய்யாமல் கவனமாக செயல்படுங்கள்.

- Advertisement -