தவறியும் இந்த ஒரு செடியை மட்டும் இவ்வாறு வைத்துவிடாதீர்கள். உங்களுக்கு வரப்போகும் அதிர்ஷ்டத்தையே இது தவிர்த்து விடும்

alo
- Advertisement -

கண்திருஷ்டி என்ற வார்த்தையை பலரது சொல்ல கேட்டிருப்போம். உடல்நிலை சரி இல்லாமல் போவதற்கும், வீட்டில் எப்பொழுதும் பிரச்சனை உண்டாகி கொண்டிருப்பதற்கும், தொழில் சரியாக போகவில்லை என்றாலும், அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனை இவ்வாறு வரக்கூடிய அனைத்து இன்னல்களுக்கும் காரணம் என்னவென்று கேட்டால் உடனே அவர் கூறும் பதில் என் மீது இருக்கும் கண் திருஷ்டியால் தான் இவ்வாறெல்லாம் நடக்கிறது என பதில் கூறுவார்கள். அவ்வாறு இன்றைய காலத்தில் ஒருவர் மீது ஒருவர் காரணமே இல்லாமல் பொறாமை படுவதும், குறை கூறுவதும் வழக்கமாகிவிட்டது. இவ்வாறான கண் திருஷ்டியை அகற்றுவதற்காக ஒரு சிலர் தங்களது வீடுகளில் கற்றாழை செடிகளை வாசலில் வைத்திருப்பார்கள். ஆனால் இந்த செடியை வளர்ப்பதற்கென்று தகுந்த முறை இருக்கிறது. அப்படி இல்லாமல் நாம் செய்யும் தவறுகளால் பாதிப்புகள் தான் அதிகமாகுமே தவிர நன்மை ஏதும் நடக்க போவதில்லை. எனவே இந்த கற்றாழைச் செடியை எவ்வாறு முறையாக வளர்த்திட வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kan

கற்றாழை:
கற்றாழைக்கு குமரிப் பெண் என்ற சிறப்புப் பெயரும் இருக்கிறது. குமரி என்றால் அழகான, இளமையான, அழியாதது என்றும் பொருள் படும். இந்த கற்றாழைச் செடி மிகவும் புனிதமானதாகவும், பொக்கிஷமானதாகவும் சித்தர்களால் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு புனித தன்மை மிக்க இந்த கற்றாழைச் செடியை பலரது வீடுகளிலும் ஏதேனும் உடைந்த பாத்திரம் அல்லது தேவை இல்லாத பிளாஸ்டிக் டப்பா போன்ற பொருட்களில் வைத்து தான் வளர்த்து வருவார்கள்.

- Advertisement -

அவ்வாறு இல்லாமல் ஒரு சில வீடுகளில் கற்றாழையை நிலைவாசலின் வெளியே தலைகீழாக கட்டி தொங்க விட்டிருப்பார்கள். இவ்வாறு வைத்திருப்பது ஏன் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இருக்காது. ஒரு சிலர் மற்றவர்கள் செய்வதைப் பார்த்து செய்வார்கள். அல்லது சிலர் திருஷ்டிக்காக வைத்திருக்கிறோம் என்றும் கூறுவார்கள். ஆனால் முடிந்தவரை கற்றாழையை இவ்வாறு கட்டித் தொங்க விடுவது என்பதை தவிர்க்க வேண்டும்.

kathalai

ஏனென்றால் கற்றாழை மிகவும் புனிதத்தன்மை உடையது. அதனை வீட்டின் வாசலில் ஒரு அழகான தொட்டியில் வைத்துதான் வளர்க்கவேண்டும். இதற்கு காரணம் வீட்டின் வாசலில் வைக்கும் கற்றாழை நமது வீட்டிற்குள் வரக்கூடிய மகாலட்சுமி தேவியையும், சுப தேவதைகளையும் வரவேற்கும் வண்ணம் இருக்கிறது. இந்த ஒரு முக்கிய காரணத்திற்காகவே கற்றாழை வீட்டின் வாசலில் வைத்து வளர்க்கப்படுகிறது. ஆனால் இதனைப் பற்றி அறியாதோர் பலர் அதனை திருஷ்டிக்காக பயன்படுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

அதிர்ஷ்ட தேவதைகளை வரவேற்பதுடன் மட்டுமல்லாமல் தீய சக்திகளை உள்ளே நுழையாமல் நமது வீட்டினை பாதுகாக்கிறது. கற்றாழைச் செடியை முறையான மரியாதையுடன் வளர்க்காமல் தவறு செய்தோம் என்றால் நமக்கு வரக்கூடிய அதிர்ஷ்டம் அனைத்தும் நம்மை விட்டு விலகிச் செல்லும்.

vijaya-lakshmi

கற்றாழைச் செடியை சரியாக பராமரிக்கவில்லை என்றாலும் வீட்டு வாசல் வரை வரும் அதிர்ஷ்ட தேவதைகளும், மகாலட்சுமி தேவியும் நமது வீட்டிற்குள் நுழையாமல் திரும்பிச் சென்று விடுவார்கள். பிறகு நமது வீட்டிற்குள் அசுப தேவதைகள் நுழைந்து விடுவார்கள். இதனால் தீராத துன்பங்கள் மட்டுமே நம்மை வந்தடையும்.

- Advertisement -