அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறதா? அப்படின்னா இந்த 3 பொருளை தலையை சுத்தி போடுங்க போதும்!

salt-cough-temple
- Advertisement -

ஒரு வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு சில சமயங்களில் உடல் நிலை சரியில்லாமல் போவதை பார்த்திருப்போம். அல்லது ஒருவருக்கே அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதையும் பார்த்திருப்போம். இப்படி குடும்பத்தில் தொடர்ந்து உடல்நிலை பாதிப்புகள் சிறிய அளவில் இருந்தாலும், பெரிய அளவில் ஆக இருந்தாலும் வந்து கொண்டே இருந்தால் அவர்களுக்கு இந்த எளிய பரிகாரம் மூலம் தீர்வு காண முடியும். அதைப் பற்றிய ஆன்மிகத் தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

tablets2

எப்போதாவது ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் போனால் பரவாயில்லை. மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஒரு குடும்பத்தில் தொடர்ந்து இது போல் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்க் கொண்டே இருந்தால் அங்கு ஆன்மீக பிரச்சனையும் இருக்கிறது என்பது அர்த்தமாகிறது. குலதெய்வ வழிபாட்டை மறந்தவர்கள், வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்றாதவர்கள், முன் ஜென்ம சாபம் உடையவர்கள் குடும்பத்தில் இது போல் அடிக்கடி நிகழ வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

குறிப்பாக குழந்தைகளுக்கு அடிக்கடி நோய்வாய்ப்படுதல் என்பது கட்டாயம் கவனிக்க தக்க ஒன்று. இது போன்ற குழந்தைகளை சிறிய பிரச்சனையாக இருக்கும் பொழுதே மருத்துவரிடம் காண்பித்து அதற்கான தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரே பிரச்சனையால் தொடர்ந்து அவதிப்படுபவர்கள் அதற்குரிய நிரந்தர தீர்வை காண வேண்டும். இதற்காக சற்று மெனக்கெட வேண்டியதாக இருக்கும். எனினும் நம்பிக்கையுடன் முயற்சித்தால் நிச்சயம் தீர்வு கிடைக்கும்.

salt-with-pepper

உப்பு, மிளகு, சீரகம் இந்த மூன்றுக்கும் நோயை விரட்டி அடிக்க கூடிய சக்தி உண்டு. கோவில்களில் நோய் தீர்க்க வேண்டியவர்கள் உப்பு மற்றும் மிளகை சம அளவு எடுத்து தானம் செய்வார்கள். தீராத நோய் தீர்க்கும் இந்த அற்புதத்தை கோவில்களில் அர்ச்சகரிடம் கேட்டு தெளிவு பெற்று பின்னர் நீங்கள் செய்யலாம். அதே போல வீட்டில் செய்யக்கூடிய எளிய பரிகாரத்தையும் பார்ப்போம். பரிகாரத்திற்கு உரியவர்களை நடு ஹாலில் கிழக்குப் பார்த்தபடி அமர்த்தப்பட வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் மூத்த பெண்கள் அல்லது ஆண்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் கைகளில் ஜீரகம், உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கால் டீஸ்பூன் அளவிற்கு கொஞ்சமாக எடுத்தால் போதும், நிறைய எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வலது புறத்திலிருந்து இடது புறத்தில் மும்முறையும், இடது புறத்தில் இருந்து வலது புறத்திற்கு மூன்று முறையும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சுற்ற வேண்டும். பின்னர் தலை முதல் கால் வரை நேராக மூன்று முறை திருஷ்டி கழிக்க வேண்டும். பின்னர் அவர்களை மூன்று முறை தூ தூ என துப்ப சொல்லிவிட்டு அதனை கொண்டு போய் ஓடும் தண்ணீரில் கரைத்து விட வேண்டும். பின்னர் அதனை கால்படாத ஏதாவது ஒரு இடத்தில் ஊற்றி விடுங்கள்.

milagu-jeeragam

மிளகு, சீரகம், கல் உப்பு இந்த மூன்றையும் வைத்து இவ்வாறு திருஷ்டி கழிக்க அடிக்கடி நோய்வாய்ப் படுவதிலிருந்து நிவாரணம் காண முடியும். இதனை நீங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் செய்வது சிறப்பு. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை அன்றும் இதனை தொடர்ந்து செய்து வாருங்கள், உங்களுக்கு நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். அதே போல கோவில்களுக்கு உப்பு மற்றும் மிளகாய் தானம் செய்வதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனை தீர்ந்த பிறகு வேண்டிய வேண்டுதலை நிறைவேற்றி விடுங்கள். மேலும் கோவில்களுக்கு விளக்கேற்ற நெய் வாங்கி தானம் செய்யுங்கள். இதனால் அனைத்து பாவங்களும், தோஷங்களும் குறையும், இந்த பிரச்சனையும் விரைவாக தீரும்.

- Advertisement -