இந்த 1 செடியை உங்கள் வீட்டு வாசலில் இப்படி வைத்தாலே போதுமே! அதிர்ஷ்டமே ஆரவாரத்துடன் வந்து உங்கள் வீட்டு கதவை தட்டும். பணம் கோடி கோடியாக கொட்டும்.

thulasi

அதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்ட வேண்டும் என்றால், பணம் கோடிகோடியாக கொட்ட வேண்டும் என்றால் எப்போதும்போல சொல்வது தான் உங்களுடைய விடா முயற்சியை கைவிடாமல் சுறுசுறுப்பாக, எறும்பு போல உங்களது வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும். அதோடு சேர்த்து பரிகாரங்களை செய்தால் பலன் பல மடங்கு உங்களுக்கு கிடைக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமே கிடையாது. ஒரு செடியை நட்டு வைத்து விட்டால் கோடிகோடியாக பணம் கொட்டி விடும் என்று குருட்டு நம்பிக்கையோடு வாழ்ந்தால், அந்த குபேரரே நினைத்தாலும் உங்களை கோடீஸ்வரராக மாற்ற முடியாது. ஆனால் அந்த மரத்தை நட்டு வைத்ததன் பலன், இந்த உலகத்துக்கு நிச்சயமாக உண்டு.

madhulai 5

சரி, இந்த பதிவின் மூலம் 2 நல்லவிதமான குறிப்புகளை நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒன்று, சில பேரது வீட்டில் எத்தனை முறைதான் துளசி செடியை வாங்கி வந்து, வைத்தாலும் அது செழிப்பாக வளராது. அதை எந்த திசையில் எப்படி வைத்தால் செழிப்பாக வளரும், நம் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும், என்பதைப் பற்றியும், இரண்டாவதாக வீட்டின் வாசலில் எந்த செடியை வைத்தால் அதிர்ஷ்டம் நமக்கு அடித்துக் கொண்டு ஓடி வரும் என்பதை பற்றியும் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உங்களுடைய வீடு முன் வாசல் பக்கம், வடகிழக்கு பகுதியில், கொஞ்சம் உயர்வான இடத்தில் துளசி செடியை வளர்த்து வந்தால் அதனுடைய சக்தி மிகவும் அதிகமாகவே இருக்கும். அதாவது துளசி மாடத்தை உங்களால் அமைக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. துளசிச் செடியை தொட்டியில் வளர்த்து வந்தாலும் பரவாயில்லை. ஒரு மர நாற்காலியின் மேலாவது அந்த துளசி தொட்டியை கொஞ்சம் உயரமான பகுதியில் வைத்து கொள்ளுங்கள். தினமும் தண்ணீர் ஊற்றி அந்த இடத்தில் துளசி செடியை வளர்த்து வந்தால், வீட்டில் செல்வம் கடாட்சம் நிலைத்திருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதோடு அந்த துளசிச் செடியும் செழிப்பாக வளரும்.

maruthani-lakshmi

இதோடு மட்டுமல்லாமல் வீட்டின் முன்பக்கத்தில் மருதாணி செடி மாதுளம் செடி வளர்த்தால் மிகவும் நல்லது. இது நம்மில் நிறைய பேருக்கு தெரியும். இதோடு சேர்த்து இட்லி பூ செடி, சிவப்பு நிறத்தில் பூக்கக்கூடிய இட்லி பூச்செடியை வீட்டு வாசலில் அதுவும் குறிப்பாக மருதானி செடிக்கு அருகிலேயோ மாதுளம் செடிக்கு அருகிலோ இந்த இட்லி பூ செடியை வளர்த்து வந்தால் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்கள் வீட்டுக்குள் நுழைவதற்கு இந்த செடி நிச்சயமாக வழிவகுக்கும்.

இதற்கும் ஒரு காரணம் உண்டு. மருதாணி மகாலட்சுமியின் அம்சம் கொண்டது. துளசிச்செடி மகாலட்சுமியின் அம்சம் கொண்டது.  மாதுளைப்பழ செடியும் மகாலட்சுமியின் அம்சம் கொண்டது. இந்த செடிகளுடன் விஷ்ணு அம்சம் என்று சொல்லப்படும், விஷ்ணு செடி என்று சொல்லப்படும் இந்த இட்லி பூ செடியையும் வைத்து தான் பாருங்களேன்! நிச்சயமாக மகாலட்சுமி மனம் மகிழ்ந்து, உங்களுக்கு நிறைய செல்வங்களை அள்ளி கொடுப்பாள் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

idli-poo

மறக்காதீங்க! உங்களுடைய முயற்சிகளில் வெற்றி அடைய முன்னேற்றம் அடைய உங்களுடைய துரதிஸ்டம் அதிர்ஷ்டமாக மாற இந்த செடி வழிவகுக்குமே தவிர எதுவுமே செய்யாமல் சும்மாவே இருந்தால் கையில் கோடிகோடியாக பணம் கொட்டுவதற்கு வாய்ப்பே கிடையாது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.