நீங்கள் முகம் பார்க்கக்கூடிய கண்ணாடியை உங்களுடைய வீட்டில் இப்படி வைத்தால், அதிர்ஷ்டமும் சந்தோஷமும், பணமும் பொங்கி வழிந்து கொண்டே இருக்கும்.

தினம்தோறும் நம் முகத்தைப் பார்க்கக் கூடிய கண்ணாடியை நம்முடைய முன்னோர்கள் கடவுளாக நினைத்து வழிபட்டு வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அந்த காலத்தில் எல்லாம், எல்லார் வீட்டு பூஜை அறையிலும் கட்டாயம் கண்ணாடி இருக்கும். முகம் தெரியாத மறைந்த முன்னோர்களை, கண்ணாடியின் மூலம் தான் அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள், வழிபட்டு வந்துள்ளார்கள். அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொண்டது நம் வீட்டில் இருக்கும் கண்ணாடி. நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் அதை அப்படியே மீண்டும் பிரதிபலிக்கக் கூடிய தன்மை இந்த கண்ணாடிக்கு உண்டு. இந்த கண்ணாடியை நம் வீட்டில் எப்படி வைத்தால் அதிர்ஷ்டம் பொங்கி வழியும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

wall mirror

நம் வீட்டு வாசற்படிக்கு உள்ளே நுழைந்ததும், நம் வீட்டிற்குள் நுழைபவர்கள், முதலில் பார்க்கும்படி ஒரு பெரிய அளவிலான கண்ணாடியை வைக்க வேண்டும். குறிப்பாக அந்த கண்ணாடியில் சிவப்பு நிற குங்குமத்தை வைத்து, ‘ஸ்வஸ்திக் சின்னம்’ அல்லது ‘ஓம்’ என்ற எழுத்தை எழுதி வைப்பது நம் வீட்டிற்கு பலவகையான நன்மையை கொடுக்கும்.

அதாவது கண்ணாடி எப்படி நல்லதை ஏற்றுக் கொள்கிறதோ, அதே போலத்தான், எதிர்மறை ஆற்றலையும், கெட்டத்தையும் ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இப்படியாக, நம் வீட்டிற்குள் நுழைபவர்களிடமிருந்து, ஈருக்கும் கெட்ட ஆற்றலை கூட, நல்ல ஆற்றலாக மாற்றக் கூடிய சக்தி அந்த ஸ்வஸ்திக் சின்னத்திற்க்கும், ஓம் என்றும் எழுத்திற்க்கும் உண்டு.

oom

ஆகவே, உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய கண்ணாடியில் சிவப்பு நிற குங்குமத்தை தண்ணீரில் குழைத்து, இப்படி எழுதி வைத்து பாருங்கள். நடக்கும் மாற்றத்தை. (அதாவது நில வாசற்படிக்கு எதிரே மாட்டியிருக்கும் கண்ணாடியில் எழுத வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டிற்குள் நுழைபவர்கள் முதலில் இந்த கண்ணாடியை பார்க்கும்படி கண்ணாடியை அமைக்க வேண்டும்.)

- Advertisement -

அடுத்தபடியாக சமையலறையில் கட்டாயம் ஒரு கண்ணாடி இருக்க வேண்டும். அதுவும் உங்கள் வீட்டில் ஒரு சிறிய பாத்திரத்தில் நிரம்ப கல் உப்பை போட்டு விட்டு, அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, அந்த கிண்ணம் ஒரு கண்ணாடியில் பிரதிபலிக்கும் படி வைத்து விட்டால், உங்கள் சமையலறையில் வாழ்நாள் முழுவதும் அரிசி பருப்பு தானியத்திற்கு பஞ்சமே இருக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. உப்பில் இருக்கும் நேர்மறை ஆற்றலும், நாணயத்தில் இருக்கும் மகாலட்சுமியின் ஆற்றலும், அந்தக் கண்ணாடி உள்வாங்கி, உங்களுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கும்.

swastik symbol benefits tamil

இதன் மூலம் மீண்டும் மீண்டும் உங்களுடைய சமையலறையில் பொருட்கள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் உங்களுடைய வருமானத்திற்கும் எந்த குறைவும் வராது. உங்கள் பரம்பரைக்கே சாப்பாட்டிற்கு கஷ்டம் வராது. எந்த ஒரு வீட்டில் சமையலறையில் இருக்கும் பொருட்கள் அல்ல சுரந்துகொண்டே இருக்கின்றதோ, அந்த வீட்டில் நிச்சயம் அன்னலட்சுமி நிரந்தரமாக இருப்பார். எந்த வீட்டில் அன்ன லட்சுமி நிரந்தரமாக குடிக்கொண்டு விட்டாலும், அந்த வீட்டில் பண கஷ்டம் வருவதற்கு வாய்ப்பே இல்லை.

mirro

இப்படியாக இந்த இரண்டு சின்ன சின்ன மாற்றங்களை உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து பாருங்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு. அதனால் பணமழை பொழியும், சந்தோஷம் பெருகும். வீட்டில் நிம்மதி நிலைத்திருக்கும். உங்களுடைய சந்ததிகள் நலமாக வாழ்வதற்கு நீங்கள் செய்யக்கூடிய சின்ன பரிகாரங்களில் இதுவும் ஒன்று என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.