- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஉங்களுக்கு வரக்கூடிய ஆபத்துகளை தவிர்த்து வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருகின்ற இந்த உயிரினங்களை வீட்டில் வளர்ப்பதன்...

உங்களுக்கு வரக்கூடிய ஆபத்துகளை தவிர்த்து வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருகின்ற இந்த உயிரினங்களை வீட்டில் வளர்ப்பதன் மூலம் சிறந்த பலன்களை பெற முடியும்

- Advertisement -

ஒருசிலருக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். ஒரு சிலருக்கு இது போன்ற நாய், பூனை, பறவை என்றாலே சற்றும் பிடிக்காது. ஆனால் வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதன் மூலம் ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல் பல வித நன்மைகளும் இருக்கின்றன. இப்பொழுதெல்லாம் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகின்ற பெற்றோர்கள் தான் அதிகம். அப்படி இவர்கள் வேலைக்கு செல்லும் பொழுது வீட்டை பாதுகாக்கவும், குழந்தைகள் தனிமையில் இல்லாமல் இருக்கவும் ஏதாவது ஒரு செல்லப் பிராணியை வீட்டில் வளர்ப்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. குழந்தைகளும் தனிமையை உணராமல் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள். அப்படி ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அதிர்ஷ்டம் தரக்கூடிய உயிரினங்களைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

fear-pei-kanavu

ஆன்மீக ரீதியாக செல்லப் பிராணிகளை வளர்க்க வேண்டிய அவசியம் என்னவென்றால் நமது வீட்டிற்கு வரக் கூடிய பொறாமை, கண் திருஷ்டி போன்றவற்றினால் ஏற்படக்கூடிய எதிர்மறை அதிர்வுகள் அனைத்தையும் இவைகள் முன்கூட்டியே அறிந்து கொண்டு அவற்றினால் வரும் பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. அதுமட்டுமல்லாமல் நம்மீது பொறாமை கொண்டு செய்யும் ஏவல், செய்வினை போன்றவற்றை இந்தப் பிராணிகள் பலன் இல்லாமல் செய்கின்றன.

- Advertisement -

அவ்வாறு அனைவரது வீட்டிலும் வளர்க்க வேண்டிய ஒன்று பறவைகள். இந்தப் பறவைகளின் சத்தம் மகாலட்சுமி தேவியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. பறவைகளின் சத்தம் மற்றும் நமது வீடுகளில் கேட்டுக்கொண்டிருந்தால் மகாலட்சுமி தானாக நமது வீடு தேடி வந்து விடுவார்கள். பறவைகளை வாங்கி வந்து கூண்டில் அடைத்து தான் வளர்க்க வேண்டும் என்ற அவசியம் ஒன்றும் கிடையாது. அவைகளுக்கு தண்ணீர் வைப்பது, சாப்பிட உணவு வைப்பது, சிறிய கூடுகள் கட்டி வைப்பது போன்ற செயல்களை செய்தாலே அவை நமது வீடு தேடி வந்துவிடும். இதன் மூலம் லட்சுமி கடாட்சமும் நமது வீட்டில் நிறைந்திருக்கும்.

bird-in-hand

அடுத்ததாக செல்லப்பிராணியான நாய்களை வீட்டில் வளர்ப்பதன் மூலம் அவை நமது வீட்டை பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் எதிரிகள் நமது வீட்டை நெருங்கி வந்தாலும் அவை உடனே அதனை கண்டுபிடித்து விடும். தனியாக இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பெரிய பாதுகாப்பாக இந்த நாய்கள் இருக்கின்றன. இந்த நாய்கள் பைரவரின் வாகனம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பலரும் பைரவர் என்று நாய்களை வணங்குவதை பார்த்திருப்போம். இப்படி பைரவரின் வாகனமாக நாய்கள் எப்பொழுதும் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் கொடுக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கொடிய கண் திருஷ்டியில் இருந்தும் நம்மை பாதுகாக்கின்றன.

- Advertisement -

அடுத்ததாக முருகப்பெருமானின் வெற்றி சின்னமாக பார்க்கப்படும் கொடியில் இருக்கும் சேவல். சேவலை வீட்டில் வளர்ப்பதன் மூலம் அரசியல் சம்பந்தமான காரியங்களில் வெற்றி கிடைக்கும். மிகுந்த லாபம் கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும்.

seval

அடுத்ததாக மீன்களை வீட்டில் வளர்ப்பதன் மூலம் செல்வங்களை கொடுக்கின்றன. அதிர்ஷ்டம் நிறைந்து காணப்படும். நமக்கு வரக்கூடிய ஆபத்துகளை முதலில் எதிர்த்துப் போராடி தனது உயிரையும் கொடுக்கின்ற திறன் படைத்தவை. இப்படி நமக்கு வரக்கூடிய அனைத்து விதமான ஆபத்துகளிலிருந்தும் மீன்கள் நம்மை பாதுகாக்கின்றன. தீய சக்திகளை நம்மிடம் நெருங்கி விடாமல் நம்மைப் பாதுகாக்கிறது.

சற்று முன்