அதிர்ஷ்டம் உங்களை தேடிவர, உங்கள் ராசிப்படி எந்த தெய்வத்தை எந்த கிழமையில், எப்படி வழிபாடு செய்வது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

astro-cash

பொதுப்படையாக நமக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய பொருட்கள் நிறைய இருக்கலாம். இருப்பினும் நம்முடைய ராசிப்படி, நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுப்படையாக சில வழிபாட்டு முறைகளை செய்வதன் மூலம் நமக்குக் கிடைக்ககூடிய பலன் முக்கால்வாசி என்றால், அவரவருடைய ராசிப்படி இறை வழிபாட்டை முறையாக செய்து வந்தோமே ஆனால் அதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன் முழுமையாக இருக்கும். நீங்கள் எந்த ராசியில் பிறந்தவர்கள்? உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய அந்த வழிபாட்டு முறைகள் தான் என்னென்ன? தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

praying-god1

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு முருகர் வழிபாடு பல நன்மைகளை கொடுக்கும். குறிப்பாக செவ்வாய் கிழமை அன்று முருகன் கோவிலுக்கு சென்று முருகரை வழிபாடு செய்து வந்தாலே போதும். வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் படிப்படியாக குறையத் தொடங்கி விடும். முடிந்தால் ஒரு சிறிய வேல் வாங்கி உங்கள் பர்ஸிலோ உங்கள் பையிலோ வைத்துக் கொள்ளலாம்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்கள் தினம்தோறும் அம்மன் வழிபாடு செய்து வரவேண்டும். பெண் தெய்வங்களை மனதார நினைத்து வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதோடு மட்டுமல்லாமல் பெண்களை மதிப்போடு நடத்த வேண்டும். எந்த பெண்களையும் உங்கள் வாயால் இழிவாக பேசக்கூடாது. பெண்களை நீங்கள் கடவுளாக மதித்தாலே போதும். நீங்கள் பெண்களாக இருந்தாலுமே பெண்களை திட்டக்கூடாது.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்கள் புதன் கிழமைகளில் பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். உங்களால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். இன்றைய சூழ்நிலையில் நிறைய பேர் ஒரு வேளை கூட சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு புதன்கிழமை அன்று ஒரு வேளையாவது வயிறார சாப்பாடு வாங்கி கொடுப்பது நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்கள் எந்த ஒரு முக்கியமான காரியங்களையும் மாலை நேரத்தில் செய்ய வேண்டும். மாலை நேரத்தில் அவர்கள் எதை செய்தாலும் அவர்களுக்கு அது வெற்றி தரும். பௌர்ணமி அன்று முழு நிலவு தரிசனம் செய்ய வேண்டும். அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் நீங்கள் தொடங்கும் காரியம் அபரிவிதமான வெற்றியை அடையும்.

- Advertisement -

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்கள் எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கோபப்பட தான் செய்வார்கள். ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய வழிபாடு செய்வது மிகவும் நல்லது. அதோடு மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இறைவழிபாடு செய்து உங்கள் வேண்டுதலை வைக்க வேண்டும்.  இப்படி செய்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்கள் புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் பெருமாள் வழிபாடு செய்ய வேண்டும். இதோடு சேர்த்து புதன்கிழமை அன்று பச்சை பயிறை நன்றாக ஊறவைத்து பசுமாட்டிற்கு சாப்பிட கொடுக்கலாம். பச்சைப்பயிறு சுண்டல் செய்து நீங்களும் சாப்பிடலாம். புதன்கிழமை கன்னி ராசிக்காரர்கள் பச்சை துணியை அணிந்து கொண்டு, எந்த வேலையை தொடங்கினாலும் அது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

துலாம்:
Libra zodiac sign
வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். சிறிதளவு மொச்சையை பூஜை அறையில் தரையில் பரப்பி வைத்து, அதன் மேல் ஒரு அகல்விளக்கு வைத்து, நல்லெண்ணை தீபம் ஏற்றி எந்த வேண்டுதலை வைத்தாலும் அது உடனடியாக பலிக்கும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை மாலை துர்க்கை வழிபாடு செய்வது நன்மை தரும். வீட்டில் செவ்வாய்க்கிழமை சிறிதளவு துவரம் பருப்பை தரையின் மீது பரப்பி, அதன் மேல் மண் அகல் வைத்து, நல்லெண்ணை ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு கருப்பு கொண்டை கடலை மிகவும் நன்மையைக் கொடுக்கக் கூடியதாக அமையும். வியாழக்கிழமை குரு வழிபாடு நன்மையை தரும். உங்களால் முடிந்தவரை கருப்பு கொண்டைக்கடலையை தானமாக கொடுங்கள். வியாழக்கிழமை கொண்டைக்கடலையில் சுண்டல் செய்து குரு பகவானுக்கு நிவேதனம் செய்து, கோவிலுக்கு வரும் குழந்தைகள் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் கருப்பு உளுந்து, கருப்பு எள்ளு தானம் கொடுக்க வேண்டும். இந்த இரண்டு பொருட்களையும் கலந்து ஒரு கிண்ணத்தில் வைத்து இறைவனின் முன்பு பிரார்த்தனை செய்து கொண்டு, அதன் பின்பு இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக பசுமாட்டுக்கு கொடுத்து விடுவது நன்மை தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்கள் அனாவசியமாக யாரிடமும் சண்டை சச்சரவுக்கு செல்லாமல் இருக்க வேண்டும். குறிப்பாக சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்யவேண்டும். சனிக்கிழமை அன்று உங்களை யாரேனும் சண்டைக்கு இழுத்தால் கூட, அன்றைய நாள் நீங்கள் அமைதியாக இருந்தாலே போதும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய்க்கிழமை அதிகம் நன்மை தரக்கூடிய நாளாக இருக்கும்‌. செவ்வாய்க்கிழமை அன்று மஞ்சள் நிற ஆடையை உடுத்திக் கொள்வது அதிகப்படியான நன்மையை கொடுக்கும். இறைவனுக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய பூக்களை வாங்கி கொடுத்து வேண்டுதலை வைத்தால் நிச்சயம் வேண்டுதல் உடனே நிறைவேறும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். ஐயப்பன், முருகன், விநாயகர் எந்த தெய்வத்தை வேண்டுமென்றாலும் வழிபாடு செய்யலாம்.