இந்தக் குறிப்பிட்ட சாஸ்திர சம்பிரதாயங்களை சரியாக பின்பற்றினால் கோடீஸ்வர யோகம் தானாக உங்களைத் தேடி வரும்

yogam
- Advertisement -

ஏழையாக பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை சற்று முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல கடினமாக உழைத்து அவர்கள் இறுதிக்காலம் வரை கஷ்டப்பட்டு வாழ்ந்து இறந்தும் விடுகிறார்கள். இவ்வாறு கடின உழைப்பை கொடுத்தால் மட்டும் உயர்ந்த நிலைக்கு சென்று விடுவோம் என்று அர்த்தமில்லை. கடின உழைப்புடன் சேர்த்து கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டுமே நமக்கு நல்ல உயர்வு கிடைக்கும். அவ்வாறு நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த சில குறிப்பிட்ட சாஸ்திர சம்பிரதாயங்களை இப்போதைய தலைமுறையினர் பொருட்படுத்துவது என்பதே கிடையாது. ஆனால் அவர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னால் பலநூறு அர்த்தங்கள் இருக்கின்றன. அவ்வாறு நாமும் அந்த சம்பிரதாயங்களை சரியாக பின்பற்றி வந்தால் பணமும், பொருளும் நம்மைத் தேடி வரும் யோகம் உண்டாகும். எனவே நாம் பின்பற்ற வேண்டிய சாஸ்திர சம்பிரதாயங்களை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cash

தினமும் நாம் குளிக்கும் தண்ணீர் சலசலப்புடன், அலைமோதிக் கொண்டு இருக்கக் கூடாது. அடுத்ததாக தூங்குவதற்காக தலைக்கு வைக்கும் தலையணையை காலில் வைத்து தூங்கக் கூடாது.
அதுபோல சாப்பிடும் பொழுது நமது நிழல் சாப்பாட்டின் மீது விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் சாப்பிடும் போது விரல்களை தனியாக நீட்டிக்கொண்டடோ, உதறிக்கொண்டோ சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாதத்தையும் உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கூடாது.

- Advertisement -

அதுபோல சாப்பிட்டு முடித்தவுடன் கையையோ, தட்டையோ நக்கும் பழக்கம் கூடாது.
வாயில் கொப்பளிக்கும் நீரையோ, எச்சிலையோ வலது பக்கம் துப்பக்கூடாது. அன்னம், நெய், உப்பு ஆகிய மூன்றையும் கைகளால் பரிமாறக் கூடாது. ஆமணக்கு இலையிலும், பனை ஓலைகளிலும் பூக்களை வைத்து பூஜைக்கு பயன் படுத்த கூடாது.

food

இரவில் தயிர் சாதம் உண்ணுதல், தேங்கிய குட்டையில் நீர் பருகுதல் இது போன்ற பழக்கங்கள் ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை குறைக்கிறது. இரு கைகளால் தண்ணீரை அள்ளிக் குடிக்க கூடாது. அதற்கென்று இருக்கும் டம்ளர், அல்லது ஏதாவது பாத்திரத்தில் தான் குடிக்க வேண்டும்.

- Advertisement -

இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித் தயிர், கீரைகள், நெல்லிக்காய், வெங்காயம் போன்ற உணவுகளை இரவில் உண்ணக் கூடாது. வெள்ளிக்கிழமையில் கீரை கடைதல் என்பது கூடாது. முடிந்தவரை தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் இருக்க வேண்டும்.

murungai-keerai3

அதுபோல பொய் கூறுதல், புறம்பேசுதல், பிறரை வஞ்சகம் செய்தல், வீண் பழி போடுதல் போன்ற தீய எண்ணங்களை நெஞ்சத்தில் வைத்திருக்கக் கூடாது. வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்வது, ஏதேனும் பொருட்களை பிறருக்கு தானம் கொடுப்பது போன்ற செயல்களை செய்தல் கூடாது. இவ்வாறு செய்வதால் உங்கள் வீட்டிலுள்ள மகாலட்சுமியும் வெளியில் சென்று விடுவார்.

poramai

இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்து செயல்களையும் ஆராய்ச்சி செய்யாமல் நமக்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இவற்றை பின்பற்றி வாருங்கள். இந்தக் குறிப்புகளில் பலவித ஆன்மீக நன்மைகளும், அறிவியல் உண்மைகளும் இருக்கின்றன.

- Advertisement -