உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற இதை செய்யுங்கள் போதும்

ambal

அனைவருக்கும் சிறந்த உறவுகள், நட்புகள் சூழ்ந்த வாழ்க்கை அமைவது என்பது மிகவும் அதிசயமான ஒன்றாகவே இருக்கிறது. சிலர் தங்கள் வாழ்க்கையில் எத்தகைய கஷ்டங்களையும், சிரமங்களையும் அனுபவித்தாலும், எவரிடமும் எந்த உதவியும் கேட்டு வாழக் கூடாது என்கிற வைராக்கியம் கொண்டிருப்பார்கள். அப்படி பிறரின் தயவின்றி வாழவும், வாழ்வில் பல சிறப்பான நன்மைகளைப் பெறவும் மனம் ஒன்றிய தெய்வ வழிபாடு உதவுகிறது. அப்படி வாழ்வில் மேன்மையான பலன்களை பெறுவதற்கான ஒரே எளிய வழிபாட்டு முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

MathuraKaliamman

இறைவனை வழிபடுவதற்கு நாமசங்கீர்த்தனம், அலகு குத்துதல் போன்ற பல வகைகள் இருப்பதில் கோயிலை பிரதட்சணம் வந்து வழிபடும் ஒரு வழிபாட்டு முறையும் இருக்கிறது. ஆத்ம பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் அடிப்பிரதட்சணம் போன்ற பல பிரதட்சண வழிபாட்டு முறைகள் இருக்கிறது. இதில் அடிப்பிரதட்சணம் வழிபாட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

நமது எப்படிப்பட்ட கோரிக்கைகளும் நிறைவேற செய்வதற்கு மிகச் சிறந்த வழிபாட்டு முறையாக அடிப்பிரதட்சணம் வழிபாட்டு முறை இருக்கிறது. அடிப்பிரதட்சணம் வழிபாட்டை எல்லா கோயில்களிலும் செய்யலாம் என்றாலும் அம்பாள் கோயில்களில் இந்த வழிபாட்டு முறையை செய்வதே நல்லது. தினந்தோறும் அம்பாள் கோயிலுக்குச் சென்று உங்கள் மனதில் நியாயமான கோரிக்கை வைத்து அம்பாளை மனதார நினைத்து பிரதட்சணம் செய்வது மிகச் சிறந்தது.

தினமும் கோயிலுக்குச் சென்று அடிப்பிரதட்சணம் செய்து வழிபட முடியாதவர்கள், வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில் காலை அல்லது மாலை வேளைகளில் அம்பாள் கோயில்களில் 3, 9, 27, 108 ஆகிய எண்ணிக்கையில் அடிப்பிரதட்சிணம் வழிபாட்டு முறையை செய்யலாம்.

- Advertisement -

மேலும் இந்த அடிப்பிரதட்சணம் வழிபாட்டை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 11, 27, 48 வாரங்கள் செய்வது மிகவும் விசேஷமாகும். இந்த வகையில் திட சித்தத்துடன் அடிப்பிரதட்சணம் வழிபாட்டை செய்பவர்களுக்கு எக்காலத்திலும், எவரிடமும் உதவி கேட்டு வாழும் நிலை ஏற்படாது. செய்கின்ற அனைத்து செயல்களிலும் சிறப்பான வெற்றிகள் ஏற்படும். குடும்பத்தில் வளமையும், மகிழ்ச்சியும் பெருகும்.

இதையும் படிக்கலாமே:
நினைத்தது நிறைவேற செய்யும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Adi pradakshinam benefits in Tamil. It is also called as Adi pradakshinam valipadu in Tamil or Kovil valipadu muraigal in Tamil or Adi pradakshinam nanmaigal in Tamil or Veetil selva valam peruga in Tamil.