என்ன செய்தாலும் அதிஷ்டமே இல்லை என்ற கவலையா. அப்படி என்றால் எளிமையான இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். கை மேல் பலன் கிடைக்கும்

agathiyar

உங்களில் பல பேருக்கு நிறைய திறமைகள் இருக்கும். ஆனால் அத்திறமைகளை வெளிக்காட்ட எந்த ஒரு வாய்ப்பும் சந்தர்ப்ப சூழ்நிலையும் அமைந்திருக்காது. உங்களின் திறமைகளை வெளிக்காட்ட நீங்கள் பல வழிகளில் முயற்சி செய்தும் அது பலனளிக்காமல் போனதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பீர்கள். இதற்கு காரணம் உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் இருப்பதே ஆகும். ஒருவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் குப்பையில் இருப்பவர் கோபுரத்திற்கு கூட செல்வார், அதுவே அதிர்ஷ்டம் இல்லையென்றால் தொட்டது எதுவும் துலங்காமல் தெருக் கோடிக்கு வந்து விடுவார்.

oom

அப்படியான அதிர்ஷ்டத்தை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வர நீங்கள் பல தாந்திரீக வழிமுறைகளையும், பூஜைகளையும் செய்து பார்த்திருப்பீர்கள் அப்படி செய்தும் உங்களுக்கு அதிர்ஷ்டம் அமையவில்லை என்றால் இங்கே கூறியிருக்கும் மிக எளிமையான முறையை கடைபிடித்து உங்கள் வாழ்க்கைக்குள் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வாருங்கள்.

நம் உடலை சுத்தம் செய்ய வேண்டி நாம் அன்றாடம் காலையில் எழுந்ததும் செய்யும் ஒரு செயல் தான் குளியல். தினமும் அதிகாலையில் குளிப்பதால் நம் சோம்பலகள் அனைத்தும் நீங்கி உடலும் மனமும் புத்துணர்ச்சி அடையும். அப்படிப்பட்ட குளியலை ஒரு வகையான தியானம் என்றும் கூறலாம். இப்படி தினமும் நாம் செய்கின்ற செயலான குளியலுடன் தாந்த்ரீக முறைகளில் சொல்லியிருக்கும் சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கிரக நிலைகளின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதோடு நமக்கு அதிர்ஷ்டத்தையும் நம் வாழ்க்கைக்குள் கொண்டு வரலாம்.

இந்த தாந்த்ரீக குளியல் முறையை சாதாரணமாக நினைக்க வேண்டாம். செல்வ வளம் பெருக, தீய சக்திகள் அகல நேர்மறை எண்ணங்கள் உருவாக்க , நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் இதன் மூலம் நாம் பெறலாம். தாந்திரீக குளியல் முறையில் சகல சவுபாக்கியத்தையும் நாம் பெறலாம்.

- Advertisement -

குளியல் முறை என்பது ஒரு தியானம் என்று அறிந்ததால் தான் அகத்திய மகரிஷி எப்படி குளிக்க வேண்டும் என்ற சூட்சுமத்தை நமக்கு சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். நாம் அந்த குளியலுடன் தாந்திரீக வழியை தவறாமல் பின்பற்றி மகிழ்ச்சியாக வாழலாம். தாந்திரீக குளியல் முறையில் பல வகைகள் உள்ளன. ஆனால் நாம் எந்த காரணத்திற்காக குளியல் எடுக்கிறோம் என்பதை பொறுத்தே அதன் பலனும் முடிவு செய்யப்படுகிறது.

agathiyar

இந்த தாந்திரீக குளியல் முறையில் முக்கிய பங்கு வகிப்பது குளியல் பொடி தான். இதில் சொல்லப்பட்டிருக்கும் குளியல் பொடி அதிர்ஷ்டம் இல்லாதவர்க்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் ஒன்றாகும்.

குளியல் பொடிக்கு தேவையான பொருட்கள் சீயக்காய், வெட்டிவேர் மற்றும் ஜாதிக்காய். இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் மென்மையான பொடியாகவே கிடைக்கும். அதனை வாங்கி வந்து குளிக்கும் முன்பு மூன்றையும் ஒன்றாக கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி சாந்து போல குழைத்துக் கொள்ள வேண்டும். குளியலறையில் சென்றவுடன் கிழக்கு நோக்கி நின்று குழைத்து வைத்திருக்கும் அந்தக் கலவையை உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளிக்கவும். இப்படி செய்யும் போது கிழக்கு நோக்கி தான் நீங்கள் இருக்க வேண்டும். மேலும் சுடு தண்ணீரில் குளிக்கக் கூடாது கண்டிப்பாக பச்சை தண்ணீரில் தான் குளிக்க வேண்டும்.

bathing

இப்படி தினமும் இந்த வழிமுறையைப் பின்பற்றி வந்தால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருகுவதைக் கண்கூடாக பார்க்கலாம். இவைகள் சாதாரண மூலிகைகள் தானே என்று எண்ணி உதாசீனம் செய்யாமல் முயற்சித்து பாருங்கள். சில நாட்களில் வித்யாசம் தெரியும்.